Featured post

இன் அடுத்த தமிழ் ஓரிஜினல் சீரிஸ், நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய

இன் அடுத்த தமிழ் ஓரிஜினல் சீரிஸ், நடிகர் சரவணன், நம்ரிதா MV முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும், ‘சட்டமும் நீதியும்’ டிரெய்லர் வெளியானது !!  ...

Wednesday, 13 May 2020

இந்திய பொறியாளர்கள் கழக திருச்சி வட்டத்தின் சார்பில் இணையவழி

இந்திய பொறியாளர்கள் கழக திருச்சி வட்டத்தின் சார்பில் இணையவழி 
கருதரங்கானது மே 12ம் தேதி நடைபெற்றது. இக்கருத்தரங்கில் திருச்சி தேசிய 
தொழிநுட்பக்கழகத்தின் இயக்குனர் டாக்டர். மினி ஷாஜி தாமஸ் அவர்கள் 
பங்கேற்று "கோவிட்-19 எதிர்ப்பில் பொறியியல் கல்லூரிகளின் பங்களிப்பும் 
சிக்கல்களும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

விழாவில் இந்திய பொறியாளர்கள் கழக வட்டச்செயலாளர் பொறியாளர் ஆனந்த் 
அவர்கள் வரவேற்புரையாற்றினார். முன்னதாக வட்டத் தலைவர் டாக்டர் குமரேசன் 
அவர்கள் முதன்மையுரையும், வட்ட இணை செயலாளர் டாக்டர் சிவகுமரன் அவர்கள் பேச்சாளர் குறித்த அறிமுக உரையையும் வழங்கினார்.








கல்லூரி இயக்குனர் டாக்டர் மினி ஷாஜி தாமஸ் அவர்கள் கல்வி நிலையங்கள், 
குறிப்பாக உண்டு உறைவிடக் கல்லூரிகளுக்கு covid 19 மூலம் ஏற்படும் 
இன்னல்களை விவரித்தார். தற்போதைய சூழ்நிலையில் மாணவர்கள் மற்றும் 
பேராசிரியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிசெய்தல், 
இணையவழியில் பாடங்களைப் பயிற்றுவித்தல், இறுதியாண்டு மாணவர்களின் பணி 

மற்றும் மேற்படிப்பு பாதிக்காத வண்ணம் தகுந்த நேரத்தில் தேர்வுகளை நடத்தி 
முடிவுகளை அறிவித்தல், ஆராய்ச்சி மற்றும் பிற பயிற்சிகள் தடையின்றி 
நடத்தல், 2020-21 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை, COVID-19 உடன் 
பாடங்களை நடத்தல், கல்வித்தொகை மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் 
மாணவர்களை ஆதரித்தல், கட்டமைப்பு மேம்பாடு மற்றும் புதிய ஆசிரியர்களின் 
சேர்க்கை, அலுவலகப் பணிகள், வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கை, முன்னாள் 
மாணவர்களின் ஈடுபாடு மற்றும் பங்களிப்பு போன்ற பணிகள் பொறியியல் 
கல்லூரிகளுக்குப் பெரும் சவாலாக உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், 
மாணவர்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் இறுதியாண்டு 
மாணவர்களுக்கு இணையவழித் தேர்வுகள், ஆராய்ச்சி மாணவர்களுக்கு இணையவழியில் 

வாய்மொழித் தேர்வு ஆகியவை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 
COVID-19 க்குப் பின் வரும் சூழ்நிலையைக் கையாளத் திட்டங்கள் 
வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மேலும் அவர் COVID-19 
சூழ்நிலையில் திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் முன்னாள் 
மாணவர்களின் பங்களிப்புகளைக் குறித்தும் பிற தேசிய 
தொழில்நுட்பக்கழகங்களின் பங்களிப்பு குறித்தும் அவர் உரையாற்றினார்.

பின்னர் முன்னாள் வட்ட தலைவர் பொறியாளர் செல்வராஜ் அவர்கள் உரையின் 
சுருக்கத்தைக் கூறினார்; வட்டச்செயலாளர் ஆனந்த் அவர்கள் 
நன்றியுரையாற்றினார். Webex மூலம் நடைபெற்ற இக்கருத்தரங்கில் சுமார் 100 
பேர் பங்கேற்றனர். இந்திய பொறியாளர்கள் கழக திருச்சி வட்டமானது, சாதாரண 
சூழல் திரும்பும்வரை இதுபோன்ற கருத்தரங்குகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment