Featured post

நடுக்கடலில் ‘துரோகம் பழகு’ படத்தின் போஸ்டர் வெளியீடு

 *நடுக்கடலில் ‘துரோகம் பழகு’ படத்தின் போஸ்டர் வெளியீடு!* மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. பியூலா மகிழ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘துரோகம் பழகு’...

Friday, 2 October 2026

நடுக்கடலில் ‘துரோகம் பழகு’ படத்தின் போஸ்டர் வெளியீடு

 *நடுக்கடலில் ‘துரோகம் பழகு’ படத்தின் போஸ்டர் வெளியீடு!*


மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. பியூலா மகிழ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.


இதன் தொடர்ச்சியாக, புதுச்சேரியில் நடுக்கடலுக்குச் சென்று படக்குழுவினர் ‘துரோகம் பழகு’ படத்தின் போஸ்டரை வெளியிட்டு வித்தியாசமான புரமோஷன் நிகழ்வை மேற்கொண்டுள்ளனர். இதுவரை வழக்கமாக காணப்படாத இந்த முயற்சி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


தக்க்ஷன் விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஜி.எம். குமார், வனிதா விஜயகுமார், அமுதவாணன், அப்புகுட்டி, திவாகர், கஞ்சா கருப்பு, லொள்ளு சபா ஜீவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சீயோன் ராஜா இயக்கும் இப்படத்திற்கு ராஜா மற்றும் பாலா இசையமைத்துள்ளனர்.


படத்தின் பிரம்மாண்டமான இசை மற்றும் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment