Featured post

Avatar: Fire and Ash Emerges as the Biggest Hollywood Film of 2025 in India, Dominates Christmas Holiday Season

 *Avatar: Fire and Ash Emerges as the Biggest Hollywood Film of 2025 in India, Dominates Christmas Holiday Season* James Cameron’s Avatar: F...

Wednesday, 16 June 2021

வேலம்மாள் பள்ளி மாணவி ரிந்தியா தேசிய சதுரங்க சாம்பியன்ஷிப்பில்

வேலம்மாள் பள்ளி மாணவி ரிந்தியா தேசிய சதுரங்க சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று சாதனை.

அண்மையில் அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு  ஏற்பாடு செய்திருந்த  தேசிய அளவிலான சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில்   18 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் கலந்து கொண்டு விளையாடிய
வேலம்மாள் முதன்மைப் பள்ளி  12 ஆம் வகுப்பு மாணவி  செல்வி வி .ரிந்தியா,  தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இத்தகுதித் தேர்வுப் போட்டிகள்  2021 ஜூன் 10 முதல் 2021 ஜூன் 12 வரை நடைபெற்றது. .

இப்போட்டியில் 11 க்கு 8.5 புள்ளிகள் பெற்று சாதனை படைத்த ரிந்தியாவின் அளப்பரிய சாதனை  அவரை இப் போட்டியில் நட்சத்திர
செயல்திறன் பட்டம் வெல்வதற்கு துணைபுரிந்ததுடன், நடைபெற உள்ள உலக அளவிலான இளைஞர் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியிலும் இந்தியா வைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தகுதியினைப்  பெற்றுத் தந்துள்ளது.


தேசிய அளவில் பல விருதுகளையும்,மூன்று முறை காமன்வெல்த் போட்டிகளில் வென்றவரும் பெண்கள் கிராண்ட்மாஸ்டருமான ,
ரிந்தியாவின்  மூத்த சகோதரி  வி.வர்ஷினியின் வழிகாட்டுதலில் செயல்பட்டு வரும் விந்தியாவிற்கு, அவரது முதல் பயிற்சியாளர் ஸ்ரீ தியாகராஜன்
 மற்றும் புகழ்பெற்ற FIDE பயிற்சியாளர்  கே.பாலகிருஷ்ணன்
 ஆகியோரின் வழிகாட்டுதலும் இணைந்து அவரை இந்தச் சாதனையை அடைய வழிவகுத்தது.

சாம்பியன்  ரிந்தியா மற்றும் அவரது தந்தை ஸ்ரீ வேலவன், ஆகியோர் கடந்த ஆண்டுகளில் வேலம்மாள் பள்ளி அவர்களுக்கு வழங்கிய அனைத்துத் தரப்பு ஆதரவிற்காகவும் நிர்வாகத்திற்குத் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். "வேலம்மாள் இல்லையெனில் இவ்வெற்றிகள் எதுவுமே சாத்தியமில்லை " என்பது வெற்றி பெற்ற சாம்பியனின் வார்த்தைகளாகும்.

பள்ளி நிர்வாகம் அவரது மகத்தான வெற்றியை வாழ்த்துகிறது மற்றும் அவரது எதிர்கால முயற்சிகளில் வெற்றிபெற விரும்புகிறது.


No comments:

Post a Comment