Featured post

Delhi Sharks Clinch Title !!!!

Delhi Sharks Clinch Title !!!!   Delhi Sharks emerged victorious at the DAVe BABA VIDYALAYA Tamil Nadu Open Trios Tenpin Bowling Tournament ...

Wednesday, 12 June 2019

சின்னத்திரை நடிகர் சங்கம் நடத்தும் மாபெரும் நட்சத்திரக் கலை விழா மலேசியாவில் நடக்கிறது.

இதை முன்னிட்டு சின்னத்திரை நடிகர் சங்கத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு விஜய் பார்க் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.


சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவர் அ .ரவிவர்மா பத்திரிகையாளர்களிடம் பேசும்போது

" எங்கள் சின்னத்திரை நடிகர் சங்கம் மறைந்த நடிகர் எஸ்.என்.வசந்த்முயற்சியால் 2003-ஆம்  ஆண்டு  தொடங்கப்பட்டது இத்தனை ஆண்டு காலம் சங்கம்இயங்கிக் கொண்டிருந்தாலும் சங்கத்திற்கான பெரிய நிதியோ சொந்த கட்டடமோஇல்லாமல் இருந்தது .அந்தக் குறையைப் போக்கும் வகையில் எங்கள் சங்கத்தின்சார்பில் சின்னத்திரை நடிகர் சங்க நலனுக்காக ஆகஸ்ட் 17 இல் மலேசியாவில்மாபெரும் சின்னத்திரை நட்சத்திரங்களின் கலை விழா நடைபெற உள்ளது.

அதாவது 17.8. 2019 சனிக்கிழமையன்று மலேசியாவில் ஷா அலாம் -சிலாங்கர் -மெலாவாட்டி அரங்கத்தில் இந்த கலை விழா நடைபெற உள்ளது. இந்த கலைவிழாவைடிவைன் மீடியா நெட்வொர்க் நிறுவனத்தாரின் முன்னெடுப்பில் நடைபெறஉள்ளது.மலேசியாவில் நடந்த எந்த நட்சத்திர கலை விழாவுமே சோடை போனதில்லை.அதேபோல் இந்த கலை விழாவும் பிரமாண்டமான அளவில் வெற்றிகரமாகநடைபெறும்.ரசிகர்களின் அபிமானம் பெற்ற சின்னத்திரை நட்சத்திரங்கள்மட்டுமல்ல திரையுலக நட்சத்திரங்களும் கலைத்துறை பிரமுகர்களும் இதில்பங்கேற்க இருக்கிறார்கள். கண் கவர் மேடையில் சீரிய அரங்குகளுடன் இசையும்நடனமும்சிறு நாடகங்களுமாக பிரபல சின்னத்திரை கலைஞர்கள் உங்களை மகிழ்விக்கவருகிறார்கள்.விழாவில் திரையுலகக் கலைஞர்களும் பங்கேற்பதாக
உறுதியளித்துள்ளார்கள். முதலில் நடிகர் விஜய் சேதுபதி வருவதை உறுதி
செய்துள்ளார். அனைவரின் ஒத்துழைப்போடும் விழா சிறப்பாகநடைபெறும்.''இவ்வாறு அவர் பேசினார் .

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர்  நாசர் பேசும்போது
"உண்மையிலேயே சொல்ல வேண்டுமென்றால் எனது ஆதி சங்கம் இந்தச்சங்கம்தான்.
நான் நடிகனாக என் நடிப்பு வெளிப்பட்டது சின்னத்திரையில்தான்.அப்போதிருந்த
ஒரே சேனல் தூர் தர்ஷன்தான்.அதில் 13 எபிசோட் தொடர்களில்நடித்தேன்.'பனங்காடு 'என்கிற டெலி பிலிமில் நடித்தேன் .பிறகு கலைஞரின்'தென்பாண்டி சிங்கம்' வரை நடித்திருக்கிறேன் .

எனக்கு கற்றுக்கொடுத்த ஆசான்கள் சொன்னது நடிப்பில் சின்னத்திரை என்றோபெரியதிரை என்றோ பாகுபாடு காட்டக் கூடாது என்பதுதான்.எதில் இருந்தாலும்நடிப்பு ஒன்றுதான். நான் அண்மையில் லண்டனில் நடைபெற்ற உலக நாடக விழாவில்
ஒரு மணிநேர நாடகத்தில் நடித்து வந்தேன் .கார்த்திக் ராஜாவின் 'பட்டணத்தில் பூதம்' நாடகத்தில் கூட நான் நடித்தேன். நடிப்பு என்கிற போது
நான் எந்த பாகுபாடும் காட்டுவதில்லை. இந்த கலை விழாவில் நான் என் சொந்த செலவில் வந்து பங்கேற்பேன் என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் "என்று கூறி நாசர் வாழ்த்தினார் .


இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் செயலாளர் ஆடுகளம் நரேன், உப தலைவர் இயக்குநர் மனோபாலா , வெங்கட் ,நடிகர் சின்னிஜெயந்த் ,சின்னத்திரை நடிகர்கள் தீபக் ,குறிஞ்சி , திரைப்படநடிகர்கள் ஸ்ரீமன்,சௌந்தர ராஜா , விடியல் சேகர் ஆகியோரும் கலந்து கொண்டு
விழாக்குழுவினரை வாழ்த்தினார்கள். .

மலேசியாவில் இந்தக் கலை விழாவை முன்னின்று அமைத்து நடத்தும் அமைப்பாளர்களான டத்தோ டாக்டர் சுகுமாரன் ,திருமதி ஷீலா சுகுமாரன் ,டிவைன் மீடியா நெட்வொர்க்கைச்  சேர்ந்த மலேசியா பாலு ,திருச்சிற்றம்பலம்,அம்சராஜ் ஆகியோரும் பேசினார்கள் .

நடிகர் சங்கத்தின் சார்பில் நாசர் தலைமையில் வந்த ஒரு அணியினரும் இன்னொரு அணியின் சார்பில் ஐசரி கணேஷ் ,குட்டி பத்மினி மற்றும் பலரும் கலந்து கொண்டு இந்த சின்னத்திரை நட்சத்திரக் கலை விழா குழுவினரின் முயற்சி வெற்றி பெற வாழ்த்தினார்கள். 

No comments:

Post a Comment