Featured post

Nandamuri Balakrishna, Gopichand Malineni, Venkata Satish Kilaru, Vriddhi Cinemas’ Historical Epic

 Nandamuri Balakrishna, Gopichand Malineni, Venkata Satish Kilaru, Vriddhi Cinemas’ Historical Epic #NBK111 Launched Majestically* God of th...

Thursday, 1 September 2022

நடிகர் ரவி ராகுல் இயக்கும் "ரவாளி"

 நடிகர் ரவி ராகுல் இயக்கும் "ரவாளி"


ஆத்தா உன் கோவிலிலே, தமிழ் பொண்ணு, மிட்டா மிராசு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரவி ராகுல், சிவரத்தா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் "ரவாளி" படத்தை இயக்கியுள்ளார்.


ஆர்.சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, பாம்பே தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் நைரசா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜெயபிரகாஷ், ரியாஸ் கான், பப்லு, கஞ்சா கருப்பு, அப்புக்குட்டி, சுஜாதா, ஆத்மா ஆகியோர் நடித்துள்ளனர்.








ஏழை பையனை பணக்கார பெண் காதலிக்கிறாள். வீட்டில் எதிர்ப்பு வர, வெளிமாநிலம் இழுத்துச் சென்று, கோவிலில் திருமணம் செய்கிறாள். தாலி கட்டிய கையோடு வேலை தேடி வெளியே சென்ற காதலன் காணாமல் போகிறான். அவனை தேடுவது தான் மீதி கதை. 


கதை, திரைக்கதை எழுதி, ரவி ராகுல் இயக்கியுள்ளார். வினோத் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெய் ஆனந்த், ஏ.எஸ்.மைக்கேல் யாகப்பன் இருவரும் இணைந்து இசையமைத்து உள்ளனர். வளர் பாண்டியன் எடிட்டிங் செய்ய, இளைய கம்பன், கு.கார்த்திக் பாடல்கள் எழுத, சந்திரிகா நடனம் அமைத்துள்ளார். ஹரி முருகன் சண்டைக் காட்சிகளை தத்ரூபமாக அமைத்துள்ளார். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.


சிவரத்தா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் "ரவாளி" திரைப்படம் குற்றாலத்தில் தொடங்கி, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய ஊர்களில் படப்பிடிப்பு நடத்தி, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்கிறார் இயக்குனர் ரவி ராகுல்.


PRO_கோவிந்தராஜ்

No comments:

Post a Comment