Featured post

Sony Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on

 *Sony Entertainment India releases trailer of action-thriller, Sisu: Road to Revenge; releases on 21st November, 2025 in English, Hindi, Ta...

Sunday, 28 August 2022

செப்டம்பர் 2 முதல் தமிழகத்திலும் வெளியாகும் 'ஆகாச வீதிலு

 செப்டம்பர் 2 முதல் தமிழகத்திலும் வெளியாகும் 'ஆகாச வீதிலு'  ( Aakasa Veedhullo )


அறிமுக நடிகர் கௌதம் கிருஷ்ணா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஆகாச வீதிலு' (   Aakasa Veedhullo ) செப்டம்பர் இரண்டாம் தேதியன்று தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் வெளியாகிறது.












அறிமுக இயக்குநர் கௌதம் கிருஷ்ணா இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'ஆகாச வீதிலு'  ( Aakasa veedhullo movie) இதில் கௌதம் கிருஷ்ணா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பூஜிதா பொன்னாடா நடிக்கிறார். இவர்களுடன் சத்யம் ராஜேஷ், ஸ்ரீகாந்த் அய்யங்கார், தேவி பிரசாத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விஸ்வநாத் ரெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜுடா சாந்தி இசையமைத்திருக்கிறார். ட்ராமா ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜி.கே. ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் மனோஜ் ஆர்ட் கிரியேஷன்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் மனோஜ் ஜே. டி. மற்றும் டாக்டர் டி. ஜே. மணிகந்தா ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் செப்டம்பர் இரண்டாம்  தேதியன்று  தெலுங்கு மொழியில் தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் வெளியாகிறது. இதனை பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.


அறிமுக நாயகன் கௌதம் கிருஷ்ணா (Gautham Krishna) சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் மருத்துவ பட்ட படிப்பை படித்து வருகிறார் என்பதும், இவர் கதையின் நாயகனாக அறிமுகமாவதுடன் படத்தை இயக்கி இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.


இந்த திரைப்படத்தின் பாடல்கள் சித் ஸ்ரீராம் குரலில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருவதுடன், இந்தப் படத்தின் முன்னோட்டம் இணையத்தில் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.


மது, மாது, போதை என தன் இளமையை பொறுப்பில்லாமல் தட்டிக் கழிக்கும் நாயகனின் வாழ்க்கையில், காதலியாக ஒரு பெண் குறுக்கிடுகிறாள். அதன் பிறகு நாயகனின் வாழ்க்கை சரியான பாதையில் பயணித்ததா? இல்லையா? என்பதை இளைய தலைமுறையினர் ரசிக்கும் வகையிலான காதல் காட்சிகள், லிப்லாக் முத்த காட்சிகளுடன் தயாராகி இருக்கும் 'ஆகாச வீதிலு' ( Aakasa veedhullo movie) வெற்றி பெறும் என உறுதியாக கூறலாம்.


writer & Directed by Gautham Krishna

Producer -Shri Manoj J.D, Dr.D.J.Manikantha

Music - Judah Sandhu

Dop -Vishwanathan Reddy

Editor -Seshank

Stunts -Dragon Prakash

Singers - Sid sriram,Chinmayi Sripada,Rahul sipligunj,Bhairava,Dope Daddy

PRO -Sivakumar

No comments:

Post a Comment