Featured post

RX' திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

 *’RX' திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!*  இந்தியத் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் இய...

Showing posts with label Tamilarasan Movie. Show all posts
Showing posts with label Tamilarasan Movie. Show all posts

Thursday, 13 June 2019

தமிழரசன் “ படத்தின் டப்பிங் இன்று Knackஸ்டுடியோவில் பூஜையுடன் துவங்கியது.

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி பிரமாண்ட தயாரிப்பில் , இசைஞானி இளையராஜா இசையில், பாபு யோகேஸ்வரன்  இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ள “ தமிழரசன் “ படத்தின் டப்பிங் இன்று Knackஸ்டுடியோவில் பூஜையுடன் துவங்கியது.
விரைவில் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது.









Saturday, 1 June 2019

இசைஞானி இளையராஜாவின் இசையில் மீண்டும் எஸ்.பி.பி

 
                    “ தமிழரசன் “ படத்திற்காக இன்று பாடல் பதிவானது

 
எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்  " தமிழரசன் " இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.மற்றும் சுரேஷ்கோபி, ராதாரவி சோனு சூட்,யோகிபாபு,சங்கீதா கஸ்தூரி ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா,ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, 
ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ்,சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன்,  முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்..


ஒளிப்பதிவு -  ஆர்.டி.ராஜசேகர்
இசை  -   இளையராஜா
பாடல்கள்  -  பழனிபாரதி, ஜெய்ராம்
கலை  -   மிலன்
ஸ்டண்ட்  -   அனல் அரசு
எடிட்டிங்   -   புவன் சந்திரசேகர்
நடனம்   -      பிருந்தா சதீஷ்
தயாரிப்பு மேற்பார்வை   -     ராஜா ஸ்ரீதர்
கதை திரைக்கதை வசனம் இயக்கம்  -   பாபு யோகேஸ்வரன்
தயாரிப்பு  -    கெளசல்யா ராணி
சில அதிசயங்கள் கலையால் மட்டும் தான் சாத்தியப்படும். அப்படியொரு அதிசயத்தை மீண்டும் சினிமாக்கலை நிகழ்த்தி இருக்கிறது. விஜய் ஆண்டனி நடித்து வரும் இந்த தமிழரசன் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.


அவரது இசையில் பல வருடங்களுக்குப் பிறகு யேசுதாஸ் இந்த படத்திற்கு ஒரு பாடலை  பாடிச் சென்றார். பலரும் இந்த நிகழ்வை இன்ப ஆச்சர்யமாக கொண்டாடி வந்த வேளையில், இளையராஜாவின் இசையில் இப்போது இந்த படத்திற்காக எஸ்.பி.பி ஒரு மெலடி பாடலை பாடியுள்ளார். சில ஆண்டுகளாக இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரல் கேட்க முடியாத ஒரு சூழல் இருந்தது. அந்தச் சூழலை இளையராஜாவின் சுதியும், இசை ரசிகர்களின் நல்ல விதியும் சுமூகமாகச் சாத்தியப்படுத்தி இருக்கிறது. இந்தப் பாடல் பதிவின் போது இசைஞானியும், எஸ்.பி.பி அவர்களும் பழைய நிகழ்வுகளை நட்போடு பகிர்ந்து கொண்டார்கள். மேலும் இசை தேவன் இசையில் எஸ்.பி.பி பாடிய மெல்டிகள் எல்லாம் ஆல்டைம் ஹிட். அதே வரிசையில்  பழனிபாரதி எழுதியிருக்கும்  “ வா வா என் மகனே “ என்னும் இந்த தாலாட்டு  பாடலும்  மிகப்பெரிய ஹிட்டாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறார்கள் படக்குழுவினர்.
படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்று இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது.



Tuesday, 16 April 2019

பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாட வந்த கே.ஜே.ஜேசுதாஸ்



 எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்  " தமிழரசன் "
இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.
மற்றும் சுரேஷ்கோபி ராதாரவி சோனு சூட்,யோகிபாபு,சங்கீதா கஸ்தூரி ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா,ஒய்.ஜி.மகேந்திரன்,கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ்,சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன்,  முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்..


 ஒளிப்பதிவு -  ஆர்.டி.ராஜசேகர்
இசை  -   இளையராஜா
பாடல்கள்  -  பழனிபாரதி, ஜெய்ராம்
கலை  -   மிலன்
ஸ்டண்ட்  -   அனல் அரசு
எடிட்டிங்   -   புவன் சந்திரசேகர்
நடனம்   -      பிருந்தா சதீஷ்
தயாரிப்பு மேற்பார்வை   -     ராஜா ஸ்ரீதர்
கதை திரைக்கதை வசனம் இயக்கம்  -   பாபு யோகேஸ்வரன்
தயாரிப்பு  -    கெளசல்யா ராணி
படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடை பெற்றது...இரண்டு கட்டமாக நடை பெற்ற படப்பிடிப்பு முடிவடைந்தது...
 அதிரடி ஆக்‌ஷன் படமாக தமிழரசன் உருவாகி வருகிறது... .

 இந்த படத்திற்காக இளையராஜா இசையில்
 ஜெயராம் எழுதிய 
"பொறுத்தது போதும் 
 பொங்கிட வேணும் 
புயலென வா " என்ற புரட்சிகரமான பாடலை ஜேசுதாஸ் பாட இளையராஜா இசையில் பதிவானது...
2009ம் ஆண்டு மம்முட்டி நடித்த பழசிராஜா என்ற மலையாள படத்தில் பாடிய ஜேசுதாஸ் அதற்கு பிறகு எந்த சினிமாவிலும் பாடாமல் தவிர்த்து வந்தார். இந்த தமிழரசன் படத்தில் பாடியது எங்கள் படக்குழுவினருக்கு கிடைத்த மரியாதை என்கிறது படக்குழு.


 ஜேசுதாஸுக்கு பூங்கொடுத்து இளையராஜாவும் இயக்குனர் பாபு யோகேஸ்வரன் மற்றும் g.சிவா ஆகியோர் வரவேற்றனர்..
படத்தில் விஜய் ஆண்டனி பாடும் புரட்சிகரமான பாடலாக ஒலிக்கப் போகிறது

Friday, 15 March 2019

இரண்டாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சங்கீதா தமிழரசன் படத்தில் நடிக்கிறார்.


எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்  " தமிழரசன் "
இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.
மற்றும் சுரேஷ்கோபு ராதாரவி சோனு சூட்,யோகிபாபு, ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன்,கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன்,  முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார். மிக முக்கிய வேடத்தில் சங்கீதா நடிக்கிறார்...இரண்டாண்டுகளுக்கு முன்பு வந்த நெருப்புடா படத்தில் நெகடிவ் வேடத்தில் நடித்து தூள் கிளப்பிய சங்கீதா அதற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்த சங்கீதா  மீண்டும் இந்த படத்தில் நடிக்கிறார்.
இது பற்றி சங்கீதாவிடம் கேட்டோம்...
எனக்கேற்ற கதாபாத்திரம் சரியாக இல்லாததால் நிறைய படங்களை நானே ஒதுக்கி விட்டு ஒதுங்கி இருந்தேன்.
இந்த படத்தில் என் கேரக்டர் மிகவும் பரபரப்பாக பேசப் படும் விதமாக இருந்ததால் ஒத்துக் கொண்டேன். மிகப் பெரிய மருத்துவமனையை நடத்தும் டாக்டர் வேடம் இது. இதில் என் கதாபாத்திரம் பவர் புல்லானது என்றார்..



ஒளிப்பதிவு -  ஆர்.டி.ராஜசேகர்
இசை  -   இளையராஜா
பாடல்கள்  -  பழனிபாரதி, ஜெய்ராம்
கலை  -   மிலன்
ஸ்டண்ட்  -   அனல் அரசு
எடிட்டிங்   -   புவன் சந்திரசேகர்
நடனம்   -      பிருந்தா சதீஷ்
தயாரிப்பு மேற்பார்வை   -     ராஜா ஸ்ரீதர்
கதை திரைக்கதை வசனம் இயக்கம்  -   பாபு யோகேஸ்வரன்
தயாரிப்பு  -    கெளசல்யா ராணி
படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது...