Featured post

புத்தாண்டு கொண்டாட்டமாக 2027 ஜனவரி 1-ம் தேதி மீண்டும் திரைக்கு வரும் மாண்புமிகு முதல்வர் விஜய்யின் ‘பைரவா’!

 புத்தாண்டு கொண்டாட்டமாக 2027 ஜனவரி 1-ம் தேதி மீண்டும் திரைக்கு வரும் மாண்புமிகு முதல்வர் விஜய்யின் ‘பைரவா’! தமிழகத்தின் முதல்வராக இருக்கும்...

Wednesday, 5 April 2023

ONE MONTH TO GO FOR THE ONE LAST RIDE

 *ONE MONTH TO GO FOR THE ONE LAST RIDE!*

 

You surely don’t want to miss the crazy band of misfits coming together one last time with their crazy camaraderie, music, fun, and laughter. Do we?


*Link:* https://www.instagram.com/reel/CqpI5PsB9Gj/?igshid=YmMyMTA2M2Y=


In Marvel Studios’ “Guardians of the Galaxy Vol. 3” our beloved band of misfits are settling into life on Knowhere. But it isn’t long before their lives are upended by the echoes of Rocket’s turbulent past. Peter Quill, still reeling from the loss of Gamora, must rally his team around him on a dangerous mission to save Rocket’s life—a mission that, if not completed successfully, could quite possibly lead to the end of the Guardians as we know them.

 

The film stars Chris Pratt, Zoe Saldana, Dave Bautista, Karen Gillan, Pom Klementieff, featuring Vin Diesel as Groot and Bradley Cooper as Rocket, Sean Gunn, Chukwudi Iwuji, Will Poulter and Maria Bakalova.

 

James Gunn is the director and wrote the screenplay. Kevin Feige produces with Louis D’Esposito, Victoria Alonso, Nikolas Korda, Sara Smith, and Simon Hatt serving as executive producers. 

 

Marvel Studios’ “Guardians of the Galaxy Vol. 3” releases in India on 5th May 2023 in English, Hindi, Tamil and Telugu. Only in Cinemas.

அட்வான்ஸ்ட் க்ளோஸ்கின் கிளினிக் துவக்கி வைத்து ஒன் ப்ரோ

 அட்வான்ஸ்ட் க்ளோஸ்கின் கிளினிக் துவக்கி வைத்து ஒன் ப்ரோ மெஷினை திரு.சரண்வேல் அறிமுகப்படுத்தினார்.


அட்வான்ஸ்ட் குரோஹேர் & குலோஸ்கின் கிளினிக், ஒரு முன்னணி முடி வளர்ச்சி மற்றும் தோல் சிகிச்சை பிராண்ட், 3 மார்ச் 2023 அன்று அவர்களின் சமீபத்திய பிராண்டான மேம்பட்ட க்ளோஸ்கின் கிளினிக் ரேடிசன் ப்ளூ எக்மோரில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியை அட்வான்ஸ்ட் குரோஹேர் & குலோஸ்கின் கிளினிக் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் சரண்வேல் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் உரிமையாளர்கள், கார்ப்பரேட் குழு மற்றும் அனைத்து பங்குதாரர்கள் கலந்து கண்டனர். 




இந்த கிளினிக் US-FDA அங்கீகரிக்கப்பட்ட மற்றும் மேம்பட்ட தோல் சிகிச்சை தீர்வுகளின் முழுமையாக வழங்குகிறது, ஹைட்ராஃபேஷியல், க்யூ ஸ்விட்ச்டு லேசர், கெமிக்கல் பீல், போடோக்ஸ், ஃபில்லர்ஸ், த்ரெட் லிஃப்ட், ஃபுல் பாடி லேசர், ஃபேஸ் பிஆர்பி, மருக்கள் அகற்றுதல் மற்றும் பல சிகிச்சைகள் தரப்படுகின்றன.

அழகியல் மருத்துவத் துறையில் உலகத் தரம் வாய்ந்த நிபுணர்களால் நிர்வகிக்கப்படும் காப்புரிமை பெற்ற உயர்தர இயந்திரங்களுடன் கிளினிக் நன்கு செயல்பட உள்ளது.இது அவர்களை வியக்கத்தக்க முடிவுகளை அடைய வைக்கிறது.

அறிமுகத்தின் ஒரு பகுதியாக, அட்வான்ஸ்ட் குரோஹேர் & குலோஸ்கின் கிளினிக் அதன் சமீபத்திய லோகோவை வெளியிட்டு புதிய ஒன் ப்ரோ மெஷினை அறிமுகப்படுத்தியது. 

ஒன் ப்ரோ மெஷின்  தயாரிப்பின் மேம்பட்ட அம்சங்கள் மற்றும் திறன்களைக் காட்சிப்படுத்தி, பயனுள்ள தோல் சிகிச்சை தீர்வுகளுக்கான இன்றியமையாத கருவியாக அமைகிறது.

 அட்வான்ஸ்ட் குலோஸ்கின் கிளினிக் அனைத்து தோல் வகைகளுக்கும் முழுமையான தீர்வுகளை வழங்குவதற்காக Sesderma தயாரிப்பு நோக்குநிலை, Botox & Fillers தயாரிப்பு நோக்குநிலை மற்றும் One Pro Product Home Care Orientation ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது.

 மேலும், எண்டர்பிரைசஸ் ரிசோர்ஸ் பிளானிங் டெமோவுடன், லேசர், பீல்ஸ் மற்றும் அடிப்படை சிகிச்சைகளுக்கான விளம்பரங்களின் வரம்பையும் கிளினிக் காட்சிப்படுத்தியது.

க்ளோஸ்கின் கிளினிக் பிராண்டிங் டூர், கிளினிக்கின் அதிநவீன வசதிகள் மற்றும் நிபுணத்துவ ஊழியர்களைப் பற்றிய ஒரு பார்வையை வழங்கியது. இந்த நிகழ்வு விருது வழங்கும் விழாவுடன் முடிவடைந்தது, அங்கு கிளினிக் அதன் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர் பங்குதாரர்களின் பங்களிப்புகளை அங்கீகரித்தது. கூடுதலாக, கிளினிக்கில் தோல் பயிற்சி கையேடுகள், இயந்திரப் பிரசுரங்கள் மற்றும் வணிகத் தாள்கள் ஆகியவை கிளினிக்குகள் தகவலறிந்த முடிவுகளை எடுப்பதற்கான அனைத்துத் தகவல்களையும் வைத்திருப்பதை உறுதிசெய்யும். 

மேம்பட்ட க்ரோஹேர் & க்ளோஸ்கின் கிளினிக் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முடி வளர்ச்சி மற்றும் தோல் சிகிச்சை தீர்வுகளை வழங்க உறுதிபூண்டுள்ளது, மேலும் அதன் சமீபத்திய தயாரிப்புகள் மற்றும் சேவைகள் இந்த அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். மேலும் தகவலுக்கு, கிளினிக்கின் இணையதளமான www.adgloskin.com ஐப் பார்வையிடவும்.

 அட்வான்ஸ்டு க்ளோஸ்கின் கிளினிக் அறிமுகமானது  ஒரு அற்புதமான மைல்கல் ஆகும், மேலும் இது முடி வளர்ச்சி மற்றும் தோல் சிகிச்சை துறையில் முன்னணியில் தனது நிலையை மேலும் நிறுவுகிறது. மலிவு மற்றும் புதுமையான தீர்வுகளை வழங்குவதில் கவனம் செலுத்தி, அழகு மற்றும் ஆரோக்கியத் துறையில் புரட்சியை ஏற்படுத்த மேம்பட்ட குளோஸ்கின் கிளினிக் அமைக்கப்பட்டுள்ளது.

ரேசர் படக் குழுவினர் பத்திரிகையாளர்கள் சந்திப்பு

 *ரேசர் படக் குழுவினர் பத்திரிகையாளர்கள் சந்திப்பு* 


ஹஸ்ட்லர்ஸ் என்டர்டெயின்மென்ட் (Hustlers 

Entertainment)  பட நிறுவனம் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படம் "ரேசர்".

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி  டைரக்ட் செய்கிறார் சதீஷ்.பிரபாகர் ஒளிப்பதிவு செய்கிறார்.  பரத்  இசை அமைக்கிறார்.  கனியமுதன் அரங்கம் நிர்மாணிக்கிறார்.  சண்டை காட்சிகளை சீனு அமைக்கிறார்.  சந்தோஷ் கிருஷ்ணமூர்த்தி இணை தயாரிப்பு செய்கிறார். 

இதில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார் அகில் சந்தோஷ்.  விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடிக்கும் லாவண்யா கதாநா யகியாக நடிக்கிறார். மேலும் ஆறுபாலா, '"திரவுபதி" சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

இப்படத்தின் படக்குழுவினர் பத்திரிக்கை, மீடியா நிருபர்கள் சந்திப்பு சென்னையில் உள்ள இன்றுநடந்தது. 














நிகழ்ச்சியில் இயக்குனர் சதீஷ் பேசியது:


ரேஸர் படத்தை இந்தியன் ஐகான் பைக் ரேஸ் சாம்பியன்  ரஜினி கிருஷ்ணன் தான் வழங்க வேண்டும் என்று நான் நினைத்திருந்தேன்,  அவர் இங்கு வந்திருப்பது சிறப்பு. இவர் வாழ்க்கையில் நிறைய போராட்டங்கள் சந்தித்திருக்கிறார்.  அவரைப்பற்றி நிறைய படித்திருக்கிறேன்.

சிலருக்கு வாழ்க்கையைல் லட்சியம் இருக்கும் பைக் ரேஸர்  ஆக வேண்டும் என்று எண்ணுவார்கள் ஆனால் பைக் விலை அதிகமாக இருக்கும் இந்த படத்தில் ஒரு விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது.

ஸ்ட்ரீட்ரேஸும் ஒரு விளையாட்டுத்தான். அதை முறைப்படுத்தி நடத்த வேண்டும் என்று இதில் கூறப்பட்டிருக்கும். இங்கு நிறைய திறமைசாலிகள் இருக்கிறார்கள்.அதை இந்த படம் பார்க்கும்போதும் புரியும்.  

ரஜினி கிருஷ்ணன் போன்றவர்களைப்பற்றி ரேஸர் படத்தில் சொல்லியிருக்கிறோம். இதை சமுத்தயத்துக்கு ஒரு பொறுப்புணர்வுடன்தான் சொல்லியிருக்கிறோம். ரேஸ் போகிறவர்கள் எந்த விபத்திலும் சிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் இப்படத்துக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. 

ஒரு புது இயக்குனர் பைக் ரேஸ் ஸ்கிரிப்ட்டுடன் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லமுயன்றால் அதெல்லாம் வேண்டாம் நிறைய செல்வாகும் என்று கூறுவார்கள். ஆனால் எங்கள் டீமை நம்பி இந்த படத்தை தயாரிக்க முன்வந்தார் சந்தோஷ் கிருஷ்ணமூர்த்தி. அவருக்கு படம் பிடித்திருந்தது. படத்தை பெரிதாக செய்யாலாம் என்று எண்ணியபோது கார்த்திக் ஜெயாஸ் வந்தார். படத்துக்காக எல்லாமே அவர் செய்தார்.  மூன்றாவத்தாக நன்றி சொல்ல வேண்டுமென்றால் ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் ஜெனிஸ் சார். சினிமா ஆரோக்கியமாக இருப்பதற்கு ஜெனிஸ் சார் காரணம் என்று கூறுவேன். அவரால்தான் இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் அளவுக்கு வந்திருக்கிறது. இந்த படம் உருவாவதற்கு காரணம் இப்படத்தின் ஹீரோ அகில் சந்தோஷ். அவர் தான் தாயாரிப்பாளரை எனக்கு கொடுத்தார். இன்று வரை அவர் எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார். 

ஹீரோயின் லாவண்யா நான் யோசித்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருந்தார். அவரிடம் கதை சொன்னவுடன் நடிக்கிறேன் என்றார். முழுநாளும் படப்பிடிப்பு நடக்கும் தொடர்ச்சியாக இருந்து நடித்துக்கொடுத்தார், படப்பிடிப்புக்கு துணிச்சலாக தனியாகவே அவர் வந்த நடித்தது எங்கள் குழு மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையாகும். அவருக்கு நன்றி. அடுத்து என்னுடைய டீம் நான், பிரபா, பரத்.  பள்ளியில் படிக்கும்போதிருந்தே எங்களுக்கு சினிமாவுக்குவரவேண்டும் என்ற எண்ணம் இருந்தது, நான் இயக்குவேன், பிரபா கேமிரா எடுப்பார். பரத் இசை அமைப்பார். தயாரிப்பாளரிடம் என் டீமை வைத்துதான் இந்த படம் செய்வேன் என்றபோது அவர் ஒப்புக்கொண்டார். அதேபோல் என்னுடைய உதவியாளர்கள். இவர்கள் எல்லோரும் சேர்ந்து உழைத்ததுதான் ரேஸர் படம். இந்த படத்தில் எந்த பிரச்சனை வந்தாலும் அதை சுமூகமாக முடித்துகொடுத்துவிடுவார் எக்ஸிக்யூட்டிவ்

புரட்யூசர் ஹேமா. மேலும் இப்படத்தில் ப்ளு சட்டை அணிந்து ஒருவர் நடித்திருப்பார் அவர்தான் என் தந்தை. இப்போது உயிருடன் இல்லை. ஆனால் அவர் இறப்பதற்குமுன் என்னிடம் சொன்ன வார்த்தை, நீ  எப்படியும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பதுதான் அவர் ஆசைப்படி நான் சாதித்துக்காட்டுவேன்.


 *நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசியதாவது:* 


சினிமாவுக்கு வரும்போது படம் எப்படி எடுப்பது என்பதை தெரிந்துக்கொண்டு வாருங்கள். படம் நன்றாக இருந்தால் ஒடும் டாடா, லவ் டுடே படங்கள் சிறிய படங்களாக இருந்தாலும் நன்றாக ஓடி வசூல் ஈட்டியது.

படங்களுக்கு டைட்டில் தமிழில் வைக்க வேண்டும்.தமிழில் வையுங்கள். ரேஸர் படம் டிரைலர் நன்றாக இருந்தது. சினிமாவுக்கு என்ன தேவை என்பதை அரசிடம் ஒன்றாக சேர்ந்து சென்று கேளுங்கள்..


 *ஹீரோ அகில் சந்தோஷ் பேசியது:*


இப்படத்தின் இயக்குனர் கனவு ரொம்பபெரியது, அதை தயாரிப்பாளர்கள் நிறைவேற்றியிருக் றார்கள்.எல்லோரும் கடுமையான உழைத்திருக்கிறோம். ரேஸர் பற்றிய கதை என்றாலும் அப்பா மகன் உறவை எதார்த்தமாக இக்கதை கூறும், எல்லோரும் அந்த்தந்த வேடத்தில் ஒன்றிநடித்திருக்கிறார்கள்.

 *தயாரிப்பாளர்  கார்த்திக் ஜெயாஸ் பேசியது:* 


நான் சிறுவயதாக இருக்குபோதே என் தந்தை இறந்துவிட்டார், அதன்பிறகு க‌ஷ்டப்பட்டு படித்தேன். ஓட்டல் வேலை முதல் எல்லா வேலையும் செய்து, பிறகு வியாபாரம் செய்து தற்போது ஒரு தயாரிப்பாளராக இங்கு நிற்கிறேன். ரேஸர் படம் எல்லோரையும் கவரும் படமாக இருக்கும்.


 *ஹீரோயின் லாவண்யா பேசியது:* 


நான் டிவிக்கு வருவதற்கு முன்பே எனக்கு இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார் இயக்குனர் சதீஷ். இந்த படம் ரொம்ப நன்றாக இருக்க காரணம் இயக்குனர் தான். ஹீரோ அகில் சந்தோஷ் என்னுடன் நட்பாக பழகினார்.


மேலும் ஆக்‌ஷன் ரியாக்‌ஷ்ன் ஜெனிஸ், பைக்ரேஸ் சாமியன் ரஜினி கிருஷ்ணன், பி ஆர் ஒ சங்க தலைவர் டைமண்ட் பாபு, கேபிள் சங்கர், நடிகர் ராஜா, சிறுபட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர்

ஆர்.கே.அன்புச்செல்வன், காத்து கருப்பு கலை ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

பிரபல பாடலாசிரியர் பிரியன் கதாநாயகனாக அறிமுகமாகும்

 பிரபல பாடலாசிரியர் பிரியன் கதாநாயகனாக  அறிமுகமாகும்  ஹாரர், கிரைம்,  திரில்லர்  படம்  " அரணம் "


தமிழ்த்திரைக்கூடம் திரைப்பட நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு " அரணம் " என்று பெயரிட்டுள்ளனர்.


மஸ்காரா போட்டு மயக்குறியே, மக்காயலா மக்காயலா, வேலா வேலா வேலாயுதம், உசுமுலாரசே  உசுமுலாரசே, செக்ஸி லேடி கிட்ட வாடி, மனசுக்குள் புது மழை விழுகிறதே போன்ற ஹிட் பாடல்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய பிரபல பாடலாசிரியர் பிரியன் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.


கதாநாயகியாக வர்ஷா நடித்துள்ளார். ராட்டினம், எட்டுத்திக்கும் மதயானை, சத்ரு போன்ற திரைப்படங்களின் கதைநாயகன் லகுபரன் மற்றும் கீர்த்தனா ஆகியோரும் நடித்துள்ளனர்.

























நித்தின்.K.ராஜ், E.J.நௌசத் ஆகிய இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.


இசை - சாஜன் மாதவ்

படத்தொகுப்பு - PK 

பாடல்கள் -  பிரியன், முருகானந்தம், பாலா, சஹானா 

கலை -  பழனிவேல்

ஸ்டண்ட் - Rugger ராம்குமார்

நடனம்  -  ராம்சிவா, ஸ்ரீசெல்வி

மக்கள் தொடர்பு  - மணவை புவன்

தயாரிப்பு - தமிழ்த்திரைக்கூடம் 

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - பிரியன்.


படம் பற்றி இயக்குநர் பிரியன் பகிர்ந்தவை...


வாழ்க்கையின் அதிசயமே அடுத்த நிமிடம் நடக்கும் நாம் எதிர்பாரா ஆச்சர்யங்களும் அதிர்ச்சிகளும்தான். அப்படி ஒரு மனிதன் வாழ்வில் நடக்கும் சில சம்பவங்கள் அதை எதிர்கொள்கையில் அவன் காணும் பெரும் நிகழ்வுகள் என யூகிக்கவே இயலாத வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கும் கதை இது. 


ஒரு பெரிய ஜமீன் வீட்டில் வாழ்ந்து வந்த ஜமீன்தாரின் ஊதாரி மகன் திடீரென இறந்துவிட.. அவன் பேயாக இருப்பதாக நம்பப்படும் நிலையில் அந்த ஜமீன்தாரும் அதே வீட்டில் இறந்துவிட.. அவரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட கதிர் தன் புதுமனைவியுடன் அந்த ஜமீன் வீட்டுக்குக் குடியேறுகிறான். மகிழ்ச்சியாய் அவர்கள் வாழத்துவங்குகையில் பங்களாவை சுற்றிலும் சில அமானுஷ்யங்கள் நடக்கிறன. அவை என்ன? எதிர்பாரா மர்மங்கள் நிறைந்த அவற்றை கதிர் தன் தம்பியின் துணையோடு எப்படிக் கண்டுபிடித்துத் தன் குடும்பத்தைக் காக்கிறான் என்பதை  ஹாரர், கிரைம்,  திரில்லர் வடிவில்  சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.


படத்தின் முதல்பாதி முழுக்க ஒருதிசையிலும், இரண்டாம் பாதி முழுக்க twists and turns ஆகவும் இதுவரை கண்டிரா ஒரு வழக்கமுடைத்த பிரத்தியேக திரைக்கதை அனுபவத்தை அரணம் நிச்சயமாக வழங்கும்.


திரைப்படப் பாடலாசிரியராக இதுவரை 500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறேன். இப்போது ஒரு நடிகனாக, இயக்குநராக உங்கள் முன் வந்திருக்கிறேன். பாடல்களுக்கு கொடுத்த அதே அன்பையும், ஆதரவையும் இப்பொழுதும் எப்பொழுதும் தர வேண்டுகிறேன். நல்லன நடக்கும். நன்றி.  :)

Tuesday, 4 April 2023

அவள்' குறும்பட இயக்குநர் லோகநாதன் RS இயக்கத்தில் 'லொள்ளு சபா

 *'அவள்' குறும்பட இயக்குநர் லோகநாதன் RS இயக்கத்தில் 'லொள்ளு சபா' சேசு மாறுபட்ட வேடத்தில் நடித்துள்ள 'ஆஹா காதல்' குறும்படத்தின் சிறப்பு காட்சியில் முன்னணி திரையுலகினர் பங்கேற்பு*


'ஆஹா காதல்' எனும் சுவாரசியம் நிறைந்த குறும்படத்தில் 'லொள்ளு சபா' சேசு மாறுபட்ட வேடத்தில் நடித்து இருக்கிறார். 'அவள்' குறும்பட இயக்குநர் லோகநாதன் RS இப்படத்தை இயக்கியிருக்கிறார். 



'ஆஹா காதல்' குறும்படத்தின் சிறப்பு காட்சி திரையிடலில் (Preview show) டாடா திரைப்பட இயக்குநர் கணேஷ் K பாபு , தேஜாவு பட இயக்குநர் அரவிந்த், ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர், நடிகர் கிச்சா, சம்பத் ராம் , அருவி மதன் , நிகில் முருகன் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்தி சிறப்பித்தனர்.


மேலும், இக்குறும்பட போஸ்டர் வலைதளங்களிலும், சோசியல் மீடியாவிலும் அதிகம் பேசப்பட்டு  வைரலாகி உள்ளது. விரைவில் 'ஆஹா காதல்' குறும்படம் திரைப்படமாக எடுக்கப்படும் மற்றும்

இக்குறும்படம் OTT மற்றும் YouTubeல் வெளியாகும் என்பதை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 


***

பத்திரிக்கையாளர் சந்திப்பு

 *பத்திரிக்கையாளர் சந்திப்பு*

*‘தக்ஷின்’ -  தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு (எம்&இ) உச்சி மாநாடு*

இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) தனியார்/பொதுத்துறைகள், சிறு, நடுத்தர தொழிலகங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆகியவை அடங்கிய சுமார் 9000 நேரடி உறுப்பினர்கள் மற்றும் நாடெங்கிலும் உள்ள 286 தொழில், வர்த்தக அமைப்புகளின் 300,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களையும் பெற்ற அரசு சாராத, இலாப நோக்கற்ற, தொழில்துறையால் நிர்வகிக்கப்படும் அமைப்பாகும்.

இதற்கு இந்தியாவில் 62 அலுவலகங்கள், 10 சிறப்பு மையங்கள், 8 வெளிநாட்டு அலுவலகங்கள் உள்ளன. மேலும் 133 நாடுகளில் உள்ள 350 தொழில்த்துறை மேம்பாட்டு நிறுவனங்களுடன்  சிஐஐ  இணைந்து உள்ளது. இந்திய தொழில் மற்றும் சர்வதேச தொழில்/வணிக சமூகத்திற்கான ஒரு வலுவான அமைப்பாக சிஐஐ செயல்படுகிறது. இந்தியா G20 இன் தலைமைப் பொறுப்பை வகிக்கிற இந்த சந்தர்ப்பத்தில் சிஐஐ B20 க்கான செயலகமாக அங்கீகாரம் பெற்றுள்ளது.


தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு (எம்&இ) உச்சிமாநாடான ‘தக்ஷின்’னின் முதல் நிகழ்ச்சியை சிஐஐ சென்னையில் 2022 ஆம் ஆண்டு நடத்தியது. இதில் 60 புகழ்பெற்ற பேச்சாளர்கள் மற்றும் இந்தியா முழுவதிலும் இருந்து நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், OTT தளங்கள் மற்றும் செய்தித்தாள்களின் தேசியத் தலைவர்கள், சமூக ஊடக பிரபலங்கள் மற்றும் எழுத்தாளர்கள் உட்பட 700 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தென்னிந்தியாவில் இந்தத் துறைக்கான மிகப்பெரிய நிகழ்வாக தக்ஷின் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் தக்ஷினின் 2வது பதிப்பை ஏப்ரல் 19-20, 2023 தேதிகளில் சென்னை ஐடிசி சோலா கிராண்ட் ஹோட்டலில் நடத்த சிஐஐ ஏற்பாடு செய்துள்ளது.



மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 2வது முறையாக தக்ஷிணை திறந்து வைக்க இசைந்துள்ளார். முதலமைச்சருடன் மலேசிய அரசின் மனித வளத்துறை அமைச்சர் திரு வி சிவக்குமார், தமிழ்நாடு அரசின் தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு எம் பி சாமிநாதன் மற்றும் தென்னிந்தியாவில் இருந்து ஏராளமான தொழில் அதிபர்கள் கலந்து கொள்கின்றனர். இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுகளுக்கான மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் அவர்கள் ஏப்ரல் 20 ஆம் தேதி மாலை மதிப்பாய்வு அமர்வில் (Valedictory Session) கெளரவ விருந்தினராக கலந்து கொள்கிறார்.



சிஐஐ தென் மண்டல மீடியா மற்றும் பொழுதுபோக்குக்கான கமிட்டியின் தலைவரான சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் நிர்வாகப் பங்குதாரர் திரு டி ஜி தியாகராஜன் மற்றும் M&E துறையில் உள்ள புகழ்பெற்ற நிர்வாகிகளின்  வழிகாட்டுதலோடு தக்ஷின் நடைபெறவுள்ளது.



‘எல்லைகளுக்கு அப்பால்’ என்ற கருப்பொருளில் தக்ஷின் 2023 உச்சி மாநாடு தென்னிந்திய சினிமாவின் உலகளாவிய தாக்கம், தொழில்நுட்பம், சமூக ஊடகங்கள், பெண் சக்தி, சிறிய பட்ஜெட் படங்கள், தியேட்டர் மற்றும் சினிமா, OTT, புதுமையான கதைகளை உருவாக்குதல் / ஸ்கிரிப்ட் உருவாக்குதல் மற்றும் பிற முக்கிய தலைப்புகளில் கவனம் செலுத்தும். இதில் சுமார் 50 பேச்சாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.


முக்கியப் பேச்சுக்கள், குழு விவாதங்கள் மூலம் உலகளாவிய அளவுகளின் அடிப்படையில் M&E துறை முன்னோக்கி செல்ல தக்ஷின் வழிவகுக்கும்.


இந்த மடல் மூலம் 5 ஏப்ரல் 2023 அன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள எல்வி பிரசாத் ஸ்டுடியோவில் 12:00 மணிக்கு நடக்கவிருக்கும் தக்ஷின் 2023 குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு உங்களை அன்புடன் அழைக்கிறேன்.


இந்நிகழ்வில் தக்ஷின் 2023 வழிநடத்தல் குழுவின் முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டு ஊடக நண்பர்களுடன் உரையாடுவார்கள்.


மதிய உணவுடன் பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிவடையும்.


உங்கள் வரவை எதிர்நோக்கும் அன்பன்...

ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் இந்தியாவில் 10 மொழிகளில் வெளியாகிறது!*

 *ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் இந்தியாவில் 10 மொழிகளில் வெளியாகிறது!*

 

_9 இந்திய மொழிகள் உட்பட 10 மொழிகளுக்கான டிரைலர் சற்றுமுன் வெளியானது_


*டிரெய்லர் இணைப்பு:*  https://www.youtube.com/watch?v=p2y-8REhOTs

 



இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக, அனைவராலும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்படும் மற்றும் பிரபலமான ஸ்பைடர்மேன் வரிசையைச் சார்ந்த ஹாலிவுட் திரைப்படம்10 வெவ்வேறு மொழிகளில் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. இந்தியாவில் அனைத்து வயதினருக்கும் பிடித்தமான ஸ்பைடர் மேன் சூப்பர் ஹீரோவின் திறமையைக் காட்டும் ஸ்பைடர் மேன் வரிசைத் திரைப்படங்கள் இந்திய பாக்ஸ் ஆபிஸில் மகத்தான வெற்றியைக் கண்டது. ஸ்பைடர் மேனுக்கு நாடு முழுவதும் உள்ள தீவிரமான ரசிகர்களைக் கருத்தில் கொண்டு, தயாரிப்பாளர்கள் அவரை அனைத்து இந்தியர்களுடனும் நெருக்கமாகக் கொண்டுவருவதற்கான ஒரு தனித்துவமான வழியைக் கையாண்டு, இதை ஒரு பான்-இந்தியா திரைப்படமாகவும் 2023 இல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாகவும் அமைத்தனர்.


 ‘ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்’ ஆங்கிலம் தவிர, இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. 10 மொழிகளில் வெளியாவது ஒரு சாதனையாகும் மற்றும் பார்வையாளர்கள் அவர்களின் விருப்பப்படி விரும்பும் மொழிகளில் திரைப்படத்தை அனுபவிக்க அனுமதிக்கிறது.


சோனி பிக்சர்ஸ் ரிலீசிங் இன்டர்நேஷனல் (SPRI) இந்தியா துறையின் பொது மேலாளரும் தலைவருமான ஷோனி பஞ்சிகரன் கூறுகையில், "ஸ்பைடர் மேன் இந்தியாவில் அனைவராலும் மிகவும் விரும்பப்படும் சூப்பர் ஹீரோ ஆவார், மேலும் ஸ்பைடர் மேன் எப்படமும் சிறப்பான தேசம் முழுவதுமான கொண்டாட்டமாக அமைகிறது. இறுதியாக வந்த ஸ்பைடர் மேன் திரைப்படம், 'நோ வே ஹோம்’, ஸ்பைடர் மேனின் ரசிகர்களை மேலும் தீவிர ரசிகர்களாக மாற்றியது. பிராந்தியங்கள் மற்றும் மொழிகள் முழுவதும் உள்ளடக்கத்தின் நுகர்வு அதிகரித்து வருவதால், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தங்களுக்குப் பிடித்த சூப்பர் ஹீரோவை சொந்த மொழியில் கண்டு அனுபவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். 'ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தே ஸ்பைடர் வெர்ஸ் திரைப்படத்தை 10 மொழிகளில் வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம். இந்தியா ஸ்பைடர் மேனை விரும்புகிறது, மேலும் இந்திய ஸ்பைடர் மேன் பவித்ர பிரபாகர் உட்பட பல இந்திய கூறுகளை அறிமுகப்படுத்தியதன் மூலம் இவ் வெளியீடு எங்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இப் படத்தை மிகவும் விரும்புவார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்." என்றார்.


மைல்ஸ் மோரல்ஸ், ஆஸ்கார் விருது பெற்ற ஸ்பைடர்-வெர்ஸ் சாகாவின் அடுத்த அத்தியாயமான ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர் வெர்ஸ் திரைப்படத்தில் மீண்டும் தோன்றுகிறார். க்வென் ஸ்டேசியுடன் மீண்டும் இணைந்த பிறகு, புரூக்ளினின் முழுநேர, அனைவருக்கும் நண்பனான ஸ்பைடர் மேன் மல்டிவர்ஸுக்கு அனுப்பப்படுகிறார், அங்கு தங்கள் இருப்பைப் பாதுகாக்கும் பொறுப்பைக் கொண்டுள்ள ஸ்பைடர்-பீப்பிள் குழுவை அவர் சந்திக்கிறார். இத்திரைப்படத்தின் சிறப்பு என்னவென்றால், இந்திய ஸ்பைடர் மேன், பவித்ர் பிரபாகர், மும்பட்டன் தெருக்களில் இருந்து அறிமுகமாகிறார்.

 

சரி, நமக்குப் பிடித்த வலை பின்னல் சூப்பர் ஹீரோ அனைத்து மொழிகளிலும் தனது பணியைப் பற்றிச் செல்வதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்!

 

*சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் இந்தியா, ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் 'ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ்'ஐ ஜூன் 2, 2023 அன்று திரையரங்குகளில் மட்டும் வெளியிடுகிறது.*

சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும்

 *சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும்

'மரகத நாணயம்' புகழ் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்துள்ள 'வீரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் உடன் வைரல் ஆகி வருகிறது*


சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் பல ஆண்டுகளாக தரமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களை வெளியிடுவதில் புகழ்பெற்றது. இது தமிழ் திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற மற்றும் மதிப்புமிக்க தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் இணைந்து ஓடிடி பிளாக்பஸ்டரான 'அன்பறிவு' படத்திற்குப் பிறகு, சத்யஜோதி ஃபிலிம்ஸ் மீண்டும் அவருடன் ‘வீரன்’ என்ற புதிய  திரைப்படத்தில் இணைந்துள்ளது. ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பிறந்த தினத்தில் வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் அவரது தனித்துவமான தோற்றம் மற்றும் போஸ்டர் வடிவமைப்பிற்கு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களையும் பார்வையாளர்களையும் சரியாக தயார்படுத்த வேண்டும் என்பதில்  தயாரிப்பாளர்கள் உறுதியாக இருந்தனர். அந்த வகையில், இதன் முதல் பார்வை சிறந்த வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது.



தமிழ் மற்றும் தெலுங்கில் பிளாக்பஸ்டர் ஹிட் படமான 'மரகத நாணயம்' மூலம் புகழ் பெற்ற ஏ.ஆர்.கே.சரவன் எழுதி இயக்கியிருக்கும் 'வீரன்' படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி இதுவரை செய்தவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தையும் நடிப்பையும் தர இருக்கிறார். இது அவரது ரசிகர்களுக்கு புதியதாகவும் ரசிக்கும் வகையிலும் இருக்கும்.


ஹிப்ஹாப் தமிழா ஆதி மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவன் ஆகியோர் கடந்த காலங்களில் வணிக ரீதியாக வெற்றி பெற்ற படங்களைக் கொடுத்துள்ளதால் ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்கள் மத்தியில் இவர்கள் இணைந்துள்ள இந்தப் புதிய படத்திற்கான எதிர்பார்ப்புகள் பெரிதாக உள்ளது. குறிப்பாக இப்போது வெளியாகி உள்ள இதன் ஃபர்ஸ்ட் லுக் இந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது. 


படக்குழுவினர் ஏற்கனவே படப்பிடிப்பை முடித்துவிட்ட நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக முடியும் தருவாயில் உள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் 'வீரன்' படத்தை 2023 கோடையில் வெளியிட திட்டமிட்டுள்ளது. விரைவில் இதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை அறிவிக்கும்.


நகைச்சுவை, ஆக்‌ஷன், செண்டிமெண்ட்  ஆகியவற்றின் நேர்த்தியான கலவையுடன், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களின் ரசனைகளை கவரும் வகையிலான ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படமாக 'வீரன்'  இருக்கும்.


சத்ய ஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் படத்தை வழங்குகிறார்.  'வீரன்' படத்தை செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தை ஜி.சரவன் மற்றும் சாய் சித்தார்த் இணைந்து தயாரிக்கின்றனர்.


*நடிகர்கள் மற்றும் குழுவினர்*


பேனர்: சத்ய ஜோதி பிலிம்ஸ்


நடிகர்கள்: ஹிப்-ஹாப் தமிழா, அதிரா ராஜ், முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் மற்றும் பலர்.


இயக்கம்: ஏ.ஆர்.கே.சரவன்,

இசை: ஹிப்-ஹாப் தமிழா,

ஒளிப்பதிவு: தீபக் டி மேனன்,

எடிட்டர்: ஜி.கே பிரசன்னா,

கலை: என்.கே.ராகுல்,

ஆக்‌ஷன்: மகேஷ் மேத்யூ,

விளம்பர வடிவமைப்பாளர்: ட்யூனி ஜான்,

ஸ்டில்ஸ்: அமீர்,

ஆடை வடிவமைப்பாளர்: கீர்த்தி வாசன்

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராகுல் தயாரிப்பில், அல்போன்ஸ்

 ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராகுல் தயாரிப்பில், அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் புதிய திரைப்படம் !!! 


அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் புதிய படத்திற்கான ஆடிசனில் குவிந்த நடிகர், நடிகையர்கள் !!! 





இந்திய சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் மிக முக்கியமானவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். தனது தனித்த திரைமொழியுடன், தொழில்நுட்பத்தில் ஒவ்வொரு முறையும் அசத்துபவர்.  அவரது நேரம், பிரேமம் படங்கள் இந்திய அளவில் கவனம் ஈர்த்த நிலையில், தற்போது ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்தப்படம் தமிழ் மலையாளம் என இருமொழிகளில் உருவாகிறது. 



நெஞ்சுக்கு நீதி, வீட்ல விஷேசம், முதலான படங்களை தயாரித்துள்ளது ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம். தற்போது இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் புதிய படத்தை தயாரிக்கவுள்ளது. 


ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் புதிய படத்தை இயக்குகிறார் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்தே ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 


இந்நிலையில் சமீபத்தில் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், ரோமியோ பிக்சர்ஸுடன் இணையும் தனது புதிய படத்திற்காக நடிகர்கள் தேவைப்படுவதாகவும், அதற்கான ஆடிசன் 7 நாட்கள் நடக்க இருப்பதாகவும், அந்த ஆடிசனில் 15 வயதிலிருந்து 55 வயது வரையிலான நடிப்பார்வம் கொண்டவர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம் என, தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.


இந்த செய்தியினை அடுத்து, ஆடிசனுக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர்  அலுவலகத்தில் குவிந்து வருகின்றனர். அவர்களுக்கான ஆடிசனுடன் படத்தின் முந்தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படம் ஆரம்பிக்கும் முன்னதாகவே படத்திற்கு நிலவி வரும் இத்தகைய எதிர்பார்ப்பு, அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.


தற்போது ரோமியோ பிக்சர்ஸ், இயக்குநர் ராஜுமோகன் இயக்கத்தில் “பாபா பிளாக்‌ ஷீப்” படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.