Featured post

அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின்

 *அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின் சுயதரிசை கதை ‘ஸ்மோக்’ வெப்சீரியஸ்.* *முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை சோனா* தென்னிந்திய ...

Tuesday 17 September 2019

மனம் நலம்குன்றிய இளைஞனை பாடவைத்த இயக்குனர் சுசீந்திரன்

மனம் நலம்குன்றிய இளைஞனை பாடவைத்த இயக்குனர் சுசீந்திரன்.  அரோல் கொரெல்லி இசையமைப்பில் சாம்பியன் படத்திற்காக பாடினார்.

எப்போதும் புது முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குனர் சுசீந்திரன் மற்ற படங்களைப் போலவே 'சாம்பியன்' படத்திலும்  புது முகங்களை வைத்து இயக்கியிருக்கிறார். நான் மகான் அல்ல, பாண்டியநாடு படங்கள் வரிசையில்.. பழிவாங்கல் கதை பழிவாங்கல் கதையாக சாம்பியன் படம் உருவாகிவருகிறது.
பிரபல தொலைகாட்சியான zeeதமிழ் மியூஸிக் ரியாலிடி ஷோ மூலம் மக்கள் அனைவரையும் கவர்ந்தவர் கார்த்திக் என்ற மனம் நலம்குன்றிய இளைஞர். கார்த்திக் அரங்கத்திற்குள் நுழைந்ததிலிருந்து  பாட்டு பாடி முடிப்பது வரை பார்வையாளர்களின் கரகோஷம் அவரையும் அவரது பெற்றோரையும் மெய்சிலிர்க்க வைக்கும். அவரது குரலில் அப்படியொரு வசீகரம் இருக்கும். அந்த அளவிற்கு நேர்த்தியாக பாடக்கூடிய  19 வயது  இளைஞனை உலகம் முழுக்க அறியவைக்க .. முதல் முறையாக பாடகராக , சாம்பியன் படத்தில் அறிமுகப்படுத்துகிறார் இயக்குனர் சுசீந்திரன். 
எல்லோரையும் மயக்கும் அவர் பாடியா பாடல் வரிகள்..

பல்லவி:

ஆண்டவன் தூரிகையில் 
நீ மானுட ஓவியம்.
அரைநொடி கோபத்திலும் 
உன் வண்ணம் போய்விடும்.

யானைபோல் தோன்றும் கோபம் 
எறும்பாக தேய்ந்தே போகும்.
காத்திரு காத்திரு...

ஆத்திரம் சேர்த்தே வைக்கும் 
பாத்திரம் இல்லை நெஞ்சம்
ஒருவழி பாதை வாழ்க்கை மறவாதே.

மறவாதே மனமே 
சிறு தவறாலே பெருந்துயராகும் 
மறவாதே மனமே வாழ்விலே.

மறவாதே மனமே 
உன் நிழல் கூட உன் கால்வாரும்
மறவாதே மனமே வாழ்விலே.

சரணம்:

சூழ்நிலையின் கையில் நீயும்
சோழி என மாறிடலாமா...

காற்றில் தூசி போல்
உன் காலம் போவதா...

காய்ச்சு வைத்த இரும்பின் மேலே 
ஊற்றிடும் நீரை போலே
சீறிப் பாய்வதா...
உனைக் கோபம் ஆள்வதா...

யாரோ ஒரு இனியவனை
உன் சினம் பெரும் பகை ஆக்கிவிடும்.
யாரோ ஒரு கொடியவனை
புன்னகை பூவென மாற்றிடும்.

என்னும் பாடல் வரிகளை அழகாக எழுதியிருக்கிறார் பாடலாசிரியர் விவேகா. இப்பாடலை பாடியதன் மூலம் திரையுலகில் பாடகராக கால் பதித்துள்ளார் தன்னம்பிக்கையின் நாயகன் கார்த்திக்.

'சாம்பியன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் விஷ்வா. விஷ்வாவிற்கு ஜோடியாக மிருநாளினி மற்றும் சௌமியா கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள். இவர்களைத்தொடர்ந்து பயிற்சியாளராக அஞ்சாதே கதாநாயகன் நரேன். மற்றொரு பயிற்சியாளராக இந்தியன் புட்பால் டீம் கேப்டன் ராமன் விஜயன் நடித்திருக்கிறார். இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் இப்படத்தில் கதாநாயகனின் தந்தையாக நடித்திருக்கிறார். 

பிசாசு, துப்பறிவாளன், அண்ணனுக்கு ஜெய் போன்ற வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த அரோல் கொரெல்லி சாம்பியன் படத்திற்கும் இசையமைத்துள்ளார். சுஜீத் சாரங்கா ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் துருவங்கள் 16 படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர். தியாகு எடிட்டிங் செய்ய சேகர் இப்படத்திற்கு கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். சாம்பியன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment