Featured post

HOTSTAR SPECIALS ‘LBW – LOVE BEYOND WICKET’, STARRING VIKRANTH, TO LAUNCH ON JIOHOTSTAR ON JANUARY 1, 2026

 HOTSTAR SPECIALS ‘LBW – LOVE BEYOND WICKET’, STARRING VIKRANTH, TO LAUNCH ON JIOHOTSTAR ON JANUARY 1, 2026  JioHotstar releases the launch ...

Friday, 7 June 2019

இந்திய கிரிக்கெட் அணியை உற்சாகப்படுத்த ஒரு வீடியோ ஆல்பம்!




 



 
இந்திய கிரிக்கெட் அணியை உற்சாகப்படுத்த ஒரு வீடியோ ஆல்பம் உருவாகி இருக்கிறது. அதன் பெயர் '3 cheers'..இதற்கு அஷ்வமித்ரா இசையமைத்துள்ளார்.
 அவரதுமகன் ஸ்ரீமன் ரோஷன் பாடலைப் பாடி உள்ளார். ஸ்ரீமன் 'காஞ்சனா 2' படத்தில் 'மொட மொடவென' என்ற பாடலைப் பாடி பரவலான புகழ் பெற்றவர்.அதுமட்டுமல்ல அவருக்கு கிரிக்கெட் மீது அதீத ஆர்வம் உண்டு.இதை உணர்ந்த அவரது தந்தை அவரை இந்த பாடலைப் பாட வைத்திருக்கிறார். பாடலை எழுதியிருப்பவர் ஜெயந்தி .ஒளிப்பதிவு ஜே.கே.கார்த்திக் .க்ளாஸி டோன்ஸ் ஆடியோ சார்பில் தயாரிக்கப் பட்டுள்ளது இந்த வீடியோ ஆல்பம்.

 இந்தியா உலகக்கோப்பையை ஏற்கெனவே இரண்டு முறை வென்றது அனைவருக்கும் தெரியும் இந்த ஆல்பம் இந்திய அணி மீண்டும் 'உலகக் கோப்பை 3 'ஐ வெல்வதற்கு வீரர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்தியக் கிரிக்கெட் வீரர்களுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

 இந்த ஆல்பத்தை இயக்குநர் வெங்கட் பிரபு, ட்விட்டரில் வெளியிட்டார்.

 கிரிக்கெட்டை மையமாக வைத்து  'சென்னை 28 ' படங்கள் எடுத்த அவர் இந்த ஆல்பத்தை வெளியிடுவது மிகவும் பொருத்தமானதாகும்.

No comments:

Post a Comment