Featured post

மே 17 முதல், அமேசான் ப்ரைம்

 மே 17 முதல், அமேசான் ப்ரைம் மற்றும் ஆஹா ஓடிடி தளங்களில், ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம்  “ஹாட் ஸ்பாட்” ஸ்ட்ரீமாகவுள்ளது !!!  சமீபத்தில் பெரும...

Thursday 7 May 2020

பிரதமரின் ஆராய்ச்சிக்கு கூட்டுறவுத் திட்டத்தில்


பிரதமரின் ஆராய்ச்சிக்கு கூட்டுறவுத் திட்டத்தில் (PMRF) திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகம்!

2018-19ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பிரதமரின் ஆராய்ச்சி 
கூட்டுறவுத்திட்டம் (PMRF) இந்தியாவின் தலைசிறந்த ஆராய்ச்சிப்படிப்பு 
மாணவர்களை ஊக்குவிக்கும்பொருட்டும்,அவர்களின் கண்டுபிடிப்புகள் 
மேம்படுத்தும்பொருட்டும் தொடங்கப்பட்டதாகும்.

இத்திட்டமானது IIT, IISER, IISc மற்றும் சில மத்திய பல்கலைக்கழகங்களில் 
மட்டுமே செயல்பட்டு வந்தது. ஆனால் இவ்வாண்டு முதல், கடந்த ஆண்டு தேசிய 
கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலில் (NIRF) முதல் 25 இடங்களில் உள்ள 
கல்லூரிகளும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் கல்லூரிகளின் பட்டியலில் 
இடம்பெற்றுள்ளன.திருச்சி தேசியதொழில்நுட்பக்கழகமானது இப்பட்டியலில் உள்ள ஒரே NIT என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தின்மூலம் ஆண்டுதோறும் கல்லூரியில் 20 மாணவர்கள் 
அனுமதிக்கப்படுவர். இவர்களுக்கு முதல் இரு ஆண்டுகளுக்கு ருபாய் 
எழுபதாயிரம், மூன்றாமாண்டு ருபாய் எழுபத்தைந்தாயிரம் மற்றும் அடுத்த இரு 
ஆண்டுகள் எண்பதாயிரம் ரூபாயானது மாதாந்திர உதவித்தொகையாக வழங்கப்படும். இதுமட்டுமின்றி ஆண்டுதோறும் இரண்டு லட்சம் ரூபாயானது பயணம் மற்றும் இதர எதிர்பாராச் செலவுகளுக்காக வழங்கப்படும்.

கடுமையான தேர்ந்தெடுப்பு முறைகள் மூலம் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் 
மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பொதுவாக கல்வியில் சிறந்து 
விளங்கும் மாணவர்களே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்களுக்கு 
வழங்கப்படும் உதவித்தொகையானது பிற ஆராய்ச்சிப்படிப்பு மாணவர்கள் பெறும் உதவித்தொகையைக்காட்டிலும் இருமடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மாணவர்கள் தேசத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும் வண்ணம் அமைந்துள்ள ஆராய்ச்சித் தலைப்புகளில் பணிபுரிவார்கள். ஆண்டுதோறும் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின்மூலம் இவர்களின் பணியானது ஆய்வு செய்யப்பட்டு, அதனடிப்படையில் உதவித்தொகை வழங்குவது தொடரப்படும்.

இது குறித்து கல்லூரி இயக்குனர் டாக்டர் மினி ஷாஜி தாமஸ் அவர்கள் இது 
கல்லூரிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் எனவும் இதன்மூலம் கல்லூரியின் 
ஆய்வுத்தரம் உயரும் எனவும் கல்லூரியின் தரம் உயரத் துணைபுரிந்த 
பேராசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நன்றி எனக்கூறினார்.

No comments:

Post a Comment