Featured post

Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube

 *Aamir Khan launches his latest theatrical superhit film 'Sitaare Zameen Par' on YouTube* In an unprecedented move to democratize c...

Tuesday, 11 October 2022

ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக் புரடக்சன்ஸ் வழங்கும்*

 *ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக் புரடக்சன்ஸ் வழங்கும்* 

*இயக்குநர் முத்தையா இயக்கத்தில்* 

*நடிகர் ஆர்யா நடிக்கும் “ஆர்யா 34” பூஜையுடன் இனிதே துவங்கியது* 


நடிகர் ஆர்யா நடிக்கும் புதிய படம் “ஆர்யா34” என தற்போதைக்கு தலைப்பிடப்பட்டுள்ளது. 







_*ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக் புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், உருவாகும் இப்புதிய படம் இன்று காலை எளிமையான பூஜையுடன் இனிதே தொடங்கியது. *_ 


சென்னை  (அக்டோபர் 9, 2022): 

இந்திய சினிமாவில் பல வெற்றிப்படங்களை தந்த  ஜீ ஸ்டூடியோஸ் & டிரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து, ஆர்யா 34 படத்தை தயாரிக்கின்றன. “டெடி, சார்பட்டா பரம்பரை மற்றும் கேப்டன்” என   மாறுப்பட்ட படங்கள் மூலம் தொடர் வெற்றிகளை தந்து வரும் நடிகர் ஆர்யா, இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். இயக்குநர் கௌதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் அறிமுகமாகி, ஒரே படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த நடிகை சித்தி இதானி இப்படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். 


ட்ரம்ஸ்டிக் புரடக்சன்ஸ் உடன் இணைந்தது குறித்து  ஜீ ஸ்டுடியோவின் சவுத் மூவிஸ் தலைவர் அக்‌ஷய் கெஜ்ரிவால் கூறுகையில்…, “இயக்குநர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகும் எங்களது அடுத்த திரைப்படத்தில்  ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் உடன்  இணைந்து பணியாற்றுவது மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. ஆர்யா தொடர்ந்து  மாறுப்பட்ட பாத்திரங்களில்  வித்தியாசமான படங்கள் மூலம்  பார்வையாளர்களை மகிழ்வித்து வருகிறார். மேலும் இயக்குநர்  முத்தையா அனைத்து தரப்பு ரசிகர்களின் நாடித்துடிப்பை நன்கு புரிந்து கொண்டவர். இவர்கள் கூட்டணி பார்வையாளர்களுக்கு ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை வழங்கும் என்பது உறுதி. சிறந்த உள்ளடக்கங்கள் கொண்ட, பல அற்புதமான படங்களை வழங்கிய ட்ரம்ஸ்டிக் புரடக்சன்ஸ்  நிறுவனத்துடன் இணைந்திருப்பது எங்களுக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.  நாங்கள் அனைவரும்  பார்வையாளர்களுக்கு ஒரு சிறப்பான  அனுபவத்தை தரும், நல்ல படைப்பை வழங்குவோம்  என்று நம்புகிறோம்”.



கிராமத்து பின்னணியில் அனைவரும் குடும்பத்துடன் ரசிக்கும்படியான, வெற்றிகரமான கமர்ஷியல் படங்களை வழங்கும் இயக்குநர் முத்தையா இப்படத்தினை இயக்குகிறார். இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், வீரமணி கலை இயக்கம் செய்கிறார்.

No comments:

Post a Comment