Featured post

Ram Charan Will Win a National Award for Peddi, and Audiences Will Be Amazed: Kannada Superstar Shiva Rajkumar

 Ram Charan Will Win a National Award for Peddi, and Audiences Will Be Amazed: Kannada Superstar Shiva Rajkumar* Mega Power Star Ram Charan’...

Tuesday, 19 November 2019

100 நிமிட கண்கவர் கிராபிக்ஸ் காட்சிகளுடன் ஜெய் நடிக்கும் பிரேக்கிங் நியூஸ்



ஜெய் நடிக்கும் 'பிரேக்கிங் நியூஸ்' படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்ததிலிருந்தே, படத்தலைப்பைப் போலவே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்குக் காரணம் சூப்பர் ஹீரோவைப் பற்றிய படம் என்பது மட்டுமல்ல, பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமான முறையில் படம் தயாராவதும்தான். ஈடு இணையற்ற வகையில் காட்சியமைப்புகள் அமைய வேண்டும் என்பதற்காக, ஒட்டு மொத்த படக்குழுவும் மிகக் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இதன் பலன்தான் சர்வதேச தரத்தில் அமைந்திருக்கும், நூறு நிமிட கண்கவர் கிராபிக்ஸ் காட்சிகள்.


எந்தவொரு கடினமான விஷயத்தையும் சாத்தியமாக்கும் தயாரிப்பாளர் திருக்கடல் உதயம், விஷுவல் விருந்தாகவே பிரேக்கிங் நியுஸ் படத்தை உருவாக்கியிருக்கிறார். வெங்கட் பிரபு-சரண் நடித்த ஞாபகம் வருதே, விஜய் வசந்த் நடித்த ஜிகினா ஆகிய படங்களைத் தயாரித்தவர் திருக்கடல் உதயம். விஷுவல் எபக்ட்ஸ் மேற்பார்வையாளராக ஏராளமான அனுபவம் பெற்ற ஆன்ட்ரூ பாண்டியன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இயக்கம் மட்டுமின்றி கதை, திரைக்கதை மற்றும் வசனம் ஆகிய பொறுப்புகளையும் இவரே ஏற்றிருக்கிறார்.


முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய செய்தி என்னவென்றால், 'பிரேக்கிங் நியூஸ்' வழக்கமான கிராபிக்ஸ் காட்சிகள் கொண்ட படமல்ல. நேரடியாகச் சென்று நிஜமான தளங்களில் படப்பிடிப்பை நடத்தி, அவற்றுடன் பிரம்மாண்டமான அரங்குகளையும் அமைத்து படப்பிடிப்பு நடத்தி உருவாக்கப்பட்ட இதுவரை பார்த்திராத விஷுவல் விருந்தளிக்கும் படம்.


கதாநாயகியாக பானு நடிக்க, ஸ்டைலான அதிரடி வேடத்தில் தேவ் ஹில் மற்றும் ராகுல் தேவ் நடித்திருக்கின்றனர். ஜெயப்பிரிகாஷ், கரு.பழனியப்பன், இந்திரஜா, மானஸி, மோகன்ராம், பி.எல்.தேனப்பன், மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். பாலிவுட்டில் வெகுவாக பாராட்டப்படும் ஜானி லால் ஒளிப்பதிவு செய்ய, விஷால் பீட்டர் இசையமைக்கிறார். ஆன்டனி படத்தொகுப்பை கவனிக்க, ஸ்டன்னர் சாம் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். ராதிகா நடனக் காட்சிகளை அமைக்க, கலை இயக்குநராகப் பணியற்றுகிறார் என்.எம்.மகேஷ். விஷுவல் எபக்ட்ஸ் தொழில் நுட்பக் குழுவுக்கு மேற்பார்வையாளராகப் பொறுப்பேற்றிருக்கிறார் தினேஷ் குமார்.

No comments:

Post a Comment