Featured post

Produced by M Cinema's Bathri and directed by Sajisaleem, 'Produced by M Cinema's

 Produced by M Cinema's Bathri and directed by Sajisaleem, 'Produced by M Cinema's Bathri and directed by Sajisaleem, 'Laand...

Thursday, 20 October 2022

பிரபாஸ், அட்லி, கேத்தரினா கைஃப், ஆலியா பட், அனுஷ்கா சர்மா உள்ளிட்ட பிரபலங்களின் பாராட்டுகளை

பிரபாஸ், அட்லி, கேத்தரினா கைஃப், ஆலியா பட், அனுஷ்கா சர்மா உள்ளிட்ட பிரபலங்களின் பாராட்டுகளை பெற்றுள்ள ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும் "பெடியா" திரைப்படத்தின் டிரைலர்* 


ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும் "பெடியா" திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களை பரவசப்படுத்திய நிலையில், இப்படத்தின் டிரைலர் தற்போது இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. வருண் தவான் மற்றும் கீர்த்தி சனோன் நடிக்கும் இந்திய சினிமாவின் முதல் மிகப்பெரிய இயற்கை சாகச நகைச்சுவை திரைப்படத்தின் முன்னோட்டம் ரசிகர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.  


வருணின் முதல் அதிகாரப்பூர்வ பான்-இந்தியா திரைப்படமான பெடியாவின் டிரைலர் நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. டிரைலர் மிகவும் சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருப்பதாக தமிழ் திரைப்பட இயக்குநர் அட்லி ட்விட்டரில் தெரிவித்திருந்த நிலையில், டிரைலர் பிரமாதமாக அமைந்திருப்பதாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் பிரபாஸ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 


https://instagram.com/stories/actorprabhas/2952522066726714995?utm_source=ig_story_item_share&igshid=MDJmNzVkMjY=


https://twitter.com/Atlee_dir/status/1582725669284614145?s=19 

புராண கதைகளில் வரும் ஓநாய் (பெடியா) ஒன்றினால் கடிப்பட்டு ஓநாய் மனிதனாக மாறிய பாஸ்கர் என்பவரை பற்றிய கதை இது. இந்த நிலைமைக்கு தீர்வு காண்பதற்கான பாஸ்கர் மற்றும் அவரது நண்பர்களின் தேடலில் பல திருப்பங்கள் நிறைந்திருக்கின்றன. ஓநாய் மனிதனாக வருண் தவான் செய்யும் விஷயங்கள் சுவாரஸ்யமான முறையில் இந்த டிரைலரில் இடம்பெற்றுள்ளன. இப்படத்தை அமர் கௌஷிக் இயக்கியுள்ளார். 


பாலிவுட் பிரபலங்களான கேத்தரினா கைஃப், அனுஷ்கா சர்மா, விக்கி கவுசல், அர்ஜுன் கபூர் மற்றும் ஜான்வி கபூர் ஆகியோர் டிரைலர் குறித்த தங்கள் பாராட்டுகளை இணையத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆஷிஷ் சஞ்ச்லாணி மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோரும் டிரைலரை பாராட்டியுள்ளனர். 

இணைப்புகள்:

https://instagram.com/stories/anushkasharma/2952451751995029932?utm_source=ig_story_item_share&igshid=MDJmNzVkMjY=

https://instagram.com/stories/katrinakaif/2952392198432944322?utm_source=ig_story_item_share&igshid=MDJmNzVkMjY=

https://instagram.com/stories/vickykaushal09/2952419001275350109?utm_source=ig_story_item_share&igshid=MDJmNzVkMjY= 

யூடியூபில் இந்த டிரைலர் முதலிடத்தை பெற்றுள்ள நிலையில், இதில் திகிலும் நகைச்சுவையும் சரியான அளவில் இடம்பெற்றுள்ளதாக சமூக ஊடக பயனர்கள் தெரிவித்து வருகின்றனர். 

'ஸ்ரீ' மற்றும் 'பாலா' படங்களுக்கு பிறகு ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் இது அமர் கௌஷிக்கின் மூன்றாவது படமாகும். டிரைலருக்கான வரவேற்பை வைத்து பார்க்கும்போது அமர் கௌஷிக் கட்டாயம் ஹாட்ரிக் வெற்றியை சுவைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் தினேஷ் விஜன் வழங்கும், மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில், வருண் தவான், கீர்த்தி சனோன், தீபக் தோப்ரியால் மற்றும் அபிஷேக் பேனர்ஜீ நடித்துள்ள பெடியா நவம்பர் 25 அன்று தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக 2டி மற்றும் 3டியில் வெளியாகவுள்ளது. 


.

No comments:

Post a Comment