Featured post

*India’s Missile Man on the Silver Screen: Dhanush as Dr. APJ Abdul Kalam in Biopic

*India’s Missile Man on the Silver Screen: Dhanush as Dr. APJ Abdul Kalam in Biopic announced at Cannes Film Festival 2025; Directed by Om R...

Saturday, 15 June 2019

உயரப்பறக்க தயாரான சிறகு! பாராட்டு மழையில் சிறகு படப் பாடல்கள்..






பர்ஸ்ட் காபி புரொடக்சன் சார்பாக மாலா மணியன் தயாரிப்பில் கவிஞர் குட்டி ரேவதி எழுதி இயக்கி இருக்கும் படம் சிறகு. ஹரி கிருஷ்ணன் கதையின் நாயகனாகவும், அக்ஷிதா நாயகியாகவும் நடித்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில் படத்தின் எடிட்டர் அருண்குமார் பேசியதாவது,

"இந்த வாய்ப்பைத் தந்த தயாரிப்பாளர் இயக்குநர் அவர்களுக்கு நன்றி. பாட்டு ட்ரைலர் ரொம்ப நல்லா வந்திருக்கு. படமும் நல்லா வந்திருக்கு. எல்லோரும் சப்போர்ட் பண்ணுங்க" என்றார்

நடிகர் நிவாஸ் ஆதித்தன் பேசியதாவது

"என்னுடைய பிலிம் கரியரில் இது எனக்கு ரொம்ப முக்கியமான படம். இதற்கு மேல் இப்படியொரு படம் அமையுமான்னு தெரியல. இந்தப்படம் வெளிவந்த பின் எனக்கு ஒரு பெரிய வாழ்க்கை காத்திருக்கிறது. வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மாலா மணியன் அவர்களுக்கும் இயக்குநர் குட்டி ரேவதி அவர்களுக்கும் நன்றி" என்றார்.

நடிகை டாக்டர் வித்யா பேசியதாவது,

"23 வருசமா நான் மருத்துவரா இருக்கிறேன். ஆக்டிங் எனக்கு பெரிய பேஷன். எதாவது செஞ்சாகணும்னு உறுத்திக்கிட்டே இருந்தது. இந்தப்படத்துல ரொம்ப நல்ல கேரக்டர் பண்ணி இருக்கிறேன். தயாரிப்பாளர் மாலா மணியன் மேடம் எங்களை தன் பேமிலி மாதிரி பார்த்துக்கிட்டாங்க. அதே மாதிரி தான் குட்டி ரேவதி மேடமும். இந்தப்படத்துல நடிச்சிருக்கோம் என்பதை விட எங்கள் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தி இருக்கோம். சிறகு உயரப்பறக்கும்" என்றார்.

நாயகி அக்ஷிதா பேசியதாவது,

"நான் இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். எனக்கு என்ன பேசுறதுன்னே தெரியல. இந்த வாய்ப்பை தந்த தயாரிப்பாளர் இயக்குநர் இருவருக்கும் நன்றி. ஹீரோ ஹரியோட நடித்தது நல்ல அனுபவம். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. அருவி படத்தின் இயக்குநர் தான் எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்தார்" என்றார்.

ஹீரோ ஹரி கிருஷ்ணன் பேசியதாவது,

"ரொம்ப சந்தோஷமான தருணமா இருக்கு. இந்த டீம் ரொம்ப சூப்பரான டீம். குட்டி ரேவதி மேடம் தான் இந்த வாய்ப்பை கொடுத்தாங்க. பெண்கள் டீம் என்பதால் ரொம்ப பயந்தேன். ஆனா பெண்கள் தான் ஸ்ட்ராங் என்பதை உணர்ந்து கொண்டேன். கேமராமேன் மிக அற்புதமாக உழைத்திருக்கிறார். அருண் எடிட்டிங் செம்மயாக வந்திருக்கிறது. இந்த விழாவின் நாயகன் அரோல்கரோலி அட்டகாசமாக மியூசிக் அமைத்து இருக்கிறார். இந்தப்படத்தில் இசை ரொம்ப முக்கியம். அதை சரியாகச் செய்திருக்கிறார்" என்றார்.

இசை அமைப்பாளர் அரோல் கரோலி பேசியதாவது

"சிறகு எனக்கு பேவரைட்டான ஸ்ரிகிப்ட். கதையைப் படிச்சதும் ஒரு பயணம் போன மாதிரி இருந்தது. குட்டி ரேவதி மேடம் எழுத்து எப்படி ஸ்ட்ராங் என்பது எல்லோருக்கும் தெரியும். கேமராமேன் பெரிய வித்தைக்காரர். கலக்கி இருக்கிறார். ஹரி கிருஷ்ணன் அவர் நல்லா கவனிக்க வைக்கிறார். இந்தப்படம் நாம் இழந்த சில உணர்வுகளை வெளிப்படுத்தும். இந்தப்படம் மூலமாக ஏ.ஆர் ரகுமான் சாரையும், மணிரத்னம் சாரையும் சந்தித்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்." என்றார்

இயக்குநர் குட்டி ரேவதி பேசியதாவது,

"இந்த டீமின் ஹம்பல்ஸில் தான் நான் நிற்கிறேன். இது மன மகிழ்ச்சியான நாள். இவர்கள் அனைவரையும் சந்தித்தது பின்னால் ஒரு அழகான கதை இருக்கிறது. நானும் தயாரிப்பாளர் அவர்களும் நிறைய பேசினோம். இரண்டு பேருக்கும் பிடித்தமான கதை தயாரான பின் தான் படத்தைத் துவங்கினோம். 30 நாள் படப்பதிவு நாட்கள் . வாழ்க்கையில் மிக சந்தோஷமான நாட்கள். இந்த நாளில் இசையை வெளியீட வேண்டும் என்பது படப்பதிவுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. இந்தப்படத்தின் இரண்டு. சிறகுகள் யார் என்றால் இசை அமைப்பாளர், ஒளிப்பதிவாளர் தான். அரோல் கரோலியோடு வேலை செய்யும் போது மிக மகிழ்வாக இருந்தது. ஒவ்வொரு பாட்டுக்கும் நிறைய ஆராய்ச்சி செய்து பாடல்களை உருவாக்கினார்.  ஏ.ஆர்.ரகுமான் அவர்களிடம் எதிர்பார்ப்பதை அரோல் கரோலியிடம் எதிர்பார்த்தேன். அதை அவர் செய்து தந்தார். ஒளிப்பதிவாளர் இந்தப்படத்தை ஒரு நகை வேலை செய்வது போல செய்திருக்கிறார். நடிகர் ஹரி கிருஷ்ணன். நாங்கள் நினைத்த ஒரே ஹீரோ அவர்தான். ஹீரோயின் அக்ஷிதா நின்னு விளையாண்டு இருக்கிறார். நிச்சயமாக இந்தப்படத்திற்குப் பிறகு அவர் நெடுந்தூரம் பயணிப்பார் என்று நம்புகிறேன். டாக்டர் வித்யா, நிவாஸ் ஆதித்தன் கேரக்டர்களை நீங்கள் திரையில் பார்த்து கொண்டாட வேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கு வாழ்வில் மிக முக்கியமான ஆட்கள் சிலர் இருக்கிறார்கள். அப்படி வரிசைப்படுத்தினால் அதை மாலா மணியன் அவர்கள் மூலமாகத் தான் துவங்க வேண்டும். சினிமாவில் இப்படியொரு ஆளைப் பார்ப்பது அரிது. இந்தப்படம் இருவரின் பயணம் தான். சரியாக திட்டமிட வேண்டுமென்பதையும் திட்டமிட்டபடி செயல்பட வேண்டும் என்பதையும் மாலா மணியன் அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம்." என்றார்

தயாரிப்பாளர் மாலா மணியன் பேசியதாவது,

"இந்த விழாவுக்கு பெரிய வி.ஐ.பி-க்களை கூப்பிடாததிற்கு காரணம் இந்த டீம் புதியது. இவர்களை இந்த விழா நாயக்ர்களாக காட்ட வேண்டும் என்பதற்காகத் தான் வேறு யாரையும் அழைக்கவில்லை. படத்தை முடித்ததும் மணி ரத்னம் சாரிடம் ஒரு வார்த்தை தான் கேட்டேன். உடனே சரி என்று பாடலை வெளியீட்டார். ஏ.ஆர் ரகுமான் சாரிடம் ரேவதி கேட்டார். அவரும் உடனே ஒப்புக்கொண்டார்.  இந்தப்படத்தை தேர்ந்தெடுக்க காரணம். சின்ன பட்ஜெட்ல வித்தியாசமான படமா இருக்கணும். அதே சமயம் நல்ல கதையா இருக்கணும்னு நினைச்சேன். சென்னையில் ஆரம்பிச்சு கன்னியாகுமரி வரைக்கும் படப்பிடிப்பு குறிப்பிட்ட டைம்ல எடுத்து முடிச்சோம். ஹரி, அக்ஷிதா , நிவாஸ் ஆதித்தன், டாக்டர் வித்யா எல்லாரும் நல்லா ஒத்துழைப்பு கொடுத்தாங்க. இந்தப்படம் எடுக்கும் போது ஒரே விசயத்தை தான் நினைத்தேன். இந்தப்படத்தைப் பற்றி எப்போது நினைத்தாலும் மகிழ்வான நினைவாக இருக்க வேண்டும் என்று. அது அப்படியே நடந்துள்ளது."என்றார்

படத்தின் பாடல்களை  பத்திரிகையாளர்கள், தேவிமணி, திரைநீதி செல்வம், கவிதா ஆகியோர்  வெளியீட்டார்கள். 

மேலும் இப்படத்தின் பாடல் ப்ரோமோ மற்றும் டீசரை  இயக்குநர் மணிரத்னம், இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் வெளியீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment