Featured post

*A.R. Rahman, Adithya RK and Mashook Rahman Unite for Tamil first track’ O Kadhale’ from Aanand L Rai’s ‘Tere Ishk Mein’, Backed by Bhushan Kumar

 *A.R. Rahman, Adithya RK and Mashook Rahman Unite for Tamil first track’ O Kadhale’ from Aanand L Rai’s ‘Tere Ishk Mein’, Backed by Bhushan...

Wednesday, 6 May 2020

மதுரை மீனாட்சி அம்மன் தெய்வீக

மதுரை மீனாட்சி அம்மன் தெய்வீக திருக்கல்யாண உற்சவத்தை 
உங்கள் வீட்டிற்கே கொண்டு வரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
நாளை காலை 9 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது


தொற்று நோய் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டில் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் அவர்களுக்கு நேர்மறை சிந்தனை மற்றும் உற்சாகத்தை அளிக்கும் விதமாக பல்வேறு  பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலாச்சார ரீதியிலான பல்வேறு நிகழ்ச்சிகளை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி வழங்கி வருகிறது. இந்நிலையில் அவர்களை மகிழ்விக்கும் விதமாக மதுரை மீனாட்சி அம்மன் தெய்வீக திருக்கல்யாண நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது.


மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுந்தரேஸ்வரர் - மீனாட்சி அம்மன் தெய்வீக திருக்கல்யாண நிகழ்ச்சியை தங்கள் பார்வையாளர்களுக்காக பிரத்யேகமாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது. புகழ்பெற்ற இந்த திருக்கல்யாண நிகழ்ச்சி முழுவதும் நாளை திங்கட்கிழமை காலை 9 மணி முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.





இந்த புகழ்பெற்ற திருக்கல்யாணமானது மதுரையில் நடைபெறும் 2 வார சித்திரை திருவிழாவின் ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும். ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு அவர்களை மகிழ்விக்கும் விதமாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி இந்நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது. பக்தர்களும் பார்வையாளர்களும் திருக்கல்யாண உற்சவத்தை முழுமையாக கண்டுகளிக்கலாம்.

இந்த நிகழ்ச்சி குறித்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் வர்த்தக தலைவர் அனூப் சந்திரசேகரன் கூறுகையில், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி எப்போதும் நம்பிக்கை மற்றும் கொண்டாட்டங்களின் அடையாளமாக இருந்து வருகிறது. ஊரடங்கு துவங்கப்பட்ட நாளில் இருந்து எங்கள் பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக நாங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறோம். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். நோய் தொற்று காரணமாக இந்த ஆண்டு அவர்களால் கலந்து கொள்ள இயலவில்லை. இந்த நிலையில் எங்கள் பார்வையாளர்களை மகிழ்விக்கும் விதமாக இந்த முக்கிய கலாச்சார நிகழ்ச்சியை பார்வையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் இந்நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருக்கிறோம். இந்த புனித நிகழ்ச்சியை நாங்கள் ஒளிபரப்புவதன் மூலம் பார்வையாளர்களுடனான எங்கள் உறவு மேலும் வலுப்பெறுகிறது. ஊரடங்கு நேரத்தில் இந்த தெய்வீக நிகழ்ச்சி எங்கள் பார்வையாளர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்தார்.
வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்து மீனாட்சி திருக்கல்யாண உற்சவத்தை நாளை காலை 9 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் பார்த்து மகிழுங்கள். இந்த நிகழ்ச்சியை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி பிரத்யேகமாக ஒளிபரப்புகிறது.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி அனைத்து முன்னணி கேபிள் நெட்வொர்க் மற்றும் டிடிஎச் தளங்களான சன் டைரக்ட்டில் சேனல் எண்.128, டாடா ஸ்கையில் சேனல் எண்.1555, ஏர்டெல்லில் சேனல் எண்.763, டிஷ் டிவியில் சேனல் எண்.1808 மற்றும் வீடியோகான் டி2எச்சில் சேனல் எண்.553-ல் ஒளிபரப்பாகிறது.

No comments:

Post a Comment