Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Saturday, 15 February 2020

சில்பகலா புரடக்சன்ஸ்' சார்பில் மது வெள்ளை காவடு

'சில்பகலா புரடக்சன்ஸ்' சார்பில் மது வெள்ளை காவடு தயாரிக்கும் படம் 'ஆலம்பனா'!

'சில்பகலா புரடக்சன்ஸ்' சார்பில் மது வெள்ளை காவடு தயாரிக்கும் படம் 'ஆலம்பனா'. இப்படத்திற்கு கதை,திரைக்கதை,வசனம் -  பிரகாஷ், இயக்கம் - எடிசன் ராபர்ட், இசை - அகில்கிருஷ்ணா, ஒளிப்பதிவு - பிஜு போத்தன் கோடு. 


இப்படத்தைப் பற்றி இயக்குனர் எடிசன் ராபர்ட் கூறுகையில்,

இப்படத்தில் கதாநாயகனாக கிருஷ்ணகுமார் கதாநாயகியாக கல்யாணி நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் நந்தன், விஷ்ணு, காவியா, ஜோஸ்னா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

ஒரு பார்வையற்ற தாத்தா ஆறு ஆதரவற்ற குழந்தைகளை வளர்க்கிறார். அந்த ஆறு குழந்தைகளும் பிச்சை எடுத்து வந்து தாத்தாவிடம் பணம் கொடுக்கிறார்கள். தாத்தா அவர்களுக்கு உணவு போன்ற அனைத்து வசதிகளையும் செய்து தருகிறார்.

ஒரு கட்டத்தில் தாத்தா இறந்து விட ஆறு குழந்தைகளும் அனாதை ஆகிறார்கள். அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாத நேரத்தில் அவர்களை தேடி ஒரு பாட்டி வருகிறார்.
அவர் யார்? ஏன் அவர்களை  தேடி வந்தார் என்பதை எதார்த்த வாழ்வியலோடு சொல்லி இருக்கும் படம் தான் 'ஆலம்பனா'.

இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்குகிறது. சென்னை, கேரளா மற்றும் UK வில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment