Featured post

இந்த தீபாவளியில் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்திற்காக இந்தியா ஒளிர்கிறது!

 *இந்த தீபாவளியில் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்திற்காக இந்தியா ஒளிர்கிறது!* இந்தியா மற்றும் உலகம்...

Saturday, 15 June 2019

தயாரிப்பாளரானார் நடிகை சஞ்சனாசிங்





தமிழ் திரையுலகில் ரேணிகுண்டா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை  சஞ்சனா சிங். தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி களில் நடித்தும் வருபவர். 

சமீபத்தில் இவர் பங்கேற்ற தொலைக்காட்சி கிராமத்தில் ஒரு நாள் நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது.  தமிழ் மற்றும் தெலுங்கு, இந்திப்படங்களிலும் நடித்துவரும் சஞ்சனாசிங் தயாரிப்பாளராகவேண்டும் என்கிற முயற்சியில் தற்பொழுது  முதற்கட்டமாக ஆல்பம் ஒன்றை தயாரித்திருக்கிறார். 

சிங்கப்பூர், மற்றும் மும்பையில் படமாக்கப்பட்ட இந்த ஆல்பம் புதுமையான வகையில் படமாக்கப்பட்டிருக்கிறதாம். 

மும்பையில் பிரபல தொலைக்காட்சி நட்சத்திரங்கள் சிருஷ்டி மற்றும் ரோகித் சுஷாந்தி 
நடித்திருக்கிறார்கள்.

மற்றும் பிரபல DJ   பஞ்சோ குவாபோ        வும் நடித்திருக்கிறார்.


பஞ்சாபி பாடகர்  நவீந்தர் சிங்
பாடல்பாடியதோடு நடிக்கவும் செய்திருக்கிறார். 

நடன இயக்குனர் சஞ்சய்குமார் 
இயக்கியிருக்கிறார்.


விரைவில் வெகு சிறப்பாக இந்த ஆல்பம் வெளியீட்டை நடத்த திட்டமிட்டிருக்கும் சஞ்சனா சிங் விரைவில் திரைப்படங்கள் தயாரிக்க இருக்கிறார்.

No comments:

Post a Comment