Featured post

Anali Movie Review

Anali Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம anali  படத்தோட review அ தான் பாக்க போறோம். சக்தி வாசு தேவன், சிந்தியா லூர்டே, குமாரவேல், இனியா...

Tuesday, 8 September 2020

வேலம்மாள் நெக்சஸ் குழுமம்

வேலம்மாள் நெக்சஸ் குழுமம் மெய்ந்நிகர் ஆசிரியர் தின விழாவினை மிகச்சிறப்பாகக்
கொண்டாடியது

வேலம்மாள் நெக்ஸஸ் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி  அறிஞர் டாக்டர் சர்வபள்ளிராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில்   2020 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தினத்தை
 மெய்நிகர் விழாவாகக் கொண்டாடியது ,
விழாவில்  நெக்ஸஸ் பள்ளிகளின் ஆசிரியர்கள் மீதான  நன்றியையும் பாராட்டையும் மாணவர்கள் நெகிழ்ந்து கூறியது ஆசிரியர்களுக்கான  மிகப்பெரிய கௌரவமாக அமைந்தது.
 கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக மாறுபட்ட கற்பித்தல் முறைக்குத் தள்ளப்பட்டு இருந்தாலும்  தங்களைத் தாங்களே மெருகேற்றிக் கொண்டு மாற்றங்களைத் தழுவுவதில் முன்னணியில் இருந்த ஒவ்வொரு ஆசிரியருக்கும் நிர்வாகம் தனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்தது. மெய்நிகர் ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தில் புகழ்பெற்ற பிரமுகர்களாகிய
தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சிலின் துணைத் தலைவர்,
திரு. மயில்ஸ்வாமி அன்னாதுரை,  மற்றும் இந்தியத் திரைப்பட நடிகரும், பல்துறை இயக்குநருமான திரு சமுத்திரகனி ஆகியோர்
மறக்கமுடியாத இந்நாளில் இவ்விழாவினை மேலும் சிறப்பித்தனர்.  அனைத்துத்  தரப்பினரும் தெரிவித்த வாழ்த்துக்கள் ஆசிரியர்களை இந்தத் தொழிலை ஆர்வத்துடன் தொடர ஊக்கப்படுத்தின.


மாணவர்களிடமிருந்து பாராட்டுதல்கள் மற்றும் வாழ்த்துக்கள் பற்றிய குறிப்பு  ஆசிரியர்களையும் அவர்களின் இடைவிடாத சேவையையும் நினைவுகூரும் வகையில் அமைந்தது .
ஒரு அழகான விளக்கக்காட்சியைக் காண்பிப்பதன் மூலம் மாணவர் பேரவை தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டது. நெக்ஸஸ் குழுவின் அன்பான மூத்த முதல்வர் திருமதி ஜெயந்தி ராஜகோபாலன்,
தொழில் நேயமிக்க
முதல்வர் திருமதி ஷியாமலா சுப்புவின் மறக்கமுடியாத வாழ்த்துக்கள், குழுவின் மற்ற நிர்வாகிகளிடமிருந்து வந்த வாழ்த்துக்கள் ஆசிரியர்களை உற்சாகப்படுத்தின.
20K க்கும் அதிகமான பார்வைகளைக் கொண்ட இந்தக் காணொளி அவர்களின் மகத்தான பங்களிப்புக்காக ஆசிரிய  சகோதரத்துவத்திற்கு நன்றி தெரிவித்தது. விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்: 8056063519

No comments:

Post a Comment