Featured post

நடிகர் இயக்குனர் சசிகுமார் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட " All Pass " "ஆல்பாஸ் " படத்தில் பர்ஸ்ட் லுக்

 நடிகர் இயக்குனர் சசிகுமார் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட " All Pass " "ஆல்பாஸ் "  படத்தில் பர்ஸ்ட் லுக...

Wednesday, 19 October 2022

இளைய. தளபதி விஜய் நடித்த "தமிழன்" மற்றும் துணிச்சல், டார்ச் லைட்

 *இளைய. தளபதி விஜய் நடித்த "தமிழன்" மற்றும் துணிச்சல், டார்ச் லைட் போன்ற பல வெற்றிப்படத்தை இயக்கியவர் அப்துல் மஜீத். இவர் தற்போது விமல், யோகி பாபு நடிக்க புதிய படமொன்றை அதிக பொருட்செலவில் தயாரித்து இயக்கி வருகிறார்.* 

இப்படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப் பட உள்ளது.

இன்று உலகமே புரோக்கர் மயமாகி விட்டது. அதில் சில புரோக்கர்கள்  தம் சுயநலத்திற்காக வியாபாரத்திலும், தொழில் ரீதியாக மக்களை எப்படியெல்லாம்   ஏமாற்றுகிறார்கள்.  அதனால் மக்கள் எப்படி பாதிக்கப் படுகிறார்கள் , அந்த பாதிப்பில் இருந்து கதாநாயகன் மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதை காமெடி, சென்டிமென்ட,  ஆக்‌ஷன் ரொமான்ஸ்  கலந்து ஜனரஞ்ஜகமாக இப்படம் சொல்கிறது.    







ஹீரோ விமல் ஜோடியாக சாம்மிகா, ஐஸ்வர்யா தத்தா  ஆகியோர் நடிக்கின்றனர். மேலும்

யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ரவிமரியா, 


எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ஞானசம்பந்தம், பவர் ஸ்டார், சாம்ஸ், நமோ நாராயணன் என பெரிய  நட்சத்திர பட்டாளமே  இதில் நடிக்கிறது.


இப்படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு சென்னையிலும் அதன் சுற்றுபுறங்களிலும்  நடந்து முடிந்துள்ளது. கிளைமாக்ஸ் காட்சி வேலூர், ராணிப்பேட்டை பகுதியில் உள்ள அரண்மனை போன்ற இடத்தில் நடக்க உள்ளது.


கான்ஃபிடன்ட் பிலிம் கேப் (Confident Film Cafe) சார்பில் இப்படத்தை எழுதி இயக்கி தயாரித்து டைரக்டு செய்கிறார் அப்துல் மஜீத்.



பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட் டுள்ளனர். முன்னதாக படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக், ஆடியோ வெளியிடப்பட உள்ளது. 


No comments:

Post a Comment