Featured post

Anali Movie Review

Anali Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம anali  படத்தோட review அ தான் பாக்க போறோம். சக்தி வாசு தேவன், சிந்தியா லூர்டே, குமாரவேல், இனியா...

Friday, 1 April 2022

நம்ம வாழ்க்கை.. சும்மா ஏதோ ஒரு பணக்காரனா வாழ்ந்திட்டு


‘நம்ம வாழ்க்கை.. சும்மா ஏதோ ஒரு பணக்காரனா வாழ்ந்திட்டு செத்துடணுங்கிற வாழ்க்கையா இருக்கக்கூடாது. 

ஒரு வாழ்க்கை. வரலாறா வாழ்ந்திடனும்’.


- காந்தி மகான்.


       வாழ்க்கையில் நாம் விரும்பி செய்த ஒரு விஷயம் வெற்றியை தொடும்போது கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.


மகானில் நடித்த ஒவ்வொரு நொடியும் என் மனதில் இன்றும் ஒரு ‘sweet’ கனவாய் நிற்கிறது. அதே மகான் நான்கு மொழிகளில் அனைவரும் கண்டு ரசித்த ஒரு பிரமாண்ட வெற்றி படம் என்று நினைக்கும்போது..  மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.


Social mediaவில் ரீல்ஸ், மீம்ஸ், டிவீட்ஸ் & மெஸெஜெஸ் வாயிலாக மகானை கொண்டாடிய அனைவரின் அன்பையும், ஆதரவையும் உணர்ந்தேன். இந்த அன்புதான் என்னை மென்மேலும் பாடுபட ஊக்குவிக்கிறது.  இதை என்றும் அன்புடனும், பணிவுடனும் நன்றி மறவாமல் நினைவில் கொள்வேன்.


அப்படியே ஒரு வியக்கத்தக்க கேன்வாசில் மகானை கொண்டு போய் நிறுத்திய கார்த்திக் சுப்புராஜின் கைவண்ணம், எனக்கு அன்பாய் வழங்கிய சுதந்திரம், சின்ன சின்ன விஷயங்களை ரசித்து வழி நடத்திய விதம்..  அழகு. நன்றிகள் பல்லாயிரம்.


 பாபிக்கு thanx.  நீ இல்லாமல் என் சத்யா சாத்தியமே இல்லை. சிறப்பாக நடிப்பது தனக்கொரு இயல்பான talentனு மீண்டும் சுட்டி காட்டிய சிம்ரனுக்கு thank you. 


த்ருவ்.  தனக்குள் இருக்கும் திறமையையும், தனித்துவத்தையும் வெளியே கொண்டுவந்து சவாலாக இமேஜ் தாண்டியதிற்கு.. hats-off மகனே.


வியர்வை, ரத்தம், (நிஜமான) கண்ணீர் சிந்தி மகானின் வெற்றிக்கு உழைத்த மகான் gangற்கு ஒரு பெரிய salute. எங்களுடன் ‘நீயா, நானா’ என்று வெறியோடு போட்டி போட்டு கலக்கிய சனா, ஷ்ரேயெஸ், தினேஷ்.. Rock On!


மகானை நிஜமாக்கிய தயாரிப்பாளருக்கும், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இல்லங்களிலும், உள்ளங்களிலும் கொண்டு சேர்த்த அமேசான் பிரைம் வீடியோவுக்கும் a big thank you.


No comments:

Post a Comment