Featured post

Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA

 *Teja Sajja Starrer Mirai Crosses 100 Cr Gross Worldwide, Breaches $2 Million Mark In USA* Teja Sajja is proving true to his super hero ima...

Sunday, 10 March 2019

எம்.எல்.ஏ. கருணாஸ் தமிழக அரசிற்கு கோரிக்கை

சீர்மரபினர் சமூகத்தை “சீர்மரபினர் பழங்குடியினராக” மாற்றம் செய்ததை மத்திய அரசு ஆவணங்களிலும் ஒரே மாதிரியாக மாற்ற செய்ய தமிழக அரசு  பரிசீலிக்க வேண்டும்
எம்.எல்.ஏ. கருணாஸ் கோரிக்கை


தமிழகத்தில் டிஎன்சி (DNC) என அழைக்கப்பட்ட சீர்மரபினர் சமூகத்தினர் இனி மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை பெற வசதியாக டின்என்டி (DNT) அதாவது சீர்மரபினர் பழங்குடியினர் என்று அழைக்கப்படுவர் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தொடந்து நான் சட்டமன்றத்தில் எடுத்துரைத்தேன். நான் மட்டுமன்றி பலர் போராடினர். இப்போது தமிழக அரசு செவிசாய்த்துள்ளது. அதே சமயம் முரண்பாடுகளானவற்றையும் களையவேண்டும்.
இதுதொடர்பாக பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில்,

 சீர்மரபினர் சமூகத்தினர் என்பது தமிழகத்தை பொருத்தவரை சீர்மரபினர் பழங்குடியினரை மட்டுமே குறிப்பிடுவதாக சமூகநலத்துறை அமைத்த குழு தனது அறிக்கை யில் தெரிவித்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குழுவின் பரிந்துரையை ஏற்று 1979ம் ஆண்டு சீர்மரபினர் பழங்குடியினர் என்ற பெயரை சீர்மரபினர் சமூகத்தினர் என மாற்றி வெளியிடப்பட்ட அரசாணையை விலக்கிக்கொள்வதாக கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் இட ஒதுக்கீடு சலுகை மற்றும் நலத்திட்ட சலுகைகளை பெறுவதற்கு இதுவரை சீர்மரபினர் சமூகங்கள் என அழைக்கப்பட்ட 68 சமூகங்கள் சீர்மரபினர் சமூகங்கள் என்றே அழைக்கப்படுவர் என தெரிவிக்கப் பட்டுள் ளது.

அதே நேரம் மத்திய அரசின் நலத்திட்ட பலன்களை பெறுவதற்கு இந்த 68 சமூகத்தினரும் சீர்மரபினர் பழங்குடியினர் என அழைக்கப்படுவர் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Denotified Tribes என்ற பெயரினை அரசாணை எண்:1310, சமூகநலத்துறை நாள்:30.07.1979-இல் Denotified Communities என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது Denotified Communities (சீர்மரபினர்) பட்டியலில் 68 ஜாதிகள் உள்ளன. DNC என்பதனை DNT என பெயர் மாற்றம் செய்து ஆணையிட்டுள்ளது. மத்திய அரசு சலுகைகள் பெறுவதற்கு ஒரு பெயரும்,  தமிழக ஆவணங்களிலும் ஒரு பெயரும் கூடாது. அனைத்து சலுகைகளையும் பெற சீர்மரபின பழங்குடியினர் DNT என்று ஒரே மாதிரியாக மாற்றம் செய்தால்தான் எங்களது தொடர் கோரிக்கை முழுமையாக நிறைவேறும்.

No comments:

Post a Comment