Featured post

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

 பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு  வாழ்நாள் சாதனையாளர் விருது ! நடிகர் சங்கம் அறிவிப்பு! பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம். 1950 முதல் 1960...

Showing posts with label actor Vijay Antony. Show all posts
Showing posts with label actor Vijay Antony. Show all posts

Saturday, 23 November 2019

இறுதி கட்ட படப்பிடிப்பில் அக்னி சிறகுகள்


அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்‌ஷரா ஹாசன் என வியப்பில் ஆழ்த்தும் நட்சத்திர கூட்டம் இணைந்திருக்கும் “அக்னி சிறகுகள்” திரைப்படம், 


இந்த ஆண்டின் உச்சபட்ச எதிர்பார்ப்பிகுரிய படமாக இருக்கிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.  படத்தில் இணைந்திருக்கும் நட்சத்திரங்களால் மட்டுமன்றி படம்பிடிக்கப்படும் வித்திசயாசமான லொகேஷன்களாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது “அக்னி சிறகுகள்”. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் கொல்கத்தாவில் படமாக்கப்பட்டது. படத்தின் முக்கியமான பொறிபறக்கும்  ஆக்‌ஷன் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டது. இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு ரஷ்யாவின் மாஸ்கோ, பீட்டர்ஸ்ஃபர்க் ஆகிய இடங்களிலும் அதனைத் தொடர்ந்து  கஜகஸ்தானின் அல்மாட்டி நகரிலும்  படமாக்கப்பட்டு வருகிறது. உச்சபட்ச ஆச்சர்யமாக கஜகஸ்தானில் படமாக்கப்படும் இந்தியாவின் முதல் படம் எனும்  பெருமையை “அக்னி சிறகுகள்” பெற்றுள்ளது. கண்களுக்கு விருந்தளிக்கும் பிரமாண்ட விஷுவல்களும்,  அசரவைக்கும் மார்ஷியல் ஆர்ட்ஸ் சண்டை காட்சிகளும் அங்கு படமாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களை வியப்பிலாழ்த்தும் பெரு விருந்து காத்திருக்கிறது. தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் T சிவா படம் உருவாகி வந்திருக்கும் விதத்தால்  மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார். இயக்குநர் நவீனின் அட்டகாச கதைசொல்லல் முறையும், அவரது குழு படத்தை ஒவ்வொரு அங்குலமாக செதுக்கியுள்ளதையும் பெருமளவு பாராட்டியுள்ளார். மேலும் இப்படம் கண்டிப்பாக தமிழ் ரசிகர்களுக்கு  முன்னெப்போதும் கண்டிராத ஒரு பிரமாண்ட திரில்லர் அனுபவத்தை  உலகத்தரத்தில் தரும் படைப்பாக இருக்கும் என்றார்.

அக்னி சிறகுகள் படத்தில் ரெய்மா சென், பிரகாஷ் ராஜ், ஜே எஸ் கே ஆகியோருடன் மேலும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள் நடராஜன் சங்கரன் இப்படத்திற்கு இசையமைக்க, K A பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Saturday, 24 August 2019

Infiniti Film Ventures Acquires Vijay Antony’s Khaki



Infiniti Film Ventures acquires Vijay Antony’s Forthcoming film KHAKI Chennai, August 23, 2019: Infiniti Film Ventures which has commenced a film of Director Vijay Milton and Vijay Antony combination has acquired Vijay Antony’s forthcoming film KHAKI directed by experienced director A. Senthil Kumar.

Khaki a multi-starrer starring Vijay Antony, Sathyaraj, Srikanth, Indhuja, Eswari Rao, John Vijay, Ravi Maria in pivotal roles started rolling in June 2019 and more than 50% of the film was already shot in fantastic locations like Shimoga, Bengaluru and Chennai. Currently the film is in the second phase of shooting and is expected to be completed by October 2019. The film has cinematography by popular cinematographer Manoj Paramahamsa, music by Augath, lyrics by ‘Kaviperarasu’ Vairamuthu, action by Kanal Kannan -Shyam and editing by Ruben. The film is written and directed by A. Senthil Kumar. The film is a family entertainer in the backdrop of action.

Team of M/s Infiniti Film Ventures, after having watched the edited version of the film shot till date and understanding the merit of the story have acquired all the rights of the film and shall be backing the film in marketing, distribution and exploitation along with the producer M/s Open Theatre.

The team is targeting to release the first look in September, teaser/trailer in October 2019 and hit the screens in January 2020.

Infiniti Film Ventures is targeting a January 2020 release Film Details:
Title: Khaki
Genre: Family Entertainer
Cast: Vijay Antony, Sathyaraj, Srikanth, Indhuja, Eswari Rao, John Vijay, Ravi Maria Sun Tv Fame ‘Kathir and many others.
Music: Augath
Lyrics: ‘Kaviperarasu’ Vairamuthu
Cinematography: Manoj Paramahamsa
Action Choreography: Kanal Kannan - Shyam
Producer-Director: A. Senthil Kumar
Presented by: M/s INFINITI FILM VENTURES, Mr. Kamal Bohra, Lalitha Dhananjayan, B. Pradeep and Pankaj A.
Film Status: Under shooting
Release plan: January 2020
PRO: Nikil Murukan

Wednesday, 17 July 2019

விஜய் ஆண்டனி நடிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது .

 விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் - T . D ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது .

விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் - T . D ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது .

பிரசாந்த் நடித்த  ஜாம்பவான் , அர்ஜுன் நடித்த  வல்லக்கோட்டை ஆகிய படங்களின் தயாரிப்பை தொடர்ந்து  சசிகுமார் ,நிக்கி கல்ராணி நடிப்பில் T.D ராஜா தயாரிப்பில் வெளியாக இருக்கும் படம்  " ராஜ வம்சம் " .இது  T. D ராஜாவின் மூன்றாவது  படமாகும் . தற்போது மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன்
இயக்கும் இப்படம் T .D ராஜாவின் நான்காவது தயாரிப்பாகும் .

அரசியல் கலந்த த்ரில்லர் படமான இப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார் .

உரு படத்திற்கு இசையமைத்த ஜோகன் என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.  N .S உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறர். இணை தயாரிப்பு - ராஜா சஞ்சய் .

படக்குழுவினர் கலந்துகொண்டு இப்படத்தின் பூஜை சிறப்பாக நடைபெற்றது .
இதர நடிகை - நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக்குழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

தொழிநுட்பக்குழு : 

இயக்கம் - ஆனந்த கிருஷ்ணன் ,
தயாரிப்பு - T D ராஜா,
இணைத்தயாரிப்பு - ராஜா சஞ்சய்,
இசை - ஜோகன்,
ஒளிப்பதிவு - N S உதயகுமார்,
மக்கள்தொடர்பு - ரியாஸ் கே அஹமது.




Thursday, 13 June 2019

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு பயணத்தில் நடிகர் விஜய்ஆண்டனி !


தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறை சார்பாக இன்று ஜூன் 12 குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில்  தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர். நிலோபர் கபில்  மற்றும்  இசையமைப்பாளரும், நடிகருமான விஜய்அண்டனி, முன்னாள் பெப்சி தலைவரும், திரைப்பட தயாரிப்பாளருமான பெப்ஸி சிவா ஆகியோர் கலந்துகொண்டு " மெட்ரோ தொடர்வண்டி விழிப்புணர்வு பயணத்தில் பள்ளிக் குழந்தைகளுடன் டி.எம்.எஸ்சிலிருந்து ,ஏர்போர்ட் வரை மெட்ரோ ரயிலில் பயணித்தனர்.
விழாவில் விஜய் ஆண்டனி பேசியது..
எந்த குழந்தையும் சிறு வயதில் வேலைக்கு செல்ல கூடாது. நல்லா படிக்கணும் சந்தோஷமா வாழனும். குழந்தைகள் உருவாக்குவதுதான் வருங்கால இந்தியா அதனால் குழந்தைகளை படிக்க வைக்கவேண்டும். குழந்தை தொழிலாலர் இல்லாத நிலை வரவேண்டும் என்றார்














Wednesday, 5 June 2019

நடிகர் விஜய் ஆண்டனியை விழா மேடையில் முதல் முறையாக ஆடவைத்த ஆஷிமா


  பாப்டா நிறுவனம் மூலம் திரு. தனஞ்ஜெயன் வெளியிடும் திரைப்படம் ” கொலைகாரன் “. விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் மூலம் நடிகை ஆஷிமா நர்வல் தமிழில் அறிமுகமாகிறார். அண்ட்ரூவ்ஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்.‬

‪          கொலைகாரன் படத்தின் பத்ரிகையாளர் சந்திப்பு ஹைதராபாத்தில் வைத்து நடைபெற்றது. இதில் படத்தின் நாயகி ஆஷிமா நர்வல் மேடையேறி பேசும்போது நாயகன் விஜய் ஆண்டனியை மேடையேறி தன்னோடு நடனமாடுமாறு அழைத்தார். முதலில் தன்னுடைய கூச்ச சுபாவத்தால் மறுத்தாலும் பின்னர் மேடையேறி எல்லோரும் ரசிக்கும் வண்ணம் சிறப்பாக நடனமாடினார். நாயகி ஆஷிமா சில நடன அசைவுகளை அவரிடம் செய்து காண்பித்த பின்னர் இருவரும் “ கொலைகாரன் “ படத்தில் இடம்பெறும் மெலடி பாடலுக்கு ஏற்றார் போல் நடனமாடினர். கொலைகாரன் திரைப்படம் தெலுங்கில் “ கில்லர் “ எனும் பெயரில் வெளியாகவுள்ளது. கில்லர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அஷிமாவுடன் நடிகர் விஜய் ஆண்டனி ஆடிய  வீடியோ தெலுங்கு மீடியாவில் மிகவும் பிரபலமாகி ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ‬









Wednesday, 10 April 2019

இந்தி தயாரிப்பாளர்களுக்கு தெரிந்தது, கன்னட இயக்குனர்களுக்கு தெரிந்தது, ஏன் தமிழ் சினிமாகாரர்களுக்கு தெரியவில்லை - நடிகை ஆண்ட்ரியா ஆதங்கம்



"தமிழ் சினிமாவின் சகலகலாவல்லி" - ஆண்ட்ரியாவிற்கு புகழாரம் சூட்டிய விஜய் ஆண்டனி!!

இந்தி தயாரிப்பாளர்களுக்கு தெரிந்தது, கன்னட இயக்குனர்களுக்கு தெரிந்தது, ஏன் தமிழ் சினிமாகாரர்களுக்கு தெரியவில்லை - நடிகை ஆண்ட்ரியா ஆதங்கம்


நடிகை ஆண்ட்ரியா, தான் நடிக்கிற ஒவ்வொரு படத்திலும் அழுத்தமாக முத்திரை பதிக்கக் கூடியவர். அந்த வரிசையில் தற்போது, அதிரடி காவல் அதிகாரியாக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் "மாளிகை". "சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட்" சார்பாக கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் தில்.சத்யா.


இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர்கள் கமல் போரா மற்றும் ராஜேஷ் குமார் இருவரும் வந்திருக்கும் அனைவரையும் வரவேற்று பேசி தொடங்கி வைத்தார்கள்.

அதனைத் தொடர்ந்து இயக்குனர் தில் சத்யா பேசும் போது,

"இந்தப்படத்தை இயக்கியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழில் எனக்கு இது முதல் படம். இந்தப்படத்தில் ஆண்ட்ரியா ஆங்கிலப் பட நாயகியைப் போல் நடித்துள்ளார். கதாநாயகனாக நடித்திருக்கும் ஜே.கே, இந்தப்படம் கதாநாயகிக்குதான் முக்கியத்துவம் என்றாலும், நல்லக் கதையம்சம் கொண்ட படம் என்பதற்காக நடித்துக் கொடுத்தார். கே.எஸ்.ரவிக்குமார் சாரைப் பற்றி நான் சொல்லவே வேண்டாம். அவர் உண்மையிலேயே பெரிய மனிதர். சகஜமாக பழகி நடித்துக் கொடுத்தார். படத்தில் வேலை செய்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு நல்ல ஆக்‌ஷன் திரில்லர் படம், ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்" என்றார்.


நடிகை ஆண்ட்ரியா பேசும்போது, 

"இந்தப்படம் முதலில் கன்னடத்தில் பண்ண வேண்டிய படமாகத்தான் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் ஆண்ட்ரியாவிற்கு தமிழில் மார்க்கெட் இருக்கு. அதனால், தமிழில் எடுக்க வேண்டும் என்று சொன்னார். ஒரு இந்தி தயாரிப்பாளர், கன்னட இயக்குனர் இருவருக்கும் எனக்கு தமிழில் மார்க்கெட் இருக்கிறது என்று தோன்றி இருப்பது மகிழ்ச்சி. ஆனால் இங்கு இருப்பவர்களுக்கு ஏதும் தோன்றவில்லை. நான் நிறைய பெரிய இயக்குனர்களிடம் வேலை செய்திருக்கிறேன். இந்தப் படத்தின் அனுபவம் முக்கியமானது. நாயகிக்கு முக்கியத்துவம் அதிகமுள்ள படத்தில் நடித்ததிற்காக ஹீரோ ஜே.கே-வுக்கு எனது நன்றிகள். ஆலி சார் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் சார் இருவருக்கும் நன்றி. இந்தப்படத்தில் நான் நடிக்க முக்கிய காரணம் எனக்கு இரண்டு வேடம் என்பதால் தான். இந்த மாதிரியான கதை ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்" என்றார்.


இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது, 

‘இந்தப்படத்தின் இயக்குனர் தில் சத்யாவிற்கு நிறைய விசயங்கள் தெரிந்திருக்கிறது. ஆனாலும் என்னிடம் யோசனைகள் கேட்பார். நான் இப்போது ஏழு தமிழ் படங்களில் நடித்து வருகிறேன். இந்தப் படத்தில் நான் கமிஷனர் வேடத்தில் நடிக்கிறேன். இந்த இயக்குனர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்தது. அதனால் தான் உடனேயே நடிக்க சம்மதித்தேன். இப்படத்தின் ஹீரோ ஜே.கே அழகாக இருக்கிறார். ஆண்ட்ரியா திறமையானவர். நடனம், பாட்டு, நடிப்பு என பன்முக திறமை அவரிடம் உண்டு. அவர் நடிப்பில் தரமணி படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதைப்போல் இந்தப்படத்திலும் நன்றாக நடித்திருக்கிறார்’ என்றார்.

இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில்,

"நான் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் இது மிகப்பெரிய நிகழ்ச்சியாக இருக்கிறது. படத்தின் டைட்டில், டீசர், இந்த விழா என எல்லாமே பாசிட்டிவாக இருக்கிறது. இந்தக்கதை மிக வித்தியாசமாக அமைந்திருப்பதால் நிச்சயம் இந்தப்படம் ஜெயிக்கும். தயாரிப்பாளர் கமல்போரா சார் இன்னும் நிறைய படங்களை தமிழில் தயாரிக்க வேண்டும். சகலகலாவல்லி ஆண்ட்ரியா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்தப்படத்திலும் அவர் கலக்கி இருப்பார் என்று நம்புகிறேன். இந்தப்படத்தின் இயக்குநருக்கு மிகப்பெரிய வாழ்த்துகள்" என்றார்.

Friday, 29 March 2019

Vijay Antony's Tamizharasan movie is to be completed at the end position ...

 SNS. Kausalya Rani is making a big budget film for the movie "Tamizharasan"


Vijay Antony is the hero . Ramya Nambeesan is the heroine. And Sureshgopi Radharavi Sonu Sood, Yogibabu, Sangeetha Kasthuri Robo Shankar, Chayasing Madhumitha , YG.Mahendran, Kadhir Srilekha, Sreeja, KR Selvaraj, Sentrayan Kumki Aswin, Major Gautam, Swami Nathan, MunishKhanth, Rajkrishna, Master Pranav is the son of director Mohan Raja are the other artists...



Cinematography - R. D. Rajasekar
Music - Ilayaraja
Songs - Palanibarathi, Jairam
Art - Milan
Stunt - anal arasu
Editing - Bhuvan Chandrasekar
Dancing - Brinda Satish
Production  executive - Raja Sridhar
Story Screenplay Dialogue and direction - Babu Yogeswaran
Production -  Kausalya Rani 



Most of The shooting of the film took  in Chennai ... The shooting of a two-stage of schedule  ended ...In the next few days, the shooting begins and ends.Tamizharasan is the action packed entertain  film.





Friday, 15 March 2019

இரண்டாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சங்கீதா தமிழரசன் படத்தில் நடிக்கிறார்.


எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்  " தமிழரசன் "
இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.
மற்றும் சுரேஷ்கோபு ராதாரவி சோனு சூட்,யோகிபாபுரோபோ சங்கர்கஸ்தூரி சாயாசிங் மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன்,கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன்,  முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார். மிக முக்கிய வேடத்தில் சங்கீதா நடிக்கிறார்...இரண்டாண்டுகளுக்கு முன்பு வந்த நெருப்புடா படத்தில் நெகடிவ் வேடத்தில் நடித்து தூள் கிளப்பிய சங்கீதா அதற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்த சங்கீதா  மீண்டும் இந்த படத்தில் நடிக்கிறார்.
இது பற்றி சங்கீதாவிடம் கேட்டோம்...
எனக்கேற்ற கதாபாத்திரம் சரியாக இல்லாததால் நிறைய படங்களை நானே ஒதுக்கி விட்டு ஒதுங்கி இருந்தேன்.
இந்த படத்தில் என் கேரக்டர் மிகவும் பரபரப்பாக பேசப் படும் விதமாக இருந்ததால் ஒத்துக் கொண்டேன். மிகப் பெரிய மருத்துவமனையை நடத்தும் டாக்டர் வேடம் இதுஇதில் என் கதாபாத்திரம் பவர் புல்லானது என்றார்..



ஒளிப்பதிவு -  ஆர்.டி.ராஜசேகர்
இசை  -   இளையராஜா
பாடல்கள்  -  பழனிபாரதிஜெய்ராம்
கலை  -   மிலன்
ஸ்டண்ட்  -   அனல் அரசு
எடிட்டிங்   -   புவன் சந்திரசேகர்
நடனம்   -      பிருந்தா சதீஷ்
தயாரிப்பு மேற்பார்வை   -     ராஜா ஸ்ரீதர்
கதை திரைக்கதை வசனம் இயக்கம்  -   பாபு யோகேஸ்வரன்
தயாரிப்பு  -    கெளசல்யா ராணி
படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது...

Saturday, 9 March 2019

தமிழரசன் படப்பிடிப்பில் மகளீர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடினர்

விஜய் ஆண்டனி நடிக்க பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் கவுசல்யாராணி தயாரிக்கும் தமிழரசன் படப்பிடிப்பில் மகளீர்  தினத்தை கேக் வெட்டி கொண்டாடினர்...