Featured post

இறுதிக்கட்ட பணிகளில் ஜெய், சத்யராஜ், யோகிபாபு இணைந்து நடிக்கும்

 இறுதிக்கட்ட பணிகளில் ஜெய், சத்யராஜ், யோகிபாபு இணைந்து நடிக்கும்,  பேபி & பேபி !! விரைவில் திரையில் அழகான ஃபேமிலி எண்டர்டெயினர் பேபி &am...

Friday 13 December 2019

சர்வதேச ஆர்.எஸ்.ஜி. சமூக சேவை மைய நிறுவனர்,

சர்வதேச ஆர்.எஸ்.ஜி. சமூக சேவை மைய நிறுவனர், தலைவர் திரைப்பட          தயாரிப்பாளரும், நடிகருமான கோபிகாந்தி நடிகர் ரஜினிகாந்திற்கு பிறந்த நாள் வாழ்த்து.

சென்னை, டிசம்பர் : 12, சர்வதேச ஆர்.எஸ்.ஜி. சமூக சேவை மையத்தின் நிறுவனர், தலைவர், திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான கோபிகாந்தி வெளியிட்டுள்ள அறிக்கைச் செய்தியில்  கூறியுள்ளதாவது, சாதாரண பேருந்து நடத்துனராக இருந்து  தனது அதீத ஆசையாலும்,  ஆர்வத்தாலும் தான் நடிகனாக வேண்டும் என்ற ஒரே லட்சியத்தாலும் பேருந்து நடத்துனர் பணியை விட்டு திரைப்பட கல்லூரியில்  நடிப்பதற்கான  நுட்பங்களை               தனது அனுபவ படிப்பாலும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்கான சென்னையில் வந்து  தனது வாழ்விற்காக பல்வேறு  பணிகளை மூட்டை தூக்குவது, கட்டிட வேலை பார்ப்பது                   இப்படி பல்வேறு பணிகளை செய்து கொண்டே தனது லட்சியக் கனவான நடிப்பு வாய்ப்பை             தேடிக் கொண்டே இருந்த அவருக்கு ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் சினிமா நடிப்பு                  வேலையே வேண்டாம் என்று முடிவெடுத்த வேலையில் நடிப்பு வாய்ப்பு அவரை தேடிச்              சென்றது அவ்வாய்ப்பை சரியாக பிடித்துக் கொண்டார்.  அதன் மூலம் தனது திறமைகளையும், அனுபவங்களையும் வெளிப்படுத்தினார் சில வேடங்களிலும், வில்லனாகவும் நடித்தார்.                         எந்த வித கதாபாத்திரமானாலும் அதை சரியாக வெளிப்படுத்தி மக்கள் மனதில்    

                          
 இடம் பிடித்தார்.  இப்படி சிறிய, சிறிய வேடங்களில் நடித்து கதாநாயகனாக உயர்ந்தார்.                        அதில் தனது அபார திறமைகளை வெளிப்படுத்தி சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார் கடவுள்                 அவரை சினிமாவில் ஒரு உயர்ந்த இடத்தை கொடுப்பதற்காகவே பல்வேறு கஷ்டங்களையும், அவமானங்களையும் கொடுத்துள்ளார் என்பதே அவர் வாழ்வின் அர்த்தம் இப்படி தனது முப்பத்தைந்தாவது வயதில் இருந்து முப்பத்து ஐந்து வருடங்களாக  167 படங்களில் பல்வேறு பரிணாமங்களை வெளிப்படுத்தி அவரை ரசிக்கும் அனைவரையும் அவரைப் போல் இருக்க           செய்து வருவதே சிறப்பான விஷயமாகும் தான் ஒரு சாதாரண பேருந்து நடத்துனராக                       தனது வாழ்வை துவங்கி இன்று திரைப்படத் துறையின் மூலமாக கோடீஸ்வரராக                         உயர்ந்தவர் ரஜினிகாந்த் இதற்கு பின் பல்வேறு கஷ்டங்களையும், அவமானங்களையும்                 சந்தித்து இன்று ஒரு உயர்ந்து  இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க  
                          
 ஒன்றாகும்.  இன்று ரஜினிகாந்த் தனது எழுபதாவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்                   அவருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட அவர் உடல்                       நலம், மன நிம்மதி, தொழில் வளம் பெற்று அனைவருக்கும் சேவை செய்ய வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன் மேலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாகக்                  கூறியுள்ளார் அவர் பணம், புகழ், பேர் அனைத்தையுமே மக்கள் சிறப்பாக வழங்கியுள்ளார்கள்.  அவர் அரசியலுக்கு வர வேண்டும் வந்து இனி பணம், புகழ், பதவி எதையும் எதிர்பாராமல் மக்களுக்கு உண்மை உணர்வோடு சேவை செய்ய வேண்டும் அந்த எண்ணத்துடன் அவர் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக அத்தனை தொகுதிகளிலும் மக்கள் அவர் சார்ந்தவர்களை கண்டிப்பாக ஜெயிக்க வைப்பார்கள்.  அதற்காக சர்வதேச ஆர்.எஸ்.ஜி. சமூக சேவை                     மையமும் பாடுபடும் இவ்வாறு கோபிகாந்தி வெளியிட்டுள்ள அறிக்கைச் செய்தியில் கூறியுள்ளார்.

          செய்தி வெளியீடு
ஆர்.எஸ்.ஜி. பிக்சர்ஸ் நிறுவனம்,
              சென்னை.

No comments:

Post a Comment