Featured post

ஜீவாவின் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!

 *ஜீவாவின் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!* நடிகர் ஜீவா நடிப்பில், லார்க் ஸ்டூடியோஸ...

Thursday, 29 October 2026

தனது பிறந்த நாளை முன்னிட்டு ராயபுரம் பகுதி மக்களுக்கு இலவச பட்டுப்புடவைகளை வழங்கிய ராகவா லாரன்ஸ்

 தனது பிறந்த நாளை முன்னிட்டு ராயபுரம் பகுதி மக்களுக்கு இலவச பட்டுப்புடவைகளை வழங்கிய ராகவா லாரன்ஸ்!!


தனது பிறந்த நாளான இன்று பட்டுப் புடவை வழங்கும் திட்டத்தை துவங்கினார் ராகவா லாரன்ஸ்!!


நடிகர் மற்றும் இயக்குநரான ராகவா லாரன்ஸ் தனது ‘லாரன்ஸ் அறக்கட்டளை’ 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு,  ஏழை தாய்மார்களுக்கு இலவசமாக பட்டுப்புடவைகள் வழங்கும் ‘பட்டுப்புடவை வழங்கும் திட்டம்’ என்ற புதிய அறப்பணியை துவங்க இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.


அந்த திட்டத்தை துவங்கும் விதமாக இன்று ( அக்டோபர் 29 ) தனது பிறந்தநாளை முன்னிட்டு முதற்கட்டமாக ராயபுரம் பகுதி மக்களுக்கு பட்டு புடவைகள் வழங்கினார்.


தொடர்ந்து இந்த  பட்டுபுடவை வழங்கும் திட்டதின் மூலம் தமிழகமெங்கு உள்ள ஏழை, எளிய தாய்மார்களுக்கும் பட்டுப்புடவை வழங்க இருப்பதாக தெரிவித்துளார்.


புவன் செல்வராஜ். PRO ( 29.10.2026 )

No comments:

Post a Comment