Featured post

Ulaganayagan Kamal Haasan Watches ‘Bethlehem Kudumba Unit’ and Appreciates the Team in Chennai

 Ulaganayagan Kamal Haasan Watches ‘Bethlehem Kudumba Unit’ and Appreciates the Team in Chennai* The team of ‘Bethlehem Kudumba Unit’ recent...

Friday, 7 August 2026

வரவேற்பைக் குவிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் !!

 *வரவேற்பைக் குவிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் !!*



*நகைச்சுவை,ஃபேண்டஸி கலந்த  ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் வரவேற்பு!*


உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி, இயக்கி, தயாரிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பிளாக் ஹூமர், ஃபேண்டஸி மற்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்த படமாக உருவாகி வரும் இப்படம் மீதான எதிர்பார்ப்பை இந்த ஃபர்ஸ்ட் லுக் மேலும் அதிகரித்துள்ளது.


தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், பொன்னிற ஒளி வீசும் மர்மப் பெட்டியை கையில் ஏந்தியபடி வயதான பாட்டி மற்றும் சிறுவன்  நிற்கிறார்கள்.  சுற்றி குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆச்சரியம், பயம், பதற்றம் கலந்த முகபாவனையுடன் அந்தப் பெட்டியை நோக்கி நிற்கும் காட்சி, கதையின் மையமாக இந்த மாயப் பெட்டி அமையப்போகிறது என்பதை உணர்த்துகிறது. பழமையான வீட்டின் பின்னணி, சிதறிக் கிடக்கும் பணக்கட்டுகள், துப்பாக்கி உள்ளிட்ட காட்சிகள், திரில் நிறைந்த குடும்பக் கதைக்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. வித்தியாசமான காட்சியமைப்பால் சமூக வலைதளங்களிலும் இந்த ஃபர்ஸ்ட் லுக் கவனம் ஈர்த்து வருகிறது.


தகுதிக்கு மீறிய வாழ்க்கையை வாழ விரும்பும் ஒரு நடுத்தர குடும்பம், அதனால் உருவாகும் பிரச்சனைகளில் இருந்து, ஃபேண்டஸி மற்றும் நகைச்சுவை அம்சங்கள் கலந்து எப்படி மீண்டு வருகிறது என்பதையே இப்படம் சுவாரஸ்யமாக சொல்லவுள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்களின் பாணியில் பிளாக் ஹூமர் கலந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகி வருகிறது.


தருண் விஜய் மற்றும் பிக்பாஸ் புகழ அக்‌ஷரா ரெட்டி நாயகன்–நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பாவல் நவகீதன்,  திவ்ய ஜகத், அப்புகுட்டி, தீபா சங்கர், தேனப்பன், சம்பத் ராம், கஜராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


தற்போது தேனி, விழுப்புரம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.


தொழில்நுட்பக் குழு:


எழுத்து, இயக்கம், தயாரிப்பு: செ. ஹரி உத்ரா

வசனம் : செ. ஹரி உத்ரா, P. ரஞ்சித் குமார்

ஒளிப்பதிவு: K.S. பழனி

இசை: A.J. அலி மிர்சாக்

படத்தொகுப்பு: பிரசாந்த், S.B. ராஜா

கலை இயக்கம்: எட்வர்ட் கென்னடி

சண்டைப்பயிற்சி: கனல் V. கண்ணன், கனல் S. குகன்

நடனம்: I. ராதிகா, ராஜேஷ் கிறிஸ்டி

பாடல் வரிகள் : மோகன் ராஜன், கவிஞர் சாரதி 

நிர்வாக தயாரிப்பாளர்கள்: மனோவ் செல்வராஜ், தனகோபால், M. விஸ்வநாதன், சேட்டு K

இணை தயாரிப்பாளர்கள்: பாலகங்காதரன், திவ்யா ஜகத், ஜனார்த்தனன் V.

மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM)

No comments:

Post a Comment