Featured post

Deep Brain Stimulation Performed to Alleviate Symptoms in a

 Deep Brain Stimulation Performed to Alleviate Symptoms in a Parkinson’s Patient In a first, Kauvery Hospital, Radial Road, performed a Deep...

Wednesday 10 July 2019

செஞ்சூரி இண்டெர்நேஷனல் பிலிம்ஸ் வழங்கும் திரிஷாவின் கர்ஜனை.



நடிகைகள் தனி ஆவர்த்தனம் செய்யும் படங்களும் தமிழ்சினிமாவில் கவனிக்கப்படும் விசயமாக மாறிவருவது ஆரோக்கியமான பாய்ச்சல். தற்போது திரிஷா நடிப்பில் இயக்குநர் சுந்தர்பாலு இயக்கிய கர்ஜனை படம் கம்பீரமாக தயாராகி உள்ளது. ஜோன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை SDC பிக்சர்ஸ் வெளியீடுகிறது. அம்ரீஸ் இசை அமைக்க சிட்டிபாபு.கே ஒளிப்பதிவு செய்கிறார். சண்டைப்பயிற்சியை சுப்ரீம் சுந்தரும், நடனத்தை நோபால் அவர்களும் அமைத்துள்ளனர். விவேகா, கருணாகரன், சொற்போ பாடல்களை எழுத சரவணன் ஆர்ட் டைரக்டராகப் பணிபுரிந்துள்ளார்.

தமிழ்சினிமாவில் தனது திறமையான நடிப்பால் பதினைந்து ஆண்டுகளாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் நடிகை திரிஷா. அவர் கதையின் நாயகியாக நடித்துள்ளதால் கர்ஜனை எதிர்பார்ப்புள்ள படமாகியுள்ளது. இப்படத்தில் திரிஷாவோடு வம்சி கிருஷ்ணா, வடிவுக்கரசி, ஸ்ரீரஞ்சனி, தவசி, அமித்பார்கவ், சாமிநாதன், மதுரை முத்து, மதுமிதா உள்பட இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 

படம் குறித்து இயக்குநர் சுந்தர் பாலு கூறியதாவது,


"செய்யாத தவறுக்கான பழி நம்மீது விழுந்தால் நமக்கு கோபம் வருமல்லவா. அந்தக் கோபம் தான் கர்ஜனை. செய்யாத தப்பிற்கு திரிஷாவின் காதலர் மேல் பழி வர அவர் ஒரு பிரச்சனையில் மாட்டுகிறார். அதில் இருந்து அவரை மீட்டு வரப்போராடும் திரிஷா அந்தப் பிரச்சனையில் ஒரு இழப்பைச் சந்திக்கிறார். பின் கர்ஜித்து அவர் வில்லன் கூட்டத்தை பழிக்குப்பழி வாங்குவது தான் படத்தின் சாராம்சம். பெரிய ஹீரோக்கள் பெரிய இயக்குநர்கள் படங்களில் நடித்து வரும் திரிஷா என் படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததிற்கு காரணம் படத்தின் கதைதான். செய்யாத தவற்றால் ஒரு இழப்பைச் சந்திக்கும் அவர் பழிக்குபழி வாங்குவதிலும் ஒரு நியாயம் இருக்கும் விதமாக கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆக்‌ஷன் காட்சிகளில் தன்னை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக நினைத்தே திரிஷா நடித்துள்ளார். நிச்சயம் திரிஷா கரியரில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். படமும் அனைவருக்கும் பிடிக்கும்" என்றார்.

No comments:

Post a Comment