*'அவள்' குறும்பட இயக்குநர் லோகநாதன் RS இயக்கத்தில் 'லொள்ளு சபா' சேசு மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ள 'ஆஹா காதல்' குறும்படத்தின் சிறப்பு காட்சியில் முன்னணி திரையுலகினர் பங்கேற்பு*
'ஆஹா காதல்' எனும் சுவாரசியம் நிறைந்த குறும்படத்தில் 'லொள்ளு சபா' சேசு மாறுபட்ட வேடத்தில் நடித்து இருக்கிறார். 'அவள்' குறும்பட இயக்குநர் லோகநாதன் RS இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
'ஆஹா காதல்' குறும்படத்தின் சிறப்பு காட்சி திரையிடலில் (Preview show) டாடா திரைப்பட இயக்குநர் கணேஷ் K பாபு , தேஜாவு பட இயக்குநர் அரவிந்த், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், நடிகர் கிச்சா, சம்பத் ராம் , அருவி மதன் , நிகில் முருகன் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்தி சிறப்பித்தனர்.
மேலும், இக்குறும்பட போஸ்டர் வலைதளங்களிலும், சோசியல் மீடியாவிலும் அதிகம் பேசப்பட்டு வைரலாகி உள்ளது. விரைவில் 'ஆஹா காதல்' குறும்படம் திரைப்படமாக எடுக்கப்படும் மற்றும்
இக்குறும்படம் OTT மற்றும் YouTubeல் வெளியாகும் என்பதை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
***
No comments:
Post a Comment