Featured post

Pushpa Pushpa’! The first single from ‘Pushpa 2 The Rule’ celebrates the uncommon journey

 *‘Pushpa Pushpa’! The first single from ‘Pushpa 2 The Rule’ celebrates the uncommon journey of a common man. Released on International Labo...

Thursday 15 September 2022

அழகிக்கு பிறகு அழுத்தமான கதை! தங்கர் பச்சான் இயக்கும்

 #அழகிக்கு பிறகு அழுத்தமான கதை! 

தங்கர் பச்சான் இயக்கும் 

'கருமேகங்கள் கலைகின்றன'. 


'அழகி'க்குப் பிறகு அனுபவ முதிர்ச்சியோடு நான் எடுத்திருத்திருக்கும் இந்த படம், என் படங்களில் இன்னொரு மைல் கல்  இது.

இயக்குநர் தங்கர் பச்சான். 


மேலும் படத்தை பற்றி கூறிகையில்.. 

''பல்வேறு மனிதர்களின் பலவிதமான மனங்கள். மனித உணர்வுகளின் உணர்ச்சித் ததும்பல்கள், சம்பவங்கள் நிறைந்து இருக்கும். உறவுகளின் சிக்கல்கள் குறித்தும் பேசுகிறது. என்னுடைய சிறுகதையை தழுவித்தான் எடுக்கிறேன். ஒவ்வொருத்தரும் கிடைத்த வாழ்க்கையை கடந்து வந்து விடுகிறோம். திரும்பிப் பார்த்து சரியாக இருந்திருக்கிறோமா.. இதை 

நமக்கு நாமே கேள்வி கேட்டுக்கிட்டால் எல்லோரும் மாட்டிக்குவோம். 

அழகிக்கு பிறகு இவ்வளவு அழுத்தமாக இப்படம் உருவாகிறது. 










இப்படத்தின் தயாரிப்பாளர் வீரசக்தி தமிழ் பற்றுதல் உள்ள ஒரு சிறந்த தயாரிப்பாளர். எந்த நெருக்கடியும் தராமல் இந்த படத்தை எடுத்து வருகிறார். ஆதலால், என் உயிரையும் உணர்வையும் எரிபொருளாய் போட்டு படத்தை உருவாக்கி வருகிறேன். 



இந்த கதைக்கு பாரதிராஜா, யோகிபாபு, கௌதம் மேனன், எஸ்.ஏ.சந்திரசேகர்னு  அசலான நடிகர்களாக, இவர்களை விடவும் பாத்திர வடிவுக்கு யாரும் கிடையாது என்பது உறுதி படுத்தும். 


*பாரதிராஜா அளவுக்கு யாரும் இதில் செய்ய ஆளில்லை. ஒவ்வொரு நாளும் 'தங்கர், உன் படத்தில் நடிக்கிறது எனக்கு பெருமைன்னு சொல்லுவார். தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிக் காட்டியவர். 


*ஒரு நாளைக்கு மூன்று ஷிப்ட் போட்டு வேலை பார்க்கும் யோகி பாபு இந்த கதையை சொன்னதும் 'வந்துடுறேன் ஐயா'னு சொன்னார். அதன்படியே வந்து நடித்துக் கொடுத்தார். அவரை நகைச்சுவை நடிகர்ன்னு மட்டும் சொல்லிட முடியாது. 


*கௌதம் மேனன், இதுவரை செய்யாத பாத்திரத்தேர்வை அத்தனை கச்சிதமாக நடித்தார். 

*எஸ்.ஏ.சியின் அனுபவம் இதில் பேசுகிறது. 

*மம்தா மோகன்தாஸ் தான் முக்கியமான கண்மணிங்கிற பொண்ணா வருது. நந்திதா தாஸ்க்கு பக்கத்தில் வர்ற கேரக்டர். இங்கேயிருந்து இணையத்தில் முகம் பார்த்து கதை சொன்னேன். அங்கேயிருந்து மம்தா கேரக்டரில் வாழ ஆரம்பித்து விட்டது. 'எப்ப ஷுட்டிங்?'னு கேட்டுட்டே இருக்கு. 

நாஞ்சில் நாடன் கதையை எடுத்தேன்.

 'கல்வெட்டு' கதையை 'அழகி'யாக்கினேன். 

'அம்மாவின் கைப்பேசி' 'ஒன்பது ரூபாய் நோட்டு'. 

அப்படிதான், 

"கருமேகங்கள் ஏன் கலைந்து சென்றன" இன்ற என் சிறு கதை, இப்போது "கருமேகங்கள் கலைகின்றன" வாக எடுத்துக் கொண்டிருக்கிறேன். 


வெகு நாட்களுக்குப் பிறகு லெனின் இப்படத்துக்கு எடிட் பண்றார்.

ஜீ.வி பிரகாஷ் உடன் வேலை பார்த்ததில்லை.

தேசிய விருது வாங்கினாலும் சாதாரணமாக வந்து நிறைவாக பாடல்கள் போட்டுக் கொடுத்திருக்கார். 


- Johnson.

No comments:

Post a Comment