Featured post

Karuppu Pulsar Tamil Movie Review

 Karuppu Pulsar Movie Review ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம  karuppu pulsar படத்தோட review அ தான் பாக்க போறோம். இந்த படத்தை இயக்கி இருக்கிறது mu...

Saturday, 1 October 2022

அமெரிக்காவில் நடக்கும் அர்பா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட

 *அமெரிக்காவில் நடக்கும் அர்பா சர்வதேச  திரைப்பட விழாவில் திரையிட, சீனுராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த மாமனிதன்  படம் தேர்வு*

நவம்பர் 20ல் விழா நடக்கிறது..


மக்கள் செல்வன் விஜய்சேதுபதி  நடித்த "மாமனிதன்" படம்   அமெரிக்காவில் நடக்கும் அர்பா  சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி யுள்ளது.  அதன் விவரம் வருமாறு:


அமெரிக்காவில் நடை பெறும் திரைப்பட விழாக் களில் மிக முக்கிய மானது 'அர்பா சர்வதேச திரைப்பட விழா'.

இவ்விழா இந்த ஆண்டு 'வெள்ளி விழா ஆண்டு விழாவாக' கொண்டாடப் படுகிறது.

இத்தகைய சிறப்பும் பெருமையும் மிக்க இவ்விழாவில் நம் மாமனிதன் திரைப்படம் சிறந்த படத்துக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள ஐந்து படங்களில் ஒன்றாக இடம்பெற் றுள்ளது.



வருகின்ற நவம்பர் 20 அன்று நடைபெறும் விழாவில் முடிவு அறிவிக்கப்பட்டு விருது வழங்கப்படும்.



இதுகுறித்து டைரக்டர் சீனுராமசாமி கூறியதாவது:


அர்பா  சர்வதேச திரைபட விழாவானது 25வது  ஆண்டாக நடக்கிறது.  வெள்ளிவிழா ஆண்டில் நடக்கும் புகழ் பெற்ற இவ்விழா வில்  திரை யிடப்படும் ஐந்து படங் களில்  ஒன்றாக மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்து எனது இயக்கத்தில் வெளியான மாமனிதன் படம் திரையிட தேர்வாகி யுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 

தேர்வு குழுவினருக்கு எனது நன்றி.

இவ்வாறு சீனுராமசாமி கூறினார்.


https://www.arpafilmfestival.com/

No comments:

Post a Comment