Featured post

டெண்ட்கொட்டாவில் மிடில் கிளாஸ் குடும்பத்தின் சாகசங்கள் — மக்களின் மனதைத் திருப்திப்படுத்தும் ‘Madras Matinee

 டெண்ட்கொட்டாவில் மிடில் கிளாஸ் குடும்பத்தின் சாகசங்கள் — மக்களின் மனதைத் திருப்திப்படுத்தும் ‘Madras Matinee’ இப்போது ஸ்ட்ரீமிங்! செய்ய்யுங...

Monday, 10 October 2022

மெகா ஸ்டார் சிரஞ்சீவி - பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் '

 *மெகா ஸ்டார் சிரஞ்சீவி - பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானின் 'காட்ஃபாதர்' நூறு கோடி வசூல் செய்து சாதனை*


இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி - பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் இணைந்து நடித்திருக்கும் அரசியல் ஆக்சன் திரில்லர் திரைப்படமான 'காட்ஃபாதர்' பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. 'காட்ஃபாதர்' திரைப்படம், வெளியான நான்கு நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.



'காட்ஃபாதர்' திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் மிகப் பெரும் வசூலை ஈட்டி வருகிறது. இந்த திரைப்படத்தை பார்ப்பதில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். 'காட்ஃபாதர்' திரைப்படம் வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகிறது. காட்ஃபாதர் திரைப்படம் இந்தியிலும் வெளியாகி நல்ல வசூலை பெற்று வருகிறது. நல்ல கதை அம்சமுள்ள படைப்புகளை மக்கள் வரவேற்பார்கள் என்பது இதன் மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.


நவராத்திரி விடுமுறைகளை முன்னிட்டு  மக்கள் திரையரங்குகளில் வருகை தந்து படங்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றனர். மேலும் இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'காட்ஃபாதர்' படத்தை பற்றிய நேர்மறையான விமர்சனத்தை வெளிப்படுத்துகிறார்கள். இதன் காரணமாக 'காட்ஃபாதர்' வசூல் சாதனையில் புதிய இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment