Featured post

Aaryan Movie Review

  Aaryan Movie Review Aaryan Movie Rating: 4.5/5  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம aaryan படத்தோட review அ தான் பாக்க போறோம். Vishnu விஷால், செல்வ...

Friday, 27 December 2019

அமெரிக்காவில் *’சூப்பர் ஸ்டாரின் தர்பார்’* - ஜனவரி 08ல் பிரிமீயர் ஷோ

அமெரிக்காவில் *’சூப்பர் ஸ்டாரின் தர்பார்’* - ஜனவரி 08ல் பிரிமீயர் ஷோ

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்பார்’ திரைப்பட பிரீமியர்  காட்சியை பிரைம் மீடியா, கல் ராமன் மற்றும் ஜி2ஜி1 இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து, வருகின்ற ஜனவரி 08ம் தேதி அமெரிக்காவில் வெளியிடுகிறது. 







வட அமெரிக்காவின் முன்னணி ஊடக மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான பிரைம் மீடியா, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இத்துறையில் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்து வருகிறது. மிகக் குறைந்த வருடங்களிலேயே இந்நிறுவனம் சுமார் 200 திரைப்படங்களை வெளியிட்ட பெருமையை பெற்றிருக்கிறது. 

சூப்பர் ஸ்டாரின் தர்பார் திரைப்படத்தை அமெரிக்காவில் வெளியிடுவதற்கு எங்களுக்கு மிகவும் பேருதவியாக இருந்தவர் திரு. கல் ராமன், தலைமை டிஜிட்டல் அதிகாரி, சாம்சுங் அமெரிக்கா. இவர் ஒரு தமிழர். அமெரிக்காவில் வாழ்ந்து வரும் ஒரு மதிநுட்பமான தொழிலதிபர்.
வருகின்ற ஜனவரி 08ம் தேதி பிரிமியராகவுள்ள இப்படம், சூப்பர் ஸ்டாருடன் இயக்குனர் முருகதாஸ் இணைந்துப் பணியாற்றும் முதல் படம் என்பதால் திரைப்பட ரசிகர்களிடையே ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளும் சேர்த்து, அமெரிக்காவெங்கும் சுமார் 250 க்கும் மேற்பட்ட திரைகளை ஆரம்பக் கட்டமாக கொண்டிருக்கும் இப்படக்குழு, இந்த எண்ணிக்கை மதிப்பீடுகள் நிச்சயமாக அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறது. 
ரஜினிகாந்தின் மிகவும் பிரபலமான வெளிநாட்டு சந்தையான அமெரிக்காவில், அதுவும் வேறு எந்த கோலிவுட் நட்சத்திரங்களுடனும் ஒப்பிடமுடியாத இணையற்ற சந்தை மதிப்பைப் பெற்றிருக்கும் சூப்பர் ஸ்டாரின் தர்பாரை வழங்குவதற்கான வாய்ப்பினை வழங்கிய வெளிநாட்டு விநியோகஸ்தர் பார்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு பிரைம் மீடியா தனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறது.  

ரசிகர்களிடையே மிகுந்த பரபரப்பும், எதிர்பார்ப்பும் கொண்டிருக்கும் தர்பார் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஒரு சிறந்த வசூலை அள்ளித்தரும் எனவும் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.  

சூப்பர் ஸ்டாரின் தளபதி (1991) திரைப்படத்தை தொடர்ந்து, அதாவது 28 ஆண்டுகளுக்கு பின், இப்படத்தை நேர்த்தியாக காட்சிப்படுத்திய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், சூப்பர் ஸ்டாருடன் இணைந்திருக்கிறார். மேலும் இசை அமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரின் இசைக்கு கிடைத்திருக்கும் மதிப்பாய்வுகளும் ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிறது. 

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்பார்’ திரைப்படம் வருகின்ற 08 ஜனவரியில் பிரிமீயராகிறது.

No comments:

Post a Comment