Featured post

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனர் சக்திவேலனின் பிறந்தநாள் விழா – திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு

 *சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனர் சக்திவேலனின் பிறந்தநாள் விழா – திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு* சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் நிறுவனர்...

Showing posts with label Politician Karunas. Show all posts
Showing posts with label Politician Karunas. Show all posts

Monday, 8 April 2019

எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கான தடைகோரிய உயர்நீதிமன்றத் தீர்ப்பு . எம்.எல்.ஏ., கருணாஸ் அறிக்கை

எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கான தடைகோரிய உயர்நீதிமன்றத் தீர்ப்பு விவசாயிகள் பொதுமக்கள் போராட்டத்திற்கு கிடைத்தத் வெற்றி எம்.எல்.ஏ., கருணாஸ் அறிக்கை

சென்னை- சேலம் இடையே 5 மாவட்டங்கள் வழியாக, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது.  இத்திட்டத்திற்கான தடைகோரிய வழக்கில் இன்று(8.4.2019) தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. வரவேற்கத்தக்க தீர்ப்பாகும். இந்த வெற்றி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

இத்திட்டத்திற்காக 1,900 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறுவதற்கு முன்னே நிலம் அளவிடும் பணிகள் வேக வேகமாக தொடங்கப்பட்டன.

எட்டுவழிச்சாலை திட்டத்தை எதிர்த்து, விவசாயிகளும், பொதுமக்களும், பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து போராட்டம் நடத்தினார். மக்கள் போராட்டம் தொடர்ந்து நடந்தேறிய அதே சமயம் பூவுலகின் நண்பர்கள், ஐந்து மாவட்ட விவசாயிகள் சார்பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன.

அதன் விளைவாக தமிழக அரசு செயல்படுத்த நினைத்த எட்டுவழிச்சாலை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது. அதோடு மட்டுமின்றி கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் நில உரிமையாளர்களுக்கே பத்திரப்பதிவு செய்து கொடுக்க நீதிமன்றம் உத்தர பிறப்பித்துள்ளது இது வரவேற்கத்தக்கது.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் அ.தி.மு.க. பா.ஜ.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் எட்டுவழிச்சாலை திட்டத்தை அமல்படுத்தியே தீருவோம் என முழங்கிக் கொண்டிருக்கின்ற இவ்வேளையில் இத்தீர்ப்பை மக்களுக்கு ஆதரவாக நீதிமன்றம் வழங்கியுள்ளது.

இந்த திட்டத்தை நிறைவேற்ற நினைத்தவோர்களோடு கூட்டணி வைத்துக் கொண்டுள்ள கட்சிகள் ”இந்த திட்டத்திற்கு தடை விதிக்க நாங்கள்தான் போராடினோம்” என்று தேர்தல் நேரத்தில் பேசினால் மக்கள் சிரித்துவிடுவார்கள். ஆகவே இது மக்கள் போராட்டத்திற்கான வெற்றி! இதை தனிநபர் யாரும் உரிமைகோரி அதை வாக்குகளாக மாற்றிட முயற்சி செய்தால் அதைவிட இழிவானச் செயல் வேறொன்றும் கிடையாது!

இவ்வாறு எம்.எல்.ஏ., கருணாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tuesday, 19 March 2019

ஜெனிவாவில் நடை பெற்ற 40 வது ஐ.நா கூட்ட தொடரில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்


சட்ட மன்றத்தில் முன்னாள் மறைந்த முதலமச்சர் அம்மா ஜெயலலிதா இலங்கைக்கு எதிராக போடப்பட்ட தீர்மானத்தை வலியுறுத்தி  ஜெனிவாவில் நடை பெற்ற 40 வது ஐ.நா  கூட்ட தொடரில் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் அவர்கள்  உரையாற்றினார்.





இதில் , 24.10.2014 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள்  கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான பொருளாதார தடை விதிக்க வேண்டும், காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடந்த கூடாது என்று அம்சங்கள் கொண்டு தீர்மானத்தை வலியுறுத்தி பேசினார், இந்த தீர்மானத்தின் மீது இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை பதிவு செய்தார்.

பன்னாட்டு நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்ற ஐ.நா தீர்மானத்திற்கு மேலும் கால நீட்டிப்பு வழங்க கூடாது.

இனப்படுகொலை என்று ஐ.நா அறிவிக்க வேண்டும் என்று இந்த அமர்வில் கலந்து கொண்டு வலியுறுத்தினார் ..

ஜெனிவா, ஐ.நா மன்றத்தில்  உரையாற்றும் முதல் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, 10 March 2019

எம்.எல்.ஏ. கருணாஸ் தமிழக அரசிற்கு கோரிக்கை

சீர்மரபினர் சமூகத்தை “சீர்மரபினர் பழங்குடியினராக” மாற்றம் செய்ததை மத்திய அரசு ஆவணங்களிலும் ஒரே மாதிரியாக மாற்ற செய்ய தமிழக அரசு  பரிசீலிக்க வேண்டும்
எம்.எல்.ஏ. கருணாஸ் கோரிக்கை


தமிழகத்தில் டிஎன்சி (DNC) என அழைக்கப்பட்ட சீர்மரபினர் சமூகத்தினர் இனி மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை பெற வசதியாக டின்என்டி (DNT) அதாவது சீர்மரபினர் பழங்குடியினர் என்று அழைக்கப்படுவர் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தொடந்து நான் சட்டமன்றத்தில் எடுத்துரைத்தேன். நான் மட்டுமன்றி பலர் போராடினர். இப்போது தமிழக அரசு செவிசாய்த்துள்ளது. அதே சமயம் முரண்பாடுகளானவற்றையும் களையவேண்டும்.
இதுதொடர்பாக பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில்,

 சீர்மரபினர் சமூகத்தினர் என்பது தமிழகத்தை பொருத்தவரை சீர்மரபினர் பழங்குடியினரை மட்டுமே குறிப்பிடுவதாக சமூகநலத்துறை அமைத்த குழு தனது அறிக்கை யில் தெரிவித்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குழுவின் பரிந்துரையை ஏற்று 1979ம் ஆண்டு சீர்மரபினர் பழங்குடியினர் என்ற பெயரை சீர்மரபினர் சமூகத்தினர் என மாற்றி வெளியிடப்பட்ட அரசாணையை விலக்கிக்கொள்வதாக கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் இட ஒதுக்கீடு சலுகை மற்றும் நலத்திட்ட சலுகைகளை பெறுவதற்கு இதுவரை சீர்மரபினர் சமூகங்கள் என அழைக்கப்பட்ட 68 சமூகங்கள் சீர்மரபினர் சமூகங்கள் என்றே அழைக்கப்படுவர் என தெரிவிக்கப் பட்டுள் ளது.

அதே நேரம் மத்திய அரசின் நலத்திட்ட பலன்களை பெறுவதற்கு இந்த 68 சமூகத்தினரும் சீர்மரபினர் பழங்குடியினர் என அழைக்கப்படுவர் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Denotified Tribes என்ற பெயரினை அரசாணை எண்:1310, சமூகநலத்துறை நாள்:30.07.1979-இல் Denotified Communities என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது Denotified Communities (சீர்மரபினர்) பட்டியலில் 68 ஜாதிகள் உள்ளன. DNC என்பதனை DNT என பெயர் மாற்றம் செய்து ஆணையிட்டுள்ளது. மத்திய அரசு சலுகைகள் பெறுவதற்கு ஒரு பெயரும்,  தமிழக ஆவணங்களிலும் ஒரு பெயரும் கூடாது. அனைத்து சலுகைகளையும் பெற சீர்மரபின பழங்குடியினர் DNT என்று ஒரே மாதிரியாக மாற்றம் செய்தால்தான் எங்களது தொடர் கோரிக்கை முழுமையாக நிறைவேறும்.