Featured post

Mark Your Calendars: Prabhas starrer 'Kalki

 *Mark Your Calendars: Prabhas starrer 'Kalki 2898 AD' to hit theatres on 27th June 2024* This year's highly-anticipated sci-fi ...

Sunday 28 August 2022

கணம் படத்தில் எனக்கென்று தனியாக

 கணம் படத்தில் எனக்கென்று தனியாக கதை இருக்கிறது - நடிகர் சதிஷ்


தற்போது, இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறேன். ஆனால், இப்படத்தில் மூன்று பேரும் நாயகர்கள் மாதிரி தான் நடித்திருக்கிறோம். இந்த படத்தில் எனக்கு அம்மா இருக்கிறார். எனக்கென்று தனியாக கதை இருக்கிறது. எனக்கு இரண்டு நாயகிகள் இருக்கிறார்கள், இருவரும் புதுமுகம். என்னுடைய கல்யாணத்திற்கு பெண் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் தான் இந்த கதையைக் கேட்டேன். இந்த கதையைக் கேட்கும்போது என் வாழ்க்கையில் இருந்து எடுத்த மாதிரிதான் இருந்தது. இந்த படத்தில் பெண் தேடும் பாத்திரம், ஒரு கட்டத்தில் நான் இறந்த காலத்தில் சென்றே தேடிக் கொள்கிறேன் என்று செல்லும்படியாக இருக்கும்.




தமிழ், தெலுங்கு



இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுத்தோம். இன்று தமிழ் மொழிக்கான காட்சி எடுத்தால், அதே காட்சியை மறுநாள் தெலுங்கு மொழியில் எடுப்போம் என்றார்.



 என் அம்மாவை திரும்பி பார்க்க வேண்டும் என்று தான் இந்த கதையை எழுதினேன்; 

- இயக்குனர் ஸ்ரீகார்த்திக்


அம்மா சென்டிமெண்டிற்காக எழுதிய கதை என்றாலும், நான் எழுதும் போதே வாழ்க்கையில் இருக்கும் அனைத்து விஷயங்களும் இணைந்தே வந்தது. 

அம்மா கதாபாத்திரத்தை குறிப்பிட்டு எழுதாமல், எல்லாருக்கும் பொதுவான கதாபாத்திரமாக இருக்கும்படி தான் அமைத்திருக்கிறேன். 

எனது அம்மாவை திரும்பி பார்க்க வேண்டும் என்று இரண்டு வருடமாக எழுதினேன், எழுதும்போது அமலா மேடமை யோசித்துத் தான் எழுதினேன். அவரிடம் கதைகூறியதும் கதாபாத்திரத்துடன் இணைந்து விட்டார். எந்த கேள்வியும் கேட்காமல் உடனே ஒப்புக் கொண்டார். 30 வருடங்கள் கழித்து மீண்டும் அமலா மேடம் நடித்திருக்கிறார். இந்த படமும், அவரது கணவர் நாகார்ஜுனன் சார் படமும் ஒரே நாளில் வெளியாவது, எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.


இந்த படம் ஆரம்பித்து, முடியும் போது பார்வையாளர்களும் கதையுடன் பயணித்திருப்பார்கள். (Sci-fi) சை - ஃபை ஒருபுறமும், மூன்று நண்பர்களின் வாழ்க்கை ஒருபுறமும் சென்றுக் கொண்டிருக்கும். அந்த இரண்டையும் தனித்தனியாக கூறாமல், இரண்டையும் கலந்து இயக்கியிருக்கிறேன். படம் நன்றாகவும் வந்திருக்கிறது என்றார்.


ரமேஷ் திலக் மற்றும் சதீஷ் இருவரையும் நகைச்சுவை கதாபாத்திரமாக எழுதவில்லை. ஷரவானந்த், ரமேஷ் திலக் மற்றம் சதீஷ் மூவருக்குமே சமமான பாத்திரம், மூவருக்கும் பிரச்சனை இருக்கிறது, அதற்கான தீர்வும் இருக்கிறது. படம் பார்ப்பவர்களுக்கு அவர்களுடன் பயணிக்கு விதமாகத்தான் எழுதியிருக்கிறேன். ஷரவாவின் பாத்திரம், அனைவரையும் சம்பந்தப்படுத்தும். சிலருக்கு உடனே சம்பந்தப்படுத்தும், சிலருக்கு கடந்த காலத்தை சம்பந்தப்படுத்தும், சிலர் எதிர்காலத்தில் இப்படித்தான் நடக்கும் என்று நினைக்கும் விதமாக இருக்கும். சில காட்சிகளை டிவியில் பார்ப்பதற்கும், திரையில் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கும், அந்த வகையில் இந்த படம் திரையில் பார்க்கும்போது சிறப்பாக இருக்கும் என்றார்.

கணம் படத்தில் நாயகனுக்கு இணையாக நடிப்பதில் மகிழ்ச்சி - நடிகர் ரமேஷ் திலக்


(Sci-fi) டைம் டிராவல் போகும்போது நிகழ்கால கதையும் சேர்ந்தே பயணிக்கும் விதமாக இருக்கும். கதாநாயகன் ஷரவானந்துக்கு இணையாக எனது கதாபாத்திரமும் இருக்கும். இதை கொடுத்த இயக்குனர் ஸ்ரீ கார்த்திக்கும், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கும் நன்றி என்றார்.

No comments:

Post a Comment