Featured post

Megastar Chiranjeevi’s Emotional Message On Mana Shankara Vara Prasad Garu

 Megastar Chiranjeevi’s Emotional Message On Mana Shankara Vara Prasad Garu Blockbuster Success Megastar Chiranjeevi once again proved why h...

Wednesday, 11 December 2019

நடிகர் "ஜெய்" நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ தான் மனம்

நடிகர் "ஜெய்" நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ தான் மனம் திறக்கிறார் "BREAKING NEWS" திரைப்படத்தின் இயக்குனர் "ஆண்ட்ரு பாண்டியன்"

ஹீரோ "ஜெய்" நிஜ வாழ்க்கையிலும் எனக்கு சூப்பர் ஹீரோவாக தான் தெரிகிறார்...

"பிரேக்கிங் நியூஸ்" படத்தின் இயக்குனர் ஆண்ட்ரு பாண்டியன் கூறுகையில்  நான் முதலில் கதையை அவரிடம் சொல்லி முடித்த உடனே சிறிதளவு கூட யோசிக்காமல் நான் இந்த படத்தை பண்றேன் என்று உடனே ஒத்துக்கொண்டார்,  ஒரு முதல் பட இயக்குனர்க்கு இதைவிட வேறு என்ன சந்தோஷம் இருக்க முடியும்,






தயாரிப்பாளர் "திருக்கடல் உதயம்" சாருடன் ஜெய் பேசும் போதும் மிக அக்கறையுடன் இந்த படம்  பிரம்மாண்டமாக வரும் உதயம் சார் என்று கூறினார்...

நூறு சதவீதம் "ஜெய்" முதல் பட இயக்குனராகிய எனக்கு மிகவும் Flexible லாகவும் என் எண்ணங்களை நன்கு புரிந்தவராகவும் இருந்தார், எந்த இடத்திலும் தன்னால் எந்த ஒரு தாமதமும் ,தொய்வும் வந்துவிடக்கூடாதென்றும் மிகவும் கவனமாக உழைப்பார்..

நான் ஒரு சீன் அவருக்கு சொல்லும் போதே அதை சரியாக புரிந்து கொண்டு தன்னை அந்த சீன்ஸ்க்கு  வேண்டிய கெட்டப், மேக்கப், எக்ஸ்பிரஷனை சரியானதாக  ரெடி பண்ணி என்ன கேரவனுக்குள் கூப்பிட்டு ஒரு முறை செய்துகாட்டுவர், நான் ஏதாவது  இன்னும் கொஞ்சம் பெட்டரா பண்ணலாம் என்று சேஞ்ச் சொன்னாலும் உடனே ஓகே பிரதர் நீங்க சொல்ற மாதிரி இன்னும் கொஞ்சம் அட் பண்ணிக்கலாம் என்று சொல்லுவார்.

இவர் அவரது வேலையை மிகவும் ஆர்வத்தோடு மற்றும் மன மகிழ்ச்சியோடு செய்யக்கூடிய நபர்,அதே போல் படப்பிடிப்பு தளத்தியிலும் மிகவும் அமைதியாக இருக்கக்கூடியவர், உண்மையிலேயே சொல்ல போனால் கடவுள் கிருபை எனக்கு இருப்பதால் தான் "ஜெய்" என்னோடைய முதல் படத்துக்கு ஹீரோவாக கிடைத்திருக்கிறார் இவ்வாறு இயக்குனர் "ஆண்ட்ரு பாண்டியன்" கூறினார்..              

No comments:

Post a Comment