Featured post

“Enn Vaanam Neeye” – A Musical Ode to Every Mother

 “Enn Vaanam Neeye” – A Musical Ode to Every Mother Lyrical Music Video Launched Today “Enn Vaanam Neeye” is a heartfelt lyrical music video...

Tuesday, 14 July 2020

சத்தியபாமா பல்கலைக்கழக பொறியியல் நுழைவுத் தேர்வு ரத்து

சத்தியபாமா பல்கலைக்கழக பொறியியல்
நுழைவுத் தேர்வு 2020 ரத்து 


சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தற்போது கரோனா வைரஸால் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பாதுகாப்பில் அக்கறை கொண்டு சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் இந்த ஆண்டுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்கிறது.
மேலும், மாணவ, மாணவிகள் தங்களின் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தங்களுக்கு விருப்பமான பொறியியல் பாடப்பிரிவில் சேர்ந்து படிக்கலாம்.

அதேபோல், ஜே.இ.இ தேர்வு மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

மேலும் Www.sathyabama.ac.in என்ற இணையதளம் அல்லது வாட்ஸ் அப் எண்: 9940058263 அல்லது18004251770 என்ற கட்டணம் இல்லாத தொடர்பு எண் மூலமாகவும், admissions2020@www.sathyabama.ac.in என்ற மின் அஞ்சல் மூலமாகவும் தங்கள் சந்தேகங்களுக்கான பதிலை தெரிந்து கொள்ளலாம்

No comments:

Post a Comment