Featured post

Friends Magic Films முதல் முறையாக தயாரிக்கும் production No 1 .

 Friends Magic Films முதல் முறையாக தயாரிக்கும் production No 1 . திரைப்பட கல்லூரி மாணவரும் இயக்குனருமான திரு  N.L.Sri இயக்கும் இரண்டாவது படம...

Tuesday, 6 August 2019

ஜெயம் ரவியின் கணினியில் இருந்து


நான் நடிக்க ஆரம்பித்தபோதிலிருந்தே  என்னைப் பற்றிய நேர்மையான, தூய்மையான பிம்பம் இருப்பதற்கான தீவிர முயற்சிகளை எடுத்துவருகிறேன். அதனால்தான் இதுவரை நான் எந்தவிதமான சர்ச்சைகளிலும் சிக்கவில்லை. என்னுடைய எண்ணங்களும் நிலைப்பாடுகளும் நான் ஏற்றிருக்கும் கற்பனைப் பாத்திரங்கள் மூலம் வெளிப்பட்டிருக்குமேயன்றி, எல்லைகளைத் தாண்டியவையாக ஒருபோதும் இருந்ததில்லை. எல்லோரிடத்திலும் இனிமையாகவும், புரிதலோடும் பழகும் நண்பனாகவே இருந்துவருகிறேன். எல்லோராலும் விரும்பப்படும் பரஸ்பரத் தோழனாகவே திரையுலகில் வலம்வருகிறேன். நான் நடித்து விரைவில் வெளியாகவிருக்கும், ‘கோமாளி’ திரைப்படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்த ரசிகர்கள் அளித்த பேராதரவினால் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். வெளியாவதற்கு முன்னரே இந்தப் படம் ஒரு முழு நீள, மகிழ்ச்சி ததும்பும், பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த குடும்பப் படம் என்ற பெயரைத் தட்டிச்சென்றிருக்கிறது.  இந்த முன்னோட்டத்துக்கு  மாபெரும் வரவேற்பைத் தந்த எனது ரசிகர்களுக்கும், என்னுடன் நடித்த நடிகர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இருந்தாலும் அந்த முன்னோட்டத்தில் மரியாதைக்குரிய ரஜினி சார் தொடர்பான  குறிப்பிட்ட ஓர் அம்சம், தலைவரின் சில ரசிகர்ளின் உணர்வுகளை துரதிர்ஷ்டவசமாகக் காயப்படுத்திவிட்டது.  அந்த விஷயம் நேர்மறையாகச் சித்தரிப்பதற்காகவே சேர்க்கப்பட்டிருந்தது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அவரது ரசிகர்களைப் போலவே, அவரது அரசியல் பிரவேசப் பயணத்தை மிக ஆவலுடனும், எதிர்பார்ப்புடனும், ரஜினி சாரின் அதி தீவிர ரசிகன் என்ற முறையில் காணக் காத்திருக்கிறேன். நாங்கள் அனைவரும் அவரது திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள். அவரது நடிப்பும் ஸ்டைலும் எங்கள் இயல்பிலேயே ஊறிப்போயிருக்கும் தவிர்க்க இயலாத விஷயங்கள் ஆகும். அப்படி இருக்கும்போது அவரையோ அவரது ரசிகர்களையோ எந்த விதத்திலும் அவமதிக்கும் எண்ணம் துளியும் எங்களுக்குக் கிடையாது.  முன்னெப்போதைக் காட்டிலும் அவர் மேல் கூடுதல் பாசம் செலுத்திய தருணம், அவர் ‘கோமாளி’ பத்தின் முன்னோட்டத்தைப் பார்த்துவிட்டு எங்கள் குழுவை மனமாரப் பாராட்டியபோது ஏற்பட்டது. எங்களது குழுவின் படைப்பாற்றல் திறனையும், அலாதியான கருத்தாக்கலையும் மனமாரப் பாராட்டினார். இருந்தபோதும்,  எந்த விதமான  உள் நோக்கமும் இன்றி அமைக்கப்பட்டிருக்கும் ஒரு காட்சியால் அவரது  ரசிகர்களில் ஒரு சிலர் கசப்புக்கு ஆளாகி, எதிர்மறைப் பின்னூட்டங்கள் இட நேர்ந்த காரணத்தால், அந்தப் பகுதியைப் படத்தில் இருந்து நீக்க முடிவுசெய்திருக்கிறோம்.

15.8.2019 அன்று திரையரங்குகளில் கோமாளியாக உங்களைச் சந்திக்கும் தருணத்தை மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
நன்றி. வணக்கம்.

No comments:

Post a Comment