Featured post

Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look

 "Manidhargal : A Night of Twists Begins With a Powerful First Look" "Debut Director Raam indhra’s 'Manidhargal' Grab...

Tuesday, 5 May 2020

செய்தி வெளியீடு


                              செய்தி வெளியீடு
                                           
வேலம்மாள் வித்யாலயாவில் இணையம் வழி இலவச செஸ் வகுப்புகள் நடைபெற இருக்கிறது.

வேலம்மாள் வித்யாலயாவில் இணையம் வழி நேரடி செஸ் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



கொரானோ வைரஸ் பரவலைத் தடுக்க உலகெங்கும் ஊரடங்கு உத்தரவிட நிலையில், மக்கள் வீடுகளில் அடைப்பட்டுள்ளனர். இந்நிலையில், மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வகுப்புகளில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வருகின்றனர்.

மானவர்களுக்குப் பாடம், பயிற்சி இவை தவிர, அவ்வப்போது ஓவியப் போட்டி, மாறுவேடப் போட்டி என ஆன்லைன் மூலம் உற்சாகப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், செஸ் விளையாட்டில் எதிர்காலத்திற்கான கிராண்ட் மாஸ்டரை உருவாக்கும் முயற்சியில் வேலம்மாள் வித்யாலயா பள்ளி முனைந்துள்ளது. இதற்காக ஆன்லைன் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற சர்வதேச செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆர்.பி.ரமேஷ் அவர்கள் இந்த வகுப்புகளை நேரடியாக நடத்தவுள்ளார்.
இவர் 10 கிராண்ட் மாஸ்டர்களையும், 20 சர்வதேச மாஸ்டர்களையும் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழும்மத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்த ஆன்லைன் நேரடி வகுப்புகள்  முற்றிலும் இலவசமாகப் பட்டுள்ளது.
இதற்கான ஆன்லைன் பதிவு மே 6ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் சேர விரும்புவோர் www.velamalnexus.com என்னும் இணையதளம் வழியாக உள்நுழைந்து பதிவு செய்து கொள்ளலாம்.

இந்தியாவின் தலைசிறந்த செஸ் பயிற்சியாளரின் வகுப்பில் பங்குபெறும் இந்தச் சிறந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மாணவர்களே நீங்கள் வீட்டில் இருந்தே செஸ் விளையாட்டைக் கற்றுக்கொண்டு ஒரு சிறந்த மாஸ்டராக வர வேலம்மாள் நெக்ஸஸ் கல்விக் குழுமம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு 8056063519 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளவும்.

No comments:

Post a Comment