Featured post

அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின்

 *அனைவரும் எதிர்பார்க்கும் நடிகை சோனாவின் சுயதரிசை கதை ‘ஸ்மோக்’ வெப்சீரியஸ்.* *முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை சோனா* தென்னிந்திய ...

Friday 12 November 2021

ஓசன் டிலைட் சர்ப்ஸ்கூலுடன் கைகோர்த்து நகரில்

 *ஓசன் டிலைட் சர்ப்ஸ்கூலுடன் கைகோர்த்து நகரில் உணவு பிரச்சனையை எளிதாக்கும் கார்மெட் கார்டன்*


சென்னை நவ- 12

சென்னையில் மழை வெள்ளம் காரணமாக உணவுப்பொருட்களை டெலிவரி செய்யும் நபர்கள் பலரும் மறுத்து வருகின்றனர் இந்த நிலையில் நகரை சுற்றியுள்ள பல பகுதிகளில் இதுபோன்ற விநியோகத்தை எளிதாக்கும் விதமாக கார்மெட் கார்டன் (Gourmet Garden) நிறுவனம் ஓசன் டிலைட் சர்ப்ஸ்கூலுடன் (Ocean Delight Surf school) கைகோர்த்து களம் இறங்கியுள்ளது


இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து உணவுப்பொருட்களை விநியோகம் செய்யும் தங்களது விநியோக முகவர்களுக்கு சர்ஃபிங் படகுகளை வழங்கி தண்ணீர் தேங்கியிருக்கும் தெருக்களில் கூட வாடிக்கையாளர்களின்  வீட்டு வாசலுக்கே சென்று வினியோகம் செய்யும் வகையில் வசதி செய்து கொடுக்கின்றன.


கார்மெட் கார்டன் இணை ஸ்தாபகர் விஷால் நாராயணசாமி கூறுகையில், "நான் இதுபோன்ற பல பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டபோது தரைத்தளத்தில் தண்ணீர் சூழ்ந்த நிலையில் பலரும் மேல் தளங்களில் சென்று தங்கியுள்ளதுடன் சாப்பாடு வசதியின்றி இருப்பதையும் காண முடிந்தது. இந்த நகரில் உள்ள உணவுப் பொருட்கள் வினியோகம் செய்பவர்கள் அனைவரும் இதுபோன்ற சமயத்தில் துணிந்து வெளியே வந்து உதவிக்கரம் நீட்ட வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.




நாங்கள் எங்களது விநியோக முகவர்களுடன் இணைந்து இந்த சமயத்தில் எங்களால் இயன்ற வரை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறோம்.

மேலும் இந்த இக்கட்டான சூழலில் எவர் ஒருவுக்கேனும் கூட உணவு கிடைக்காமல் போய் விடக்கூடாது என்றும் உறுதியாக நம்புகிறோம்.


இதேபோன்ற மழை வெள்ள சூழல் அடுத்த சில நாட்கள் வரை தொடர்ந்தாலும் கூட கார்மெட் கார்டன் எப்போதும் திறந்திருக்கும் என்பதுடன் உங்கள் ஆர்டர்களையும் ஏற்றுக்கொள்ளும். சென்னையில் உங்கள் அருகாமையில் தேவையான பிரஷ்ஷான உணவுப் பொருட்கள் பெற இயலாத நிலையில் இருக்கும்  நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இந்த தகவலை தயவுசெய்து பகிருங்கள்".  

.

*கார்மெட் கார்டன் பற்றி*


கார்மெட் கார்டன் ஆனது தூய்மையான, புத்துணர்ச்சியூட்டும் மற்றும் சிறந்த ருசியுள்ள காய்கறிகளின் தாயகமாகும், பாதுகாக்கப்பட்ட  மாசுபாடு என்பதே இல்லாத சூழலில் மிகுந்த கவனத்துடன் வளர்க்கப்படுகிறது, மாசு இல்லாத உணவு கிடைப்பது மிகவும் கடினம். இயற்கை விவசாயம் பூச்சிக்கொல்லி மாசுபாட்டைக் கொண்டிருந்தாலும், மண்ணால் பரவும் நோய்கள், நீர் மாசுபாடு மற்றும் விநியோகச் சங்கிலியின் மோசமான கையாளுதல் உள்ளிட்ட பிற அம்சங்கள் அனைத்தும் சேர்ந்து நமது உணவை குறைவான பாதுகாப்பான மற்றும் நுகர்வுக்குப் பொருத்தமற்றதாக ஆக்குகின்றன.


மேலும், விதைகளின் மரபணு சிகிச்சை மற்றும் திறனற்ற விவசாய நடைமுறைகள் காரணமாக இன்று உணவில் குறைந்த ஊட்டச்சத்து மற்றும் சுவையே உள்ளது. கார்மெட் கார்டனில், எங்கள் வாக்குறுதியானது, புதிய, மாசு இல்லாத கீரைகள் மற்றும் காய்கறிகளை வழங்குவதாகும், அவை சுவை மற்றும் ஊட்டச்சத்து நிறைந்தவை, எனவே நீங்கள் உங்கள் ஆரோக்கியமான உணவை அனுபவிக்கிறீர்கள்!

No comments:

Post a Comment