Featured post

En Kadhale Movie Review

En Kadhale Movie Review  ஹாய் மக்களே இன்னிக்கு நம்ம என் காதலே ன்ற படத்தோட review அ தான் பாக்க போறோம். jayalakshmi கதை எழுதி இந்த படத்தை dire...

Saturday, 9 March 2019

சித்தார்த் - ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படம்

அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக ரமேஷ் P பிள்ளை தயாரிப்பில்
இயக்குனர் சசி இயக்கத்தில் சித்தார்த் - ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படம்
"சிவப்பு மஞ்சள் பச்சை"

தமிழ் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், வேதாளம், அரண்மனை, மாயா, பாகுபலி 1, சென்னை 28 II, இது நம்ம ஆளு, காஞ்சனா, சிவலிங்கா (தெலுங்கு), ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட 20க்கும் மேற்ப்பட்ட வெற்றிப் படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான ரமேஷ் P பிள்ளை தற்போது தனது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக புதிய பிரம்மாண்டமான படங்களை தயாரிக்கவுள்ளார்.



முதல் படமாக, சொல்லாமலே துவங்கி பிச்சைகாரன் வரை உணர்வுகளை மையப்படுத்தி அதை ஜனரஞ்சகமான முறையில் வெளிபடுத்தும் இயக்குனர் சசி "சிவப்பு மஞ்சள் பச்சை" எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குகிறார். அக்காள் - தம்பி உறவினை புதிய கோணத்தில் அனைத்து தரப்பினருக்கும் தங்களின் நிஜ வாழ்க்கையை உணரும் வகையில் திரைக்கதை அமைத்துள்ளார். 

அக்காவாக மலையாள திரையுலகின் முன்னனி நடிகை லிஜோ மோள் (தமிழில் அறிமுகம்) நடிக்க அவரின் ஜோடியாக சித்தார்த் நடிக்கிறார். தம்பியாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார். 

முதன் முறையாக டிராபிக் இன்ஸ்பெக்டராக நடிகர் சித்தார்த் நடிக்க, இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக துடிப்பான வேடத்தில் பைக் ரேசராக நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் காஷ்மீரா (தமிழில் அறிமுகம்), மதுசூதனன், நக்கலைட் யூடுயுப் குழுவின் நடிகர்கள் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தயாரிப்பு - ரமேஷ் P பிள்ளை (அபிஷேக் பிலிம்ஸ்)
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - சசி
ஒளிப்பதிவு - பிரசன்னா S குமார்
இசை - சித்து குமார் (அறிமுகம்)
படத்தொகுப்பு - ஷான் லோகேஷ்
கலை - மூர்த்தி
பாடல்கள் - மோகன் ராஜன்,தமயந்தி
சண்டைப்பயிற்சி - சக்தி சரவணன்
மக்கள் தொடர்பு - நிகில் முருகன்

No comments:

Post a Comment