Featured post

Oru Nodi Producers Gift a Car to Director Mani Varman!

 *Oru Nodi Producers Gift a Car to Director Mani Varman!*  "Oru Nodi", a Taut and Gripping Crime-Thriller, released last week is a...

Wednesday 20 May 2020

நடிகர் ஆரி அருஜுனாவின் மாறுவோம் மாற்றுவோம்

நடிகர் ஆரி அருஜுனாவின் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை இலங்கை தமிழர்களுக்கு உதவி..

மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக  நேற்று மே 17 சேலம் தாரமங்கலம் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் 410 குடும்பங்களுக்கு கொரோனா  நிவாரணமாக அரிசி, பருப்பு, உள்ளிட்ட    அத்தியாவசிய மளிகை பொருட்கள்  வழங்கினர்.

இதனை பற்றி மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை நிறுவனர் ஆரி அருஜூனா கூறுகையில்....

மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை துவங்கிய நாள் முதல் இன்றுவரை    இயற்கை, மொழி, கலை போன்ற சமூக சிந்தனையுடன் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் கஜா புயல், ஒக்கி புயல் போன்ற  இயற்கை பேரிடர் காலத்தில் மக்களுடன் மக்களாக தோள்கொடுத்து உதவிக்கரம் நீட்டியுள்ளது.

Click here to watch video: 

இந்த கொரோனா வைரஸ் காரணமாக உலகிலுள்ள அனைத்து துறையினரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அதேபோல் சேலம் மாவட்டத்தின்  தாரமங்கலத்திலுள்ள   நமது தொப்புள் கொடி உறவுகளான  ஈழ தமிழ்களும் 50 நாட்களுக்கு மேலாக எந்த வருமானமும் இன்றி மிகுந்த சிரமப்படுகிறார்கள்  என்று தகவல் அறிந்து அவர்களுக்கு உதவும் பொருட்டு  மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை மற்றும் கனடா வாழ் ஈழத் தமிழர்கள் இணைந்து சுமார் 410 சேலம் தாரமங்கலம் பகுதியை சார்ந்த இலங்கை அகதிகள் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்கள் வழங்கியுள்ளோம்,

மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையுடன் இணைந்து நிவாரண பொருட்கள் வழங்க உதவிய கனடா வாழ் ஈழத்தமிழர்கள் மற்றும் களத்தில் நிவாரண பணிகள் மேற்கொண்ட நாகராஜ் மாரிமுத்து, எஸ் ஆர் எஸ் வேல், வினோத்குமார் .பி, ஓ. எஸ். சுரேஷ், கோகுல், சுரேஷ்குமார், அவர்களுக்கும் சேலம் மாநகர காவல்துறைக்கும் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

சமூகம் சந்தித்து இருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஒருவருக்கொருவர் கரம் நீட்டி கரம் தூக்குவோம்.

இந்த நிவாரண உதவி அரசு சொல்லும் சமூக இடைவெளியுடன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அரசு சொல்லும் அறிவுரைகளைக் கேட்டு சமூக இடைவெளி கடைப்பிடிப்போம் அது நம் ஆரோக்கிய வாழ்விற்கான பாதுகாப்பு, முககவசம் அணிவோம் பாதுகாப்பாக இருப்போம் என்றார்.













No comments:

Post a Comment