Featured post

ParAsakthi Movie Review

ParAsakthi Tamil Movie Review  *ParAsakthi Movie Rating: 4.5//5* ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம parasakthi படத்தோட review அ தான் பாக்க போறோம். இ...

Saturday, 1 June 2019

இசைஞானி இளையராஜாவின் இசையில் மீண்டும் எஸ்.பி.பி

 
                    “ தமிழரசன் “ படத்திற்காக இன்று பாடல் பதிவானது

 
எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்  " தமிழரசன் " இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.மற்றும் சுரேஷ்கோபி, ராதாரவி சோனு சூட்,யோகிபாபு,சங்கீதா கஸ்தூரி ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா,ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, 
ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ்,சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன்,  முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்..


ஒளிப்பதிவு -  ஆர்.டி.ராஜசேகர்
இசை  -   இளையராஜா
பாடல்கள்  -  பழனிபாரதி, ஜெய்ராம்
கலை  -   மிலன்
ஸ்டண்ட்  -   அனல் அரசு
எடிட்டிங்   -   புவன் சந்திரசேகர்
நடனம்   -      பிருந்தா சதீஷ்
தயாரிப்பு மேற்பார்வை   -     ராஜா ஸ்ரீதர்
கதை திரைக்கதை வசனம் இயக்கம்  -   பாபு யோகேஸ்வரன்
தயாரிப்பு  -    கெளசல்யா ராணி
சில அதிசயங்கள் கலையால் மட்டும் தான் சாத்தியப்படும். அப்படியொரு அதிசயத்தை மீண்டும் சினிமாக்கலை நிகழ்த்தி இருக்கிறது. விஜய் ஆண்டனி நடித்து வரும் இந்த தமிழரசன் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.


அவரது இசையில் பல வருடங்களுக்குப் பிறகு யேசுதாஸ் இந்த படத்திற்கு ஒரு பாடலை  பாடிச் சென்றார். பலரும் இந்த நிகழ்வை இன்ப ஆச்சர்யமாக கொண்டாடி வந்த வேளையில், இளையராஜாவின் இசையில் இப்போது இந்த படத்திற்காக எஸ்.பி.பி ஒரு மெலடி பாடலை பாடியுள்ளார். சில ஆண்டுகளாக இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரல் கேட்க முடியாத ஒரு சூழல் இருந்தது. அந்தச் சூழலை இளையராஜாவின் சுதியும், இசை ரசிகர்களின் நல்ல விதியும் சுமூகமாகச் சாத்தியப்படுத்தி இருக்கிறது. இந்தப் பாடல் பதிவின் போது இசைஞானியும், எஸ்.பி.பி அவர்களும் பழைய நிகழ்வுகளை நட்போடு பகிர்ந்து கொண்டார்கள். மேலும் இசை தேவன் இசையில் எஸ்.பி.பி பாடிய மெல்டிகள் எல்லாம் ஆல்டைம் ஹிட். அதே வரிசையில்  பழனிபாரதி எழுதியிருக்கும்  “ வா வா என் மகனே “ என்னும் இந்த தாலாட்டு  பாடலும்  மிகப்பெரிய ஹிட்டாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறார்கள் படக்குழுவினர்.
படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்று இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது.



No comments:

Post a Comment