Featured post

Delhi Sharks Clinch Title !!!!

Delhi Sharks Clinch Title !!!!   Delhi Sharks emerged victorious at the DAVe BABA VIDYALAYA Tamil Nadu Open Trios Tenpin Bowling Tournament ...

Tuesday, 17 December 2019

ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் “ஹீரோ“ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் C வில்லியம்ஸ் !

ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் “ஹீரோ“ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் 
C வில்லியம்ஸ் ! 

மிக குறுகிய காலத்தில் தமிழ் சினிமா ஒளிப்பதிவு தளத்தில் மிகவும்  பிரபலமான ஒருவராக  மாறியிருக்கிறார் ஜார்ஜ் C வில்லியம்ஸ். கதையின் மையத்தோடு இணைந்து திரையில் அவர் எழுதும் ஒளிக்கவிதைகள் இந்தியா முழுதும் கவனிக்கப்பட்டு பாரட்டுபெற்று வருகிறது. அவரது ஒளிப்பதிவில் விரைவில் வெளியாகவுள்ள “ஹீரோ” திரைப்படம் சிவகார்த்திகேயன், அர்ஜீன், அபய் தியோல், கல்யாணி ப்ரியதர்ஷன் எனும் நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பில் பெரும் எதிர்ப்பார்புக்குள்ளாகியுள்ளது


“ஹீரோ” படம் குறித்து ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் C வில்லியம்ஸ் பகிர்ந்துகொண்டதாவது...

“ஹீரோ” அதன் முன்னோட்டத்தில் சொல்லப்பட்டிருப்பது  போலவே நாட்டில் நிலவும் மிக முக்கியமான பிரச்சனையை எல்லோருக்கும் சென்று சேரும் விதத்தில் பேசும் படைப்பாக இருக்கும். தயாரிப்பாளர் கொட்டாப்பாடி J ராஜேஷ் இல்லையென்றால் இது எதுவுமே சாத்தியமாகியிருக்காது. அவரால் தான் இப்படம் பெருமளவு ரசிகர்களை சென்றடையும் வகையில் மிகப்பிரமாண்டமான முறையில் வெளியிடப்படுகிறது.  இப்போது முழுப்படமாக பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. ஆனால் மிகச் சிறு கருவாக இருந்த இந்தப் படத்தினை ஒவ்வொரு நடிகர்களும், ஒவ்வொரு தொழில் நுட்ப கலைஞர்களும் இணைந்து இந்தளவு  மிகப்பெரிய படமாக உருவாக்கியுள்ளார்கள். இந்தப்படம் ஒரு ஐடியாவாக உருவானதிலிருந்தே நான் இயக்குநர் மித்ரனுடன் இணைந்து  பயணிக்கிறேன். இது ஒளிப்பதிவாளராக படத்திற்கு பெரும் துணையாக இருந்தது. நண்பர்களுடன் இணைந்து வேலை செய்வது எளிதானது மேலும் அதற்கான பலன்களும் அதிகம். நான், மித்ரன், சிவகார்த்திகேயன் மூவரும்  நண்பர்களாக இருப்பதும் ஒத்த கருத்துகள் கொண்டிருப்பதும் படத்திற்கு மிகப்பெரும் பலமாக இருந்தது. சிவகார்த்திகேயனின் திரை ஆளுமை ஒப்பிடமுடியாத வசீகரம் கொண்டது. சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் அவர் நடிப்பின் இன்னொரு முகத்தை இப்படத்தில் காண்பார்கள். ஆக்‌ஷன் கிங் அர்ஜீன் மிகத் திறமையான நடிகர், அவரது நடிப்பு 

படத்தை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. அபய் தியோல், கல்யாணி ப்ரியதர்ஷன் இருவரும் தங்கள் நடிப்பால் படத்திற்கு புத்துணர்வூட்டியுள்ளார்கள். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்தில் இணைந்திருப்பது மிகப்பெரும் பலம். நாங்கள் அனைவருமே அவரின் தீவிர விசிறிகள். அவரின் இசை படத்தின் உயிர்ப்பை உறுதி செய்திருக்கிறது. இப்படத்தில் பணிபுரிந்திருக்கும் அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார், சண்டைப்பயிற்சியாளர் திலீப் சுப்பராயன், எடிட்டர் ரூபன் என அனைவரும் தங்கள் படமாக கருதி ஆத்மார்த்தமாக உழைத்திருக்கிறார்கள் அவர்கள் அனைவருக்கும் நன்றி. நாங்கள் அனைவரும் மிகச் சிறப்பான படத்தை தர கடுமையாக உழைத்திருக்கிறோம் படத்தை உருவாக்கும் போது நாங்கள் அடைந்த இன்பத்தை ரசிகர்கள் படம் பார்க்கும் போது அடைவார்கள் என உறுதியாக நம்புகிறேன் என்றார். 

KJR Studios சார்பில் கொட்டாப்பாடி J ராஜேஷ் தாயாரிப்பில் மித்ரன் R ஜவஹர் இயக்கியிருக்கும் “ஹீரோ” திரைப்படம் டிசம்பர் 20, 2019 அன்று வெளியாகிறது.

No comments:

Post a Comment