Featured post

டெண்ட்கொட்டாவில் மிடில் கிளாஸ் குடும்பத்தின் சாகசங்கள் — மக்களின் மனதைத் திருப்திப்படுத்தும் ‘Madras Matinee

 டெண்ட்கொட்டாவில் மிடில் கிளாஸ் குடும்பத்தின் சாகசங்கள் — மக்களின் மனதைத் திருப்திப்படுத்தும் ‘Madras Matinee’ இப்போது ஸ்ட்ரீமிங்! செய்ய்யுங...

Wednesday, 5 June 2019

நடிகர் விஜய் ஆண்டனியை விழா மேடையில் முதல் முறையாக ஆடவைத்த ஆஷிமா


  பாப்டா நிறுவனம் மூலம் திரு. தனஞ்ஜெயன் வெளியிடும் திரைப்படம் ” கொலைகாரன் “. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் மூலம் நடிகை ஆஷிமா நர்வல் தமிழில் அறிமுகமாகிறார். அண்ட்ரூவ்ஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்.‬

‪          கொலைகாரன் படத்தின் பத்ரிகையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் வைத்து நடைபெற்றது. இதில் படத்தின் நாயகி ஆஷிமா நர்வல் மேடையேறி பேசும்போது நாயகன் விஜய் ஆண்டனியை மேடையேறி தன்னோடு நடனமாடுமாறு அழைத்தார். முதலில் தன்னுடைய கூச்ச சுபாவத்தால் மறுத்தாலும் பின்னர் மேடையேறி எல்லோரும் ரசிக்கும் வண்ணம் சிறப்பாக நடனமாடினார். நாயகி ஆஷிமா சில நடன அசைவுகளை அவரிடம் செய்து காண்பித்த பின்னர் இருவரும் “ கொலைகாரன் “ படத்தில் இடம்பெறும் மெலடி பாடலுக்கு ஏற்றார் போல் நடனமாடினர். கொலைகாரன் திரைப்படம் தெலுங்கில் “ கில்லர் “ எனும் பெயரில் வெளியாகவுள்ளது. கில்லர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அஷிமாவுடன் நடிகர் விஜய் ஆண்டனி ஆடிய  வீடியோ தெலுங்கு மீடியாவில் மிகவும் பிரபலமாகி ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ‬









No comments:

Post a Comment