Featured post

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project

Charming Star Sharwa, Blockbuster Maker Sampath Nandi, KK Radhamohan, Sri Sathya Sai Arts’ Prestigious Pan India Project #Sharwa38 Titled Bh...

Tuesday, 18 February 2020

"சின்ன புள்ள நீ... " மற்றும் மனதிலும் நீ... "

"சின்ன புள்ள நீ... " மற்றும் மனதிலும் நீ... " ஆகிய இரண்டு வீடியோ ஆல்பம் பாடல்களின் வெளியீட்டு விழா சென்னையில் பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. விழாவில் கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், பாடலாசிரியர் சொற்கோ, இயக்குனர் பவித்ரன், பி.ஆர்.ஓ.யூனியன் தலைவர் விஜயமுரளி, செயலாளர் பெரு துளசி பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.






















இரண்டு பாடல்களையும் எழுதி இசையமைத்து அதை படமாக்கி இயக்கிய தினகரனுக்கு பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி இயக்குனர் பவித்ரன் பாராட்டி பேசுகையில் " இதில் நடித்து பாடல் எழுதி, இசையமைத்து, நடித்து தயாரித்து திரைப்படம் போல் உருவாக்கி உள்ள தினகரன் பாராட்டுக்குரியவர். தினகரன் கட்டுமஸ்தான உடலில் ஆணழகன் போல் உள்ளார். இந்த ஆல்பத்தில் அவருடைய நடிப்பு நன்றாக உள்ளது. இவர் தமிழ்திரை உலகில் நுழைந்தால் பிரமாதமாக இருக்கும். ஏனென்றால் தமிழ் திரை உலகில் இப்பொழுது ஆக்ஷன் ஹீரோ இடம் காலியாக உள்ளது. அந்த இடத்தை முழு முயற்சியுடன் ஈடுபட்டால் தினகரன் ஆக்ஷன் ஹீரோக வலம் வரலாம்" என்று பேசினார்.

No comments:

Post a Comment