Featured post

புத்தாண்டு கொண்டாட்டமாக 2027 ஜனவரி 1-ம் தேதி மீண்டும் திரைக்கு வரும் மாண்புமிகு முதல்வர் விஜய்யின் ‘பைரவா’!

 புத்தாண்டு கொண்டாட்டமாக 2027 ஜனவரி 1-ம் தேதி மீண்டும் திரைக்கு வரும் மாண்புமிகு முதல்வர் விஜய்யின் ‘பைரவா’! தமிழகத்தின் முதல்வராக இருக்கும்...

Wednesday, 5 April 2023

பிரபல பாடலாசிரியர் பிரியன் கதாநாயகனாக அறிமுகமாகும்

 பிரபல பாடலாசிரியர் பிரியன் கதாநாயகனாக  அறிமுகமாகும்  ஹாரர், கிரைம்,  திரில்லர்  படம்  " அரணம் "


தமிழ்த்திரைக்கூடம் திரைப்பட நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு " அரணம் " என்று பெயரிட்டுள்ளனர்.


மஸ்காரா போட்டு மயக்குறியே, மக்காயலா மக்காயலா, வேலா வேலா வேலாயுதம், உசுமுலாரசே  உசுமுலாரசே, செக்ஸி லேடி கிட்ட வாடி, மனசுக்குள் புது மழை விழுகிறதே போன்ற ஹிட் பாடல்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய பிரபல பாடலாசிரியர் பிரியன் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.


கதாநாயகியாக வர்ஷா நடித்துள்ளார். ராட்டினம், எட்டுத்திக்கும் மதயானை, சத்ரு போன்ற திரைப்படங்களின் கதைநாயகன் லகுபரன் மற்றும் கீர்த்தனா ஆகியோரும் நடித்துள்ளனர்.

























நித்தின்.K.ராஜ், E.J.நௌசத் ஆகிய இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.


இசை - சாஜன் மாதவ்

படத்தொகுப்பு - PK 

பாடல்கள் -  பிரியன், முருகானந்தம், பாலா, சஹானா 

கலை -  பழனிவேல்

ஸ்டண்ட் - Rugger ராம்குமார்

நடனம்  -  ராம்சிவா, ஸ்ரீசெல்வி

மக்கள் தொடர்பு  - மணவை புவன்

தயாரிப்பு - தமிழ்த்திரைக்கூடம் 

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - பிரியன்.


படம் பற்றி இயக்குநர் பிரியன் பகிர்ந்தவை...


வாழ்க்கையின் அதிசயமே அடுத்த நிமிடம் நடக்கும் நாம் எதிர்பாரா ஆச்சர்யங்களும் அதிர்ச்சிகளும்தான். அப்படி ஒரு மனிதன் வாழ்வில் நடக்கும் சில சம்பவங்கள் அதை எதிர்கொள்கையில் அவன் காணும் பெரும் நிகழ்வுகள் என யூகிக்கவே இயலாத வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கும் கதை இது. 


ஒரு பெரிய ஜமீன் வீட்டில் வாழ்ந்து வந்த ஜமீன்தாரின் ஊதாரி மகன் திடீரென இறந்துவிட.. அவன் பேயாக இருப்பதாக நம்பப்படும் நிலையில் அந்த ஜமீன்தாரும் அதே வீட்டில் இறந்துவிட.. அவரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட கதிர் தன் புதுமனைவியுடன் அந்த ஜமீன் வீட்டுக்குக் குடியேறுகிறான். மகிழ்ச்சியாய் அவர்கள் வாழத்துவங்குகையில் பங்களாவை சுற்றிலும் சில அமானுஷ்யங்கள் நடக்கிறன. அவை என்ன? எதிர்பாரா மர்மங்கள் நிறைந்த அவற்றை கதிர் தன் தம்பியின் துணையோடு எப்படிக் கண்டுபிடித்துத் தன் குடும்பத்தைக் காக்கிறான் என்பதை  ஹாரர், கிரைம்,  திரில்லர் வடிவில்  சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.


படத்தின் முதல்பாதி முழுக்க ஒருதிசையிலும், இரண்டாம் பாதி முழுக்க twists and turns ஆகவும் இதுவரை கண்டிரா ஒரு வழக்கமுடைத்த பிரத்தியேக திரைக்கதை அனுபவத்தை அரணம் நிச்சயமாக வழங்கும்.


திரைப்படப் பாடலாசிரியராக இதுவரை 500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறேன். இப்போது ஒரு நடிகனாக, இயக்குநராக உங்கள் முன் வந்திருக்கிறேன். பாடல்களுக்கு கொடுத்த அதே அன்பையும், ஆதரவையும் இப்பொழுதும் எப்பொழுதும் தர வேண்டுகிறேன். நல்லன நடக்கும். நன்றி.  :)

Tuesday, 4 April 2023

அவள்' குறும்பட இயக்குநர் லோகநாதன் RS இயக்கத்தில் 'லொள்ளு சபா

 *'அவள்' குறும்பட இயக்குநர் லோகநாதன் RS இயக்கத்தில் 'லொள்ளு சபா' சேசு மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ள 'ஆஹா காதல்' குறும்படத்தின் சிறப்பு காட்சியில் முன்னணி திரையுலகினர் பங்கேற்பு*


'ஆஹா காதல்' எனும் சுவாரசியம் நிறைந்த குறும்படத்தில் 'லொள்ளு சபா' சேசு மாறுபட்ட வேடத்தில் நடித்து இருக்கிறார். 'அவள்' குறும்பட இயக்குநர் லோகநாதன் RS இப்படத்தை இயக்கியிருக்கிறார். 



'ஆஹா காதல்' குறும்படத்தின் சிறப்பு காட்சி திரையிடலில் (Preview show) டாடா திரைப்பட இயக்குநர் கணேஷ் K பாபு , தேஜாவு பட இயக்குநர் அரவிந்த், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், நடிகர் கிச்சா, சம்பத் ராம் , அருவி மதன் , நிகில் முருகன் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்தி சிறப்பித்தனர்.


மேலும், இக்குறும்பட போஸ்டர் வலைதளங்களிலும், சோசியல் மீடியாவிலும் அதிகம் பேசப்பட்டு  வைரலாகி உள்ளது. விரைவில் 'ஆஹா காதல்' குறும்படம் திரைப்படமாக எடுக்கப்படும் மற்றும்

இக்குறும்படம் OTT மற்றும் YouTubeல் வெளியாகும் என்பதை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 


***

பத்திரிக்கையாளர் சந்திப்பு

 *பத்திரிக்கையாளர் சந்திப்பு*

*‘தக்ஷின்’ -  தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு (எம்&இ) உச்சி மாநாடு*

இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) தனியார்/பொதுத்துறைகள், சிறு, நடுத்தர தொழிலகங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவை அடங்கிய சுமார் 9000 நேரடி உறுப்பினர்கள் மற்றும் நாடெங்கிலும் உள்ள 286 தொழில், வர்த்தக அமைப்புகளின் 300,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களையும் பெற்ற அரசு சாராத, இலாப நோக்கற்ற, தொழில்துறையால் நிர்வகிக்கப்படும் அமைப்பாகும்.

இதற்கு இந்தியாவில் 62 அலுவலகங்கள், 10 சிறப்பு மையங்கள், 8 வெளிநாட்டு அலுவலகங்கள் உள்ளன. மேலும் 133 நாடுகளில் உள்ள 350 தொழில்த்துறை மேம்பாட்டு நிறுவனங்களுடன்  சிஐஐ  இணைந்து உள்ளது. இந்திய தொழில் மற்றும் சர்வதேச தொழில்/வணிக சமூகத்திற்கான ஒரு வலுவான அமைப்பாக சிஐஐ செயல்படுகிறது. இந்தியா G20 இன் தலைமைப் பொறுப்பை வகிக்கிற இந்த சந்தர்ப்பத்தில் சிஐஐ B20 க்கான செயலகமாக அங்கீகாரம் பெற்றுள்ளது.


தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு (எம்&இ) உச்சிமாநாடான ‘தக்ஷின்’னின் முதல் நிகழ்ச்சியை சிஐஐ சென்னையில் 2022 ஆம் ஆண்டு நடத்தியது. இதில் 60 புகழ்பெற்ற பேச்சாளர்கள் மற்றும் இந்தியா முழுவதிலும் இருந்து நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், OTT தளங்கள் மற்றும் செய்தித்தாள்களின் தேசியத் தலைவர்கள், சமூக ஊடக பிரபலங்கள் மற்றும் எழுத்தாளர்கள் உட்பட 700 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தென்னிந்தியாவில் இந்தத் துறைக்கான மிகப்பெரிய நிகழ்வாக தக்ஷின் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் தக்ஷினின் 2வது பதிப்பை ஏப்ரல் 19-20, 2023 தேதிகளில் சென்னை ஐடிசி சோலா கிராண்ட் ஹோட்டலில் நடத்த சிஐஐ ஏற்பாடு செய்துள்ளது.



மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 2வது முறையாக தக்ஷிணை திறந்து வைக்க இசைந்துள்ளார். முதலமைச்சருடன் மலேசிய அரசின் மனித வளத்துறை அமைச்சர் திரு வி சிவக்குமார், தமிழ்நாடு அரசின் தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு எம் பி சாமிநாதன் மற்றும் தென்னிந்தியாவில் இருந்து ஏராளமான தொழில் அதிபர்கள் கலந்து கொள்கின்றனர். இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுகளுக்கான மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் அவர்கள் ஏப்ரல் 20 ஆம் தேதி மாலை மதிப்பாய்வு அமர்வில் (Valedictory Session) கெளரவ விருந்தினராக கலந்து கொள்கிறார்.



சிஐஐ தென் மண்டல மீடியா மற்றும் பொழுதுபோக்குக்கான கமிட்டியின் தலைவரான சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரர் திரு டி ஜி தியாகராஜன் மற்றும் M&E துறையில் உள்ள புகழ்பெற்ற நிர்வாகிகளின்  வழிகாட்டுதலோடு தக்ஷின் நடைபெறவுள்ளது.



‘எல்லைகளுக்கு அப்பால்’ என்ற கருப்பொருளில் தக்ஷின் 2023 உச்சி மாநாடு தென்னிந்திய சினிமாவின் உலகளாவிய தாக்கம், தொழில்நுட்பம், சமூக ஊடகங்கள், பெண் சக்தி, சிறிய பட்ஜெட் படங்கள், தியேட்டர் மற்றும் சினிமா, OTT, புதுமையான கதைகளை உருவாக்குதல் / ஸ்கிரிப்ட் உருவாக்குதல் மற்றும் பிற முக்கிய தலைப்புகளில் கவனம் செலுத்தும். இதில் சுமார் 50 பேச்சாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.


முக்கியப் பேச்சுக்கள், குழு விவாதங்கள் மூலம் உலகளாவிய அளவுகளின் அடிப்படையில் M&E துறை முன்னோக்கி செல்ல தக்ஷின் வழிவகுக்கும்.


இந்த மடல் மூலம் 5 ஏப்ரல் 2023 அன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள எல்வி பிரசாத் ஸ்டுடியோவில் 12:00 மணிக்கு நடக்கவிருக்கும் தக்ஷின் 2023 குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறேன்.


இந்நிகழ்வில் தக்ஷின் 2023 வழிநடத்தல் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டு ஊடக நண்பர்களுடன் உரையாடுவார்கள்.


மதிய உணவுடன் பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிவடையும்.


உங்கள் வரவை எதிர்நோக்கும் அன்பன்...

ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் இந்தியாவில் 10 மொழிகளில் வெளியாகிறது!*

 *ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் இந்தியாவில் 10 மொழிகளில் வெளியாகிறது!*

 

_9 இந்திய மொழிகள் உட்பட 10 மொழிகளுக்கான டிரைலர் சற்றுமுன் வெளியானது_


*டிரெய்லர் இணைப்பு:*  https://www.youtube.com/watch?v=p2y-8REhOTs

 



இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக, அனைவராலும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் மற்றும் பிரபலமான ஸ்பைடர்மேன் வரிசையைச் சார்ந்த ஹாலிவுட் திரைப்படம்10 வெவ்வேறு மொழிகளில் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இந்தியாவில் அனைத்து வயதினருக்கும் பிடித்தமான ஸ்பைடர் மேன் சூப்பர் ஹீரோவின் திறமையைக் காட்டும் ஸ்பைடர் மேன் வரிசைத் திரைப்படங்கள் இந்திய பாக்ஸ் ஆபிஸில் மகத்தான வெற்றியைக் கண்டது. ஸ்பைடர் மேனுக்கு நாடு முழுவதும் உள்ள தீவிரமான ரசிகர்களைக் கருத்தில் கொண்டு, தயாரிப்பாளர்கள் அவரை அனைத்து இந்தியர்களுடனும் நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான ஒரு தனித்துவமான வழியைக் கையாண்டு, இதை ஒரு பான்-இந்தியா திரைப்படமாகவும் 2023 இல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாகவும் அமைத்தனர்.


 ‘ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்’ ஆங்கிலம் தவிர, இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. 10 மொழிகளில் வெளியாவது ஒரு சாதனையாகும் மற்றும் பார்வையாளர்கள் அவர்களின் விருப்பப்படி விரும்பும் மொழிகளில் திரைப்படத்தை அனுபவிக்க அனுமதிக்கிறது.


சோனி பிக்சர்ஸ் ரிலீசிங் இன்டர்நேஷனல் (SPRI) இந்தியா துறையின் பொது மேலாளரும் தலைவருமான ஷோனி பஞ்சிகரன் கூறுகையில், "ஸ்பைடர் மேன் இந்தியாவில் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் சூப்பர் ஹீரோ ஆவார், மேலும் ஸ்பைடர் மேன் எப்படமும் சிறப்பான தேசம் முழுவதுமான கொண்டாட்டமாக அமைகிறது. இறுதியாக வந்த ஸ்பைடர் மேன் திரைப்படம், 'நோ வே ஹோம்’, ஸ்பைடர் மேனின் ரசிகர்களை மேலும் தீவிர ரசிகர்களாக மாற்றியது. பிராந்தியங்கள் மற்றும் மொழிகள் முழுவதும் உள்ளடக்கத்தின் நுகர்வு அதிகரித்து வருவதால், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தங்களுக்குப் பிடித்த சூப்பர் ஹீரோவை சொந்த மொழியில் கண்டு அனுபவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். 'ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தே ஸ்பைடர் வெர்ஸ் திரைப்படத்தை 10 மொழிகளில் வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம். இந்தியா ஸ்பைடர் மேனை விரும்புகிறது, மேலும் இந்திய ஸ்பைடர் மேன் பவித்ர பிரபாகர் உட்பட பல இந்திய கூறுகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் இவ் வெளியீடு எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இப் படத்தை மிகவும் விரும்புவார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்." என்றார்.


மைல்ஸ் மோரல்ஸ், ஆஸ்கார் விருது பெற்ற ஸ்பைடர்-வெர்ஸ் சாகாவின் அடுத்த அத்தியாயமான ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் திரைப்படத்தில் மீண்டும் தோன்றுகிறார். க்வென் ஸ்டேசியுடன் மீண்டும் இணைந்த பிறகு, புரூக்ளினின் முழுநேர, அனைவருக்கும் நண்பனான ஸ்பைடர் மேன் மல்டிவர்ஸுக்கு அனுப்பப்படுகிறார், அங்கு தங்கள் இருப்பைப் பாதுகாக்கும் பொறுப்பைக் கொண்டுள்ள ஸ்பைடர்-பீப்பிள் குழுவை அவர் சந்திக்கிறார். இத்திரைப்படத்தின் சிறப்பு என்னவென்றால், இந்திய ஸ்பைடர் மேன், பவித்ர் பிரபாகர், மும்பட்டன் தெருக்களில் இருந்து அறிமுகமாகிறார்.

 

சரி, நமக்குப் பிடித்த வலை பின்னல் சூப்பர் ஹீரோ அனைத்து மொழிகளிலும் தனது பணியைப் பற்றிச் செல்வதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்!

 

*சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தியா, ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் 'ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்'ஐ ஜூன் 2, 2023 அன்று திரையரங்குகளில் மட்டும் வெளியிடுகிறது.*

சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும்

 *சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும்

'மரகத நாணயம்' புகழ் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள 'வீரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் உடன் வைரல் ஆகி வருகிறது*


சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் பல ஆண்டுகளாக தரமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களை வெளியிடுவதில் புகழ்பெற்றது. இது தமிழ் திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற மற்றும் மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் இணைந்து ஓடிடி பிளாக்பஸ்டரான 'அன்பறிவு' படத்திற்குப் பிறகு, சத்யஜோதி ஃபிலிம்ஸ் மீண்டும் அவருடன் ‘வீரன்’ என்ற புதிய  திரைப்படத்தில் இணைந்துள்ளது. ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பிறந்த தினத்தில் வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் அவரது தனித்துவமான தோற்றம் மற்றும் போஸ்டர் வடிவமைப்பிற்கு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களையும் பார்வையாளர்களையும் சரியாக தயார்படுத்த வேண்டும் என்பதில்  தயாரிப்பாளர்கள் உறுதியாக இருந்தனர். அந்த வகையில், இதன் முதல் பார்வை சிறந்த வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது.



தமிழ் மற்றும் தெலுங்கில் பிளாக்பஸ்டர் ஹிட் படமான 'மரகத நாணயம்' மூலம் புகழ் பெற்ற ஏ.ஆர்.கே.சரவன் எழுதி இயக்கியிருக்கும் 'வீரன்' படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி இதுவரை செய்தவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தையும் நடிப்பையும் தர இருக்கிறார். இது அவரது ரசிகர்களுக்கு புதியதாகவும் ரசிக்கும் வகையிலும் இருக்கும்.


ஹிப்ஹாப் தமிழா ஆதி மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன் ஆகியோர் கடந்த காலங்களில் வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்களைக் கொடுத்துள்ளதால் ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்கள் மத்தியில் இவர்கள் இணைந்துள்ள இந்தப் புதிய படத்திற்கான எதிர்பார்ப்புகள் பெரிதாக உள்ளது. குறிப்பாக இப்போது வெளியாகி உள்ள இதன் ஃபர்ஸ்ட் லுக் இந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது. 


படக்குழுவினர் ஏற்கனவே படப்பிடிப்பை முடித்துவிட்ட நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக முடியும் தருவாயில் உள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் 'வீரன்' படத்தை 2023 கோடையில் வெளியிட திட்டமிட்டுள்ளது. விரைவில் இதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவிக்கும்.


நகைச்சுவை, ஆக்‌ஷன், செண்டிமெண்ட்  ஆகியவற்றின் நேர்த்தியான கலவையுடன், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களின் ரசனைகளை கவரும் வகையிலான ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படமாக 'வீரன்'  இருக்கும்.


சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் படத்தை வழங்குகிறார்.  'வீரன்' படத்தை செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தை ஜி.சரவன் மற்றும் சாய் சித்தார்த் இணைந்து தயாரிக்கின்றனர்.


*நடிகர்கள் மற்றும் குழுவினர்*


பேனர்: சத்ய ஜோதி பிலிம்ஸ்


நடிகர்கள்: ஹிப்-ஹாப் தமிழா, அதிரா ராஜ், முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் மற்றும் பலர்.


இயக்கம்: ஏ.ஆர்.கே.சரவன்,

இசை: ஹிப்-ஹாப் தமிழா,

ஒளிப்பதிவு: தீபக் டி மேனன்,

எடிட்டர்: ஜி.கே பிரசன்னா,

கலை: என்.கே.ராகுல்,

ஆக்‌ஷன்: மகேஷ் மேத்யூ,

விளம்பர வடிவமைப்பாளர்: ட்யூனி ஜான்,

ஸ்டில்ஸ்: அமீர்,

ஆடை வடிவமைப்பாளர்: கீர்த்தி வாசன்

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராகுல் தயாரிப்பில், அல்போன்ஸ்

 ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராகுல் தயாரிப்பில், அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் புதிய திரைப்படம் !!! 


அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் புதிய படத்திற்கான ஆடிசனில் குவிந்த நடிகர், நடிகையர்கள் !!! 





இந்திய சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் மிக முக்கியமானவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். தனது தனித்த திரைமொழியுடன், தொழில்நுட்பத்தில் ஒவ்வொரு முறையும் அசத்துபவர்.  அவரது நேரம், பிரேமம் படங்கள் இந்திய அளவில் கவனம் ஈர்த்த நிலையில், தற்போது ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்தப்படம் தமிழ் மலையாளம் என இருமொழிகளில் உருவாகிறது. 



நெஞ்சுக்கு நீதி, வீட்ல விஷேசம், முதலான படங்களை தயாரித்துள்ளது ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம். தற்போது இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் புதிய படத்தை தயாரிக்கவுள்ளது. 


ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் புதிய படத்தை இயக்குகிறார் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்தே ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 


இந்நிலையில் சமீபத்தில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், ரோமியோ பிக்சர்ஸுடன் இணையும் தனது புதிய படத்திற்காக நடிகர்கள் தேவைப்படுவதாகவும், அதற்கான ஆடிசன் 7 நாட்கள் நடக்க இருப்பதாகவும், அந்த ஆடிசனில் 15 வயதிலிருந்து 55 வயது வரையிலான நடிப்பார்வம் கொண்டவர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம் என, தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.


இந்த செய்தியினை அடுத்து, ஆடிசனுக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர்  அலுவலகத்தில் குவிந்து வருகின்றனர். அவர்களுக்கான ஆடிசனுடன் படத்தின் முந்தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படம் ஆரம்பிக்கும் முன்னதாகவே படத்திற்கு நிலவி வரும் இத்தகைய எதிர்பார்ப்பு, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.


தற்போது ரோமியோ பிக்சர்ஸ், இயக்குநர் ராஜுமோகன் இயக்கத்தில் “பாபா பிளாக்‌ ஷீப்” படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Sathya Jyothi Films T.G. Thyagarajan presents

 *Sathya Jyothi Films T.G. Thyagarajan presents*

*“Maragatha Nanayam” fame ARK Saravan directorial*

*Hiphop Tamizha Adhi starrer “Veeran” First Single “Thunderkaaran” steals millions of hearts overnight*


The Youth sensation Hiphop Tamizha and filmmaker ARK Saravan, director of all-time super hit entertainer ‘Maragadha Nanayam’ have kept the expectations spiking up with their collaboration for ‘Veeran’ right from the time of launch. And now, they have come up with an extraordinary starter treat with the first single ‘Thunderkaaran’, which has become an overnight Chartbuster. The song which owns an unparalleled trait of favouring the youth crowds offered a fabulous treat for 5000 youngsters as the song launch happened at Rathinam College, Coimbatore Yet another reason for the song’s phenomenal reach is due to the collaboration of musical trailblazers Hiphop Tamizha and Anirudh Ravichander after a long hiatus. 


The first single ‘Thunderkaaran’ is a promo song that has lyrics written by Vivek, and choreography by Sathish. Director Aswin Raam, director of Hiphop Tamizha starrer ‘Anbariv’ has directed the promo song. 


Team is elated that Thunderkaaran tops in the spotify and 5 Million + views in youtube. 


Hiphop Tamizha playing the titular, other characters in this film are Athira Raj, Munishkanth, Kaali Venkat, Sassi Selvaraj, and many others are a part of this star cast. Hip-hop Tamizha is composing the music, and Deepak D Menon is handling the cinematography. G.K. Prasanna (Editing), NK Rahul (Art), Mahesh Mathew (Action), Tuney John (Publicity Designer), Amir (Stills), Keerthi Vasan (Costume Designer), Suresh Chandra-Rekha D’One (PRO) are the other technicians in this film. 


Sathya Jyothi Films T.G. Thyagarajan is presenting, and Sendhil Thyagarajan & Arjun Thyagarajan are co-producing Veeran. G. Saravan and Sai Siddarth are co-producing this movie.

The “L.G.M” Team experiences the magical win of Chennai team

 *The “L.G.M” Team experiences the magical win of Chennai team*


_*Chennai (April 4, 2023): A delightful evening for the crew of 'L.G.M' as they experienced an ecstatic evening of watching the Legendary Cricketer Dhoni's brilliance and game.*_ 



The entire crew of “L.G.M” (Lets Get Married) had a storming surprise when they were invited to watch the Super Kings live in action, accompanied by Dhoni Entertainment’s team. It became a memorable and exhilarating experience amidst the filming schedules. Currently, the film’s shoot is progressing at a rapid pace and the makers are happy with the way the film is shaping up. 


M S Dhoni and his wife Sakshi Dhoni’s production house Dhoni Entertainment is producing its first Tamil film, “L.G.M”, directed by Ramesh Thamilmani, who is also composing the music for this film. 

Harish Kalyan, Nadiya, and Ivana are playing the lead roles in this feel-good family entertainer, which features Yogi Babu alongside many prominent actors in pivotal roles.


Vikas Hasija is the Business Head and Priyanshu Chopra is the Creative Head of Dhoni Entertainment.

தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியின் வெற்றியை கொண்டாடிய 'எல். ஜி. எம்' படக் குழு*

 *தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியின் வெற்றியை கொண்டாடிய 'எல். ஜி. எம்' படக் குழு*


*இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரரான தோனியின் புத்திசாலித்தனமான அதிரடி ஆட்டத்தை நேரில் கண்டு, 'எல். ஜி. எம்' பட குழுவினர் வியந்து பாராட்டிக் கொண்டாடினர்.*


சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது. இந்த போட்டியை நேரடியாகக் காண தோனி என்டர்டெய்ன்மென்ட் குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. விறுவிறுப்பான படப்பிடிப்பு பணிகளுக்கிடையே தோனியின் தயாரிப்பில் உருவாகும் 'எல். ஜி. எம்' பட குழுவினர் இன்ப அதிர்ச்சியுடன் இந்த போட்டியை காண வருகை தந்தனர். தோனியின் சாதுரியமான அதிரடி ஆட்டத்தால் சென்னை அணியை வெற்றி பெற செய்த தருணத்தை நேரில் கண்டு ரசித்த படக்குழுவினர், தோனியின் மாயாஜால வித்தையை மெய் மறந்து ரசித்து பாராட்டினர்.



எம். எஸ். தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், தனது முதல் தமிழ் திரைப்படமாக 'எல். ஜி. எம்'  எனும் திரைப்படத்தைத் தயாரித்து வருகிறது.  இந்த திரைப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். அவரே இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். முழு நீள குடும்ப பொழுதுபோக்கு சித்திரமாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண், நதியா, இவானா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருவதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதனிடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டியை நேரில் கண்டு ரசித்த 'எல். ஜி. எம்' பட குழுவினருடன் தோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் வணிக பிரிவின் தலைவரான விகாஸ் ஹசிஜா மற்றும் கற்பனை திறன்மிகு படைப்பின் தலைவரான பிரியான்சு சோப்ரா உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.