Featured post

VAYUPUTRA: Not just a film, but a sacred spectacle.

 *VAYUPUTRA: Not just a film, but a sacred spectacle.* *A Devotional 3D Animation Epic Spectacle for Dussehra 2026* Rooted deeply in our his...

Friday, 7 June 2019

பணச்செல்லாமையின் போது நடந்த உண்மைச்சம்பவங்களை சொல்லும் “ மோசடி “


              
JCS மூவீஸ் என்ற பட நிறுவனம் தயாரித்திருக்கும் படம் “ மோசடி “
இந்த படத்தில் விஜூ நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பல்லவி டோரா நடித்துள்ளார். மற்றும் அஜெய்குமார், N.C.B.விஜயன், வெங்கடாச்சலம், நீலு சுகுமாரன், O.S.சரவணன், மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.



ஒளிப்பதிவு        -         R.மணிகண்டன்
இசை                     -         ஷாஜகான்
பாடல்கள்             –          மணிஅமுதவன், K.ஜெகதீசன்
எடிட்டிங்                      S.M.V.சுப்பு, கோபி ரா நாத்
நடனம்                  -         விமல், பாலா
தயாரிப்பு             -        JCS மூவீஸ்
கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் - K.ஜெகதீசன்

இது முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படம்.
கடந்த 2016 ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி இரவு 8 மணியளவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது. அதை தொடர்ந்து பெரும் புள்ளிகள் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை எப்படி இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றினார்கள், அதனால் மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்கள், இந்த அறிவிப்பை பயன்படுத்தி எப்படி குறுக்கு வழியில் மோசடி செய்தார்கள், இந்த அறிவிப்பு சரியா? தவறா? என்பதை கிரைம் மற்றும் திரில்லருடன் கமர்ஷியல் கலந்து உருவாக்கி உள்ளேன் என்கிறார் இயக்குனர் K.ஜெகதீசன். 




No comments:

Post a Comment