Featured post

அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின்

 *அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின் சுயதரிசை கதை ‘ஸ்மோக்’ வெப்சீரியஸ்.* *முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை சோனா* தென்னிந்திய ...

Thursday 13 February 2020

வணிகத் தலைவர்களுக்கான தொழில்முறை மேம்பாடு

வணிகத் தலைவர்களுக்கான தொழில்முறை மேம்பாடு, வலுவான வணிக இணைப்பு மற்றும் நண்பர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான உலகளாவிய தளமாக கார்ப்பரேட் கனெக்சன்ஸ் விளங்குகிறது*



























கார்ப்பரேட் கனெக்சன்ஸ் என்பது நிர்வாக நிலை தொழிலதிபர்களின் இணைப்புகளை விரைவுபடுத்துவதற்கான முதன்மை தளமாகும். இது உலகளாவிய வணிகத் தலைவர்களுக்குள் நிர்வாக இணைப்பை ஏற்படுத்துவதன் மூலம் சிறந்த வேலைவாய்ப்பை வழங்குகிறது. வணிக உறவுகளை வளர்ப்பதற்கும், மேம்பட்ட தொழில்முறை மேம்பாட்டு வாய்ப்புகளைப் பெறுவதற்கும், சக ஆலோசனைக் குழுக்களில் பங்கேற்பதற்கும் வணிகத்தலைவர்கள் இந்த கார்ப்பரேட் கனெக்சன்ஸில் சேர்கின்றனர்.

வணிகத் தலைவர்களைக் கொண்ட ஒரு கட்டமைக்கப்பட்ட இந்த அமைப்பானது மூலோபாய மற்றும் தந்திரோபாய உறவுகளை உருவாக்க நிர்வாகிகளுக்கு உதவுகின்றது. இதன் மூலம் கிடைக்கும் உறவுகள் அமைப்பின் மற்ற உறுப்பினர்களுக்கு நல்ல வியாபார உலகத்திற்கான கதவுகளைத் திறக்க உதவுகின்றன. 

மேலும், இந்த அமைப்பின் கலாச்சாரம் உறுப்பினர்களின் ஒவ்வொரு தொடுபுள்ளியையும் அவர்களின் பயணத்தின் மூலம் தூண்டுகிறது.  இதன் தடையற்ற மற்றும் எளிமையான செயல்முறைகள் உறுப்பினர்கள் தங்களுக்கிடையே அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்கவும், அவர்களின் வணிகங்கள் மற்றும் சமூக மாற்றத்திற்கான ஊக்கியாக இருக்கவும் உதவுகின்றன.

1.மூலோபாய இணைப்புகள்,2.உலகளாவிய வர்த்தக கூட்டணிகள், 3.பீட்டர் ஆலோசனைக் குழுக்கள், 4.மேம்பட்ட தொழில்முறை மேம்பாடு.
ஆகியவற்றிலிருந்து இதன் உறுப்பினர்கள் பயனடைகிறார்கள்.

இந்த கார்ப்பரேட் கனெக்சன்ஸில் உறுப்பினருக்கான அடிப்படை அளவுகோல்களாக சி-லெவல் நிர்வாகிகள் மற்றும் குறைந்தபட்சம் ரூ.30 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட வருடாந்திர வருவாயைக் கொண்ட வணிக உரிமையாளராக இருக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. 

மேலும், கார்ப்பரேட் கனெக்சன்ஸ் தற்போது 3 கண்டங்கள் மற்றும் 8 நாடுகளில் உள்ளது. மற்றும் எதிர்காலத்திற்கான ஆக்ரோஷமான வளர்ச்சித் திட்டத்தையும் கொண்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் பெரும் வெற்றியை அடைந்துள்ளது. இந்தியாவிலிருந்து வணிகத் தலைவர்கள் தங்களுக்குள்ளும், உலகளாவிய வணிகத் தலைவர்களுடனும் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதை காண்கிறோம். ஒரு வருடத்திற்குள், பெங்களூர், மும்பை, அகமதாபாத், சூரத் மற்றும் இப்போது சென்னை ஆகிய ஐந்து அத்தியாயங்களை இந்தியா முழுவதும் தொடங்கியுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் 15 நகரங்களில் 800க்கும் மேற்பட்ட வணிகத் தலைவர்களை உறுப்பினர்களாக்க முனைந்துள்ளது.

பிப்ரவரி 11, 2020 அன்று கார்ப்பரேட் கனெக்சன்ஸ் தன் முதல் அத்தியாயத்தை சென்னையில் தொடங்கியுள்ளது. இது சராசரியாக 100 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட வருவாய் ஈட்டிய 13 நிறுவன உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது.

கார்ப்பரேட் கனெக்ஷன்ஸ் இந்தியாவின் இயக்குநர் ஸ்ரீ ரதி, கார்ப்பரேட் கனெக்ஷன்ஸ் இந்தியாவின் மண்டல இயக்குநர் வேதா பெஸ்டின், கார்ப்பரேட் கனெக்ஷன்ஸ் சென்னை நிர்வாக இயக்குனர் ராஜ்குமார் நாரங் மற்றும் மாலா ராமச்சந்திரன் ஆகியோரின் முன்னிலையில் இது வெளியிடப்பட்டது. 

கார்ப்பரேட் கனெக்சன்ஸ் வணிக சமூகத்தை மேம்படுத்துவதற்கும், சமூகத்திற்கு பெருமளவில் திருப்பித் தருவதற்கும் சென்னை ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருக்கும்

No comments:

Post a Comment