Featured post

Regina Cassandra Champions Plastic-Free Oceans through Paddleboarding

 *Regina Cassandra Champions Plastic-Free Oceans through Paddleboarding!* With captivating performances as Rekha in Farzi and Mrinalini Sara...

Sunday 4 September 2022

சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 31 வது பட்டமளிப்பு விழாவில் இசையமைப்பாளர் யுவன் சங்கர்

 சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 31 வது பட்டமளிப்பு விழாவில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து 23 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம், 153 பி.எச்.டி உள்பட 2667 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. 


சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைகழகத்தின் 31வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் மரிய ஜான்சன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. 


இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக (DRDO) இந்திய இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், தற்போதைய இராணுவ மந்திரியின் அறிவியல் ஆலோசகருமானை டாக்டர்.சதீஷ் ரெட்டி பங்கேற்று பட்டங்களை வழங்கினார். 

உடன் பல்கலைகழகத்தின் துணைத் தலைவர்கள் மரிய பெர்னாட்டி அருள் செல்வன், அருள் செல்வன், மரியா கேத்தரின் ஜெயப் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.


இந்த பட்டமளிப்பு விழாவில் திரைப்படத்துறையில் தனது 16 வயது முதல் இசையமைப்பாளராக பணியை துவக்கி 25 ஆண்டுகளுக்குள் 150 படங்களுக்கு மேலாக பல்வேறு மொழிகளில் இசையமைப்பாளராக சாதனை படைத்த யுவன் சங்கர் ராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. 







































இதேபோல் பிரபல விஞ்ஞானியும் மத்திய ராணுவத்திற்கு எடை குறைவான அர்ஜுன் ராணுவ டேங்க்கை வடிவமைத்த சாதனை விஞ்ஞானி டாக்டர் வி. பாலகுருவுக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இவர் ஏற்கனவே இருந்த அர்ஜுன் டேங்கில் 5 முக்கிய மாற்றங்களையும் 25 சிறு சிறு வசதிகளையும் மேம்படுத்தி திறமையாக செயல்படும் நவீன ரக ராணுவ டேங்க்கை உருவாக்கியுள்ளது குறிப்பிடதக்கது. 


இந்த 31 வது பட்டமளிப்பு விழாவில் சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 2258 இளங்கலை பட்டதாரி மாணவர்களுக்கும், 409 மேல்நிலைப் பட்டதாரி மாணவர்களுக்கும் பட்டங்களும், 153 பிஎச்டி மாணவர்களுக்கு டாக்டர் பட்டம், சாதனை மாணவர்கள் 23 பேருக்கு தங்க பதக்கம் என மொத்தம் 2667 மாணவர்களுக்கு சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் சதீஷ் ரெட்டி பட்டங்களை வழங்கினார். 


முன்னதாக மாணவர்களிடையே பேசிய இராணுவ மந்திரியின் அறிவியல் ஆலோசகருமானை டாக்டர் சதீஷ் ரெட்டி மாணவ மாணவிகள் இந்திய பாதுகாப்புத்துறை சார்ந்த புது புது தொழில்நிறுவனங்கள் துவங்க நிதி வழங்க 

இந்திய இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாராக உள்ளது என்றும் மாணவர்கள் நம் நாட்டில் தொழில் துவங்க முன்வருகின்றனர் என்று பெருமிதம் கொண்டார். 


இதில் மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் என மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.  


போட்டோ 1 - இராணுவ மந்திரியின் அறிவியல் ஆலோசகர் டாக்டர் சதீஷ் ரெட்டி மாணவிக்கு பட்டம் வழங்கியபோது. உடன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் மரிய ஜான்சன் இருந்தனர்.


போட்டோ 2 - பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரியஜீனா ஜான்சன் வழங்கியபோது. 


No comments:

Post a Comment