Featured post

அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின்

 *அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின் சுயதரிசை கதை ‘ஸ்மோக்’ வெப்சீரியஸ்.* *முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை சோனா* தென்னிந்திய ...

Monday 14 June 2021

வேலம்மாள் பள்ளியின் யூடியூப் வலைத் தொடர் வரிசையில் ஆங்கில மொழித் திறன் வளர்க்கும்

வேலம்மாள் பள்ளியின் யூடியூப் வலைத் தொடர் வரிசையில்  ஆங்கில மொழித் திறன் வளர்க்கும் பயிற்சிகள் நிகழ்வுகளாக அரங்கேறின.                           


2021 ஜூலை 7 முதல் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணி அளவில் "எளிய முறையில் ஆங்கிலம் " என்னும் தலைப்பிலான நிகழ்வு வேலம்மாள் நெக்ஸஸ் யூடியூப் சேனலில் தொடங்கியது. இந்த நிகழ்வை "போனிக்ஸ் பவர் "  நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் நிறுவனராகிய திருமதி ஷாலினி தேவி ராமநாதன் வழங்குகிறார் .இந்த மெய்நிகர் நிகழ்வு "படித்தல் மற்றும் எழுத்துப்பிழை " ஆகியவற்றை போனிக்ஸ் எனப்படும் மொழித்திறன் பயிற்சியைப் பயன்படுத்தி கற்பிக்கும் சிறப்பு நிகழ்வாகும்.



இந்த அமர்வுகளில் சிறப்பம்சமாக அறியப்படுவது  "ஜாலி ஃபோனிக்ஸ் "எனப்படும் சிறப்பான உத்தியினைப் பயன்படுத்தி கற்பிக்கும் நிகழ்வாகும். இது சிறுவயதிலிருந்தே வாசித்தல் மற்றும் எழுதுவதற்கான முக்கிய திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும் அதில் வல்லுநராவதற்கும் கடைப்பிடிக்கப்படும் ஒரு வேடிக்கையான மற்றும் குழந்தை மையப்படுத்தப்பட்ட அணுகுமுறையாகும்.

இந்த அமர்வுகளின் அடுத்த பகுதி ஆங்கிலத்தில் 26 எழுத்துக்களைக் கற்றுக்கொள்வதற்கு இணையாக 42 எழுத்து ஒலிப்பு முறைகளை, நடைமுறையில் பயன்படுத்தப்படும் பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன், கொடுக்கப்பட்டது.
நல்ல உச்சரிப்பு மற்றும் வாசிப்புக்கு ஒரு தரமான தொடக்கத்தினை அமைத்துக் கொடுப்பதாக  இது இருந்தது.
இந்த அமர்வின் முடிவில் மாணவர்கள் எழுத்துக்களின் ஒலிகளையும், சொற்களையும் எவ்வாறு இணைத்து ஒலிப்பது என்பதையும் நன்கு அறிந்து கொண்டனர். ஜாலி ஃபோனிக்ஸ் குறித்த அமர்வு பல ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்தது, ஏனெனில் இது ஆங்கிலத்தில் முக்கியத் திறன்களை மேம்படுத்த சரியான  கருவியை வழங்குவதாக இருந்தது. "எளிய முறையில் ஆங்கிலம்" நிகழ்வில் மேலும் வரவிருக்கும் அமர்வுகளுக்குக் காத்திருங்கள். மேலும் விவரங்களுக்கு 80560 63519 -ஐ தொடர்பு கொள்ளவும்.


No comments:

Post a Comment